search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரன்பட்டினம்  தசரா திருவிழா முன்னேற்பாடுகள் - யூனியன் சேர்மன் அதிகாரிகளுடன் ஆய்வு
    X

    குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழாவையொட்டி யூனியன் சேர்மன் பாலசிங் ஆய்வு செய்த காட்சி.

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் - யூனியன் சேர்மன் அதிகாரிகளுடன் ஆய்வு

    • உட்கட்டமைப்பு பணிகள் குறித்து உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் ஆய்வு மேற்கொண்டார்.
    • கடந்த 2 வருடமாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த ஆண்டு சுமார் 30 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.பக்தர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடம் தற்போது தேர்வு செய்யப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. குலசை கிராமத்தில் உள்ள ரோடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பாக கோவிலில் இருந்து பக்தர்கள் கடற்கரைக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது என பொது மக்கள் மற்றும் பக்தர்கள் புகார் தெரிவித்தனர். எனவே குலசை நகரில் தசரா திருவிழாவிற்கு முன்பாக செய்யப்பட வேண்டிய உட்கட்டமைப்பு பணிகள் குறித்து உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் ஆய்வு மேற்கொண்டார். இதில் கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், உடன்குடி டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவர் மால் ராஜேஷ், கவுன்சிலர் ஜான் பாஸ்கர், குலசை பஞ்சாயத்துதுணைத் தலைவர் கணேசன், தி.மு.க.வை சேர்ந்த பாய்ஸ், ஷேக் முகமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் நிருபர்களிடம் யூனியன் சேர்மன் பாலசிங் கூறியதாவது:-

    கடந்த 2 வருடமாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே இந்த ஆண்டு அதிக அளவு பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக சாலை, குடிநீர், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, பஸ் வசதி, வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகிய பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கோவிலில் இருந்து கடற்கரைக்கு செல்லும் சாலை புதியதாக போட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது பக்தர்களின் வசதிக்காக தற்காலிக பேட்ஜ் ஒர்க் நடத்தப்படும் என தெரிவித்தார்.

    Next Story
    ×