search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Koyambedu Market"

    • குளிர்பதன கிடங்கு கடந்த சில ஆண்டுகளாக உரிய பராமரிப்பு இல்லாமல் செயல்பாட்டில் இல்லை.
    • கூடுதலாக தண்ணீர் இணைப்பு, கழிவுநீர்கால்வாய் சீரமைப்பு பணிகளும் நடைபெற உள்ளன.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பழம், பூ, மளிகை என சுமார் 4 ஆயிரம் கடைகள் உள்ளன. மார்க்கெட்டின் பின்புறம் உள்ள "ஏ" சாலையில் தமிழ்நாடு கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு சார்பில் குளிர்பதன கிடங்கு உள்ளது. விற்பனை ஆகாமல் தேக்கமடையும் காய்கறி மற்றும் பழங்கள் வீணாவதை தடுத்திடும் வகையில் வியாபாரிகள் குறைந்த கட்டணத்தில் அவற்றை இந்த கிடங்கில் தேக்கி வைத்து வந்தனர். ஆனால் இந்த குளிர்பதன கிடங்கு கடந்த சில ஆண்டுகளாக உரிய பராமரிப்பு இல்லாமல் செயல்பாட்டில் இல்லை. இதனால் வியாபாரிகள் பலர் சொந்தமாக குளிர்பதன கிடங்கு அமைத்தும் தனியார் குளிர்பதன கிடங்குகள் மூலமும் பழங்கள் உள்ளிட்ட பொருட்களை பாதுகாத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மார்க்கெட்டில் உள்ள குளிர்பதன கிடங்கை நவீன முறையில் சீரமைத்திட முடிவு செய்யப்பட்டு அதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

    மேலும் மார்க்கெட்டில் கழிவுகளை அகற்றுவது, சுகாதாரம், குடிநீர், மழைநீர் வடிகால், மழைநீர் சேகரிப்பு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பணிகளுக்காக சென்னை ஐ.ஐ.டி. மூலம் விரிவான திட்ட அறிக்கை பெறப்பட்டு உள்ளன. எனவே விரைவில் இதற்கான பணிகள் முடிந்து குளிர்சாதன கிடங்கு செயல்பாட்டுக்கு வரஉள்ளது. மேலும் கூடுதலாக தண்ணீர் இணைப்பு, கழிவுநீர்கால்வாய் சீரமைப்பு பணிகளும் நடைபெற உள்ளன.

    கோயம்பேடு மார்க்கெட்டில் 4 இடங்களில் போர்வெல் அமைத்து அதில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை சுத்திகரித்து மார்க்கெட் வளாகம் முழுவதும் சப்ளை செய்யப் பட்டு வருகிறது. சென்னை குடிநீர் வாரி யத்திற்கு வரி செலுத்தாத காரணத்தால் மார்க்கெட் வளாகத்தில் மெட்ரோ குடிநீர் சப்ளை ஏற்கனவே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சில நாட்களாக பெரிய வெங்காயத்தின் விலை திடீரென அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு, காய்கறி மார்கெட்டுக்கு மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயத்தின் அறுவடை தாமதமானதால் அங்கிருந்து வரும் வெங்காயத்தின் வரத்து கடந்த மாத இறுதியில் திடீரென பாதியாக குறைந்தது.

    இதனால் வெங்காயத்தின் விலை அதிகரிக்க தொடங்கியது. இதனால் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.90 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் வெங்காயத்தின் வரத்து அதிகரித்ததால் அதன் விலை சரிந்து இந்த மாத தொடக்கத்தில் கிலோ ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்து.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெரிய வெங்காயத்தின் விலை திடீரென அதிகரிக்க தொடங்கி உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் பெரிய வெங்காயம் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெளிமார்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.75 வரை வரையிலும் விற்பனை ஆகி வருகிறது.

    வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர். வீடுகள் மற்றும் ஓட்டல்களில் சமையலுக்கு பெரிய வெங்காயத்தை பயன்படுத்துவரை குறைத்து உள்ளனர். இதேபோல் வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.90-க்கும் சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ.110 வரையிலும் விற்கப்படுகிறது.

    மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் மொத்த விற்பனை விலை(கிலோவில்) வருமாறு :- தக்காளி-ரூ.22, பீன்ஸ் - ரூ.70, அவரைக்காய்- ரூ.40, உஜாலா கத்தரிக்காய்-ரூ.17, வெண்டைக்காய்-ரூ.50, ஊட்டி கேரட்-ரூ.30, ஊட்டி பீட்ரூட்-ரூ.40, முள்ளங்கி-ரூ.30, முருங்கைக்காய்-ரூ.70, பன்னீர் பாகற்காய்- ரூ25, புடலங்காய்-ரூ.20, பீர்க்கங்காய்-ரூ.50, முட்டை கோஸ்-ரூ.6 பச்சை மிளகாய்- ரூ30 இஞ்சி- ரூ.100.

    • மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து 45 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது.
    • பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.65 வரையிலும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110வரையிலும் விற்பனை ஆகி வருகிறது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கடந்த சில நாட்களாக வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ130வரையிலும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.85வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

    தினசரி 70டன் வரை விற்பனைக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து திடீரென பாதியாக குறைந்து போனதால் அதன் விலை அதிகரித்தது. அதேபோல் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பெரிய வெங்காயத்தின் அறுவடை தொடர்ந்து தாமதமாகி வருவதால் வெங்காயத்தின் வரத்து குறைந்து அதன் விலை திடீரென 2 மடங்கு வரை உயர்ந்தது.

    இந்நிலையில் கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் அதிகளவில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வர தொடங்கி உள்ளன. இன்று மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து 45 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது.

    இதையடுத்து தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. இன்று மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது. வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.65 வரையிலும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110வரையிலும் விற்பனை ஆகி வருகிறது.

    இதேபோல் பீன்ஸ், அவரைக்காய், கேரட், கத்தரிக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலையும் குறைந்து உள்ளது. மொத்த விற்பனையில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.50-க்கும், அவரைக்காய் ரூ.40-க்கும், ஊட்டி கேரட் ரூ.20-க்கும், உஜாலா கத்தரிக்காய் ரூ.10-க்கும் விற்கப்படுகிறது.

    • காய்கறி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் வியாபாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
    • கழிவறைகளை சுத்தம் செய்து உரிய முறையில் பராமரிப்பு செய்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    போரூர்:

    கோயம்பேடு, காய்கறி மார்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வரும் சில்லரை வியாபாரிகள், மளிகை, காய்கறி கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் என லட்சக்கணக்கானவர்கள் இங்கிருந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடந்த சில நாட்களாகவே பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் ஒரிரு நாட்கள் பெய்த லேசான மழைக்கே கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ஆங்காங்கே மழைநீர் குளம் போல தேங்கி கிடக்கிறது. இதனால் மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிகள், மூட்டை தூக்கி செல்லும் கூலி தொழிலாளர்கள், பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் என அனைவரும் மார்க்கெட் வளாகத்தில் நடந்து செல்ல கூட முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் காய்கறி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் வியாபாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    மார்க்கெட் வளாகத்தில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததே தண்ணீர் தேங்கி கிடப்பதற்கு காரணம் என்று வியாபாரிகள் தரப்பில் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் மழை காலம் தொடங்கி உள்ளதால் மார்க்கெட் வளாகத்தில் தேங்கும் குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்றிடவும், தொற்று நோய் பரவுவதை தடுத்திடும் வகையில் சுகாதாரமான குடிதண்ணீர் கிடைத்திடவும், கழிவறைகளை சுத்தம் செய்து உரிய முறையில் பராமரிப்பு செய்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அங்காடி நிர்வாக குழு அதிகாரிகளுக்கு வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தொடர்ந்து மழை பெய்ததால் அதிகாலை முதல் மார்க்கெட் வளாகம் முழுவதும் வியாபாரிகள் இல்லாமல் வெறிச் சோடி காணப்பட்டது.
    • குறிப்பாக பீன்ஸ், கேரட், கத்திரிக்காய், முட்டை கோஸ் அதிக அளவில் தேங்கியதால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

    போரூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு, விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வருகை பாதியாக குறைந்தது. நள்ளிரவில் விறு விறுப்பாக தொடங்கிய காய்கறி விற்பனை பின்னர் மந்தமாகி போனது. தொடர்ந்து மழை பெய்ததால் அதிகாலை முதல் மார்க்கெட் வளாகம் முழுவதும் வியாபாரிகள் இல்லாமல் வெறிச் சோடி காணப்பட்டது.

    இதன்காரணமாக மார்க்கெட்டில் காய்கறிகள் விற்ப னை பாதியாக குறைந்தது. மூட்டை, மூட்டையாக காய்கறிகள் விற்பனை ஆகாமல் தேங்கியது. குறிப்பாக பீன்ஸ், கேரட், கத்திரிக்காய், முட்டை கோஸ் அதிக அளவில் தேங்கியதால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

    வியாபாரிகள் வருகை குறைந்ததால் கத்தரிக்காய், பீன்ஸ், ஊட்டி கேரட், முட்டை கோஸ், கோவக்காய் ஆகிய பச்சை காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்தன. மொத்த விற்பனையில் உஜாலா கத்தரிக்காய் ஒரு மூட்டை (80கிலோ) ரூ.500-க்கும், ஊட்டி கேரட் ஒரு மூட்டை (80கிலோ) ரூ.600-க்கும், கோவக்காய் ஒரு மூட்டை (55கிலோ) ரூ.400-க்கும், மூட்டை கோஸ் ஒரு மூட்டை (50கிலோ) ரூ.350-க்கும் விற்கப்பட்டது. அதனையும் வாங்கிச்செல்ல வியாபாரிகள் வரவில்லை. ஆனாலும் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கும், பெரிய வெங்காயம் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.58வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.130-க்கும், பெரியவெங்காயம் ரூ.70-க்கும் விற்பனை ஆகி வருகிறது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, கோயம்பேடு சந்தைக்கு இன்று காலை 450க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து இருந்தன. ஆனால் அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால் வியாபாரி கள் வருகை குறைந்தது. வழக்கமாக நடைபெறும் விற்பனையில் 50 சதவீத காய்கறிகள் மட்டுமே விற்று உள்ளது. ஏராளமான காய்கறிகள் மூட்டை, மூட்டையாக தேங்கி கிடக்கிறது. இதனால் கடந்த சிலநாட்களாக உச்சத் தில் இருந்த பீன்ஸ் விலை குறைந்து உள்ளது என்றார்.

    கோயம்பேடு மார்க்கெட் டில் இன்றைய காய்கறி மொத்த விற்பனை விலை விபரம் (கிலோவில்) வருமாறு:-

    உஜாலா கத்தரிக்காய்-ரூ.8, பீன்ஸ்-ரூ.40, அவரைக் காய்-ரூ.45, வெண்டைக்காய்-ரூ.25, வெள்ளரிக்காய்-ரூ.15, பன்னீர் பாகற்காய்-ரூ.30, கோவக்காய்-ரூ.7, ஊட்டி கேரட்-ரூ.15, சுரக்காய்-10, பீட்ரூட்-ரூ.20, முட்டை கோஸ்-ரூ.8, முருங்கைக் காய்-ரூ.80 முள்ளங்கி-ரூ.20, ஊட்டி சவ்சவ்-ரூ.12, நூக்கல் -ரூ.25, புடலங்காய்-ரூ.10, பீர்க்கங்காய்-ரூ.30, குடை மிளகாய்-ரூ.30, இஞ்சி-ரூ.95, பச்சை மிளகாய்-ரூ.40, தக்காளி-ரூ.22, உருளைக் கிழங்கு-ரூ.18.

    • மார்க்கெட் பகுதியில் மழைநீர் கால்வாய் இருந்தும் அதில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக தண்ணீர் தேங்கியதாக தெரிகிறது.
    • பருவமழை தொடங்கி விட்டதால் சந்தை வளாகத்தில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்களை முறையாக தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும்.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பூ, பழம் மற்றும் மளிகை மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன.

    தினந்தோறும் ஆயிரக்கணக்கான சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இங்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர். கோயம்பேடு சந்தை நள்ளிரவு தொடங்கி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

    இந்த நிலையில் மார்க்கெட் வளாகம் ரூ.10 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. எனினும் நேற்று பெய்த ஒரு நாள் மழைக்கே சந்தை வளாகத்தில் ஆங்காங்கே தண்ணீர் குளம் போல தேங்கி வெள்ளக்காடாக மாறியது. இதனால் சந்தைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள், கூலி தொழிலாளர்கள் பலர் நடந்து கூட செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.

    தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மழை தீவிரம் அடைந்தால் கோயம்பேடு சந்தை முழுவதும் தண்ணீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மார்க்கெட் பகுதியில் மழைநீர் கால்வாய் இருந்தும் அதில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக தண்ணீர் தேங்கியதாக தெரிகிறது. 

    மேலும் பூ மார்கெட்டை ஒட்டியுள்ள காலி இடத்தில் தண்ணீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பருவமழை தொடங்கி விட்டதால் சந்தை வளாகத்தில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்களை முறையாக தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும். சந்தை வளாகத்தில் சுகாதாரமான குடிநீர், கழிவறைகளை சுத்தம் செய்து உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என்று அங்காடி நிர்வாக குழு அதிகாரிகளுக்கு மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாராஷ்டிரா மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள வெங்காயத்தின் அறுவடை தொடர்ந்து தாமதமாகி உள்ளது.
    • முதல் ரக நாசிக் வெங்காயம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.64-க்கு விற்கப்படுகிறது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.

    கடந்த மாதம் வரை வெங்காயம் ஒரு கிலோ ரூ.20-க்கு மட்டுமே விற்கப்பட்டது.

    இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள வெங்காயத்தின் அறுவடை தொடர்ந்து தாமதமாகி உள்ளது. மேலும் விவசாயிகளிடம் மிகவும் குறைந்த அளவிலான வெங்காயம் மட்டுமே கையிருப்பில் உள்ளது.

    இதனால் அங்கிருந்து வரும் வெங்காயத்தின் வரத்து திடீரென பாதியாக குறைந்துவிட்டது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே வெங்காயம் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனை கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று அதன் விலை மேலும் அதிகரித்து உள்ளது.

    முதல் ரக நாசிக் வெங்காயம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.64-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் வெளி மார்க்கெட்டுக்கு உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.80 வரை விற்கப்படுகிறது. இதே நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில் வெங்காயத்தின் விலை சதம் அடிக்கும் என்று வெங்காயம் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    • தகவல் அறிந்ததும் கோயம்பேடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
    • கார் எப்படி தீப்பற்றியது என்பது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    ஆயுத பூஜையையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகாலை முதல் பூஜை பொருட்கள், பழங்கள், பூக்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் சேப்பாக்கம், கிருஷ்ணசாமி சாலையை சேர்ந்த பழ வியாபாரியான இளவரசன் (52) என்பவர் தனது காரில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்தார். பின்னர் பழ மார்க்கெட் வளாகத்திற்குள் காரை நிறுத்தி விட்டு அங்குள்ள கடைக்கு பழங்கள் வாங்க சென்றார்.

    அவர் சென்ற சிறிது நேரத்தில் காரில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. பின்னர் கார் முழுவதும் தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பழ மார்க்கெட்டில் இருந்த வியாபாரிகள், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    தகவல் அறிந்ததும் கோயம்பேடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் கார் முழுவதும் எரிந்து சேதமானது. காரின் அருகே மற்ற வாகனங்கள் எதுவும் இல்லாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை. கார் எப்படி தீப்பற்றியது என்பது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவத்தால் கோயம்பேடு மார்க்கெட் பகுதி இன்று அதிகாலை பரபரப்பாக காணப்பட்டது.

    • திண்டிவனம், விழுப்புரம், கிருஷ்ணகிரி ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் பூசணிக்காய் விற்பனைக்கு குவிந்துள்ளது.
    • அவல், பொறி, கடலை, வாழைத்தோரணம், பழங்கள் விற்பனை களைகட்டி உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    போரூர்:

    ஆயுத பூஜை பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று அதிகாலை முதலே கோயம்பேடு மார்கெட்டில் குவிந்த சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்ல குவிந்தனர். இதனால் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

    ஆண்டு தோறும் கோயம்பேடு பூ மார்கெட் வளாகத்தில் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏலம் நடத்தி சிறப்பு சந்தைக்கு அனுமதி கொடுக்கப்படுவது வழக்கம். மெட்ரோ ரெயில் பணி, ஆக்கிரமிப்பு கடைகள், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இந்த ஆண்டு சிறப்பு சந்தை நடத்த ஏலம் நடத்தப்படவில்லை.

    இதையடுத்து சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் பூஜை பொருட்களை வாங்கி சென்றிட வசதியாக மளிகை மார்கெட் வளாகத்தில் கடந்த 18-ந்தேதி அங்காடி நிர்வாக குழு சார்பில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டது.

    இந்த சிறப்பு சந்தையில் 100-க்கும் மேற்பட்ட வெளி வியாபாரிகள் அவல், பொரி, கடலை, பூசணிக்காய், தேங்காய், வெற்றிலை உள்ளிட்ட பூஜை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    திண்டிவனம், விழுப்புரம், கிருஷ்ணகிரி ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் பூசணிக்காய் விற்பனைக்கு குவிந்துள்ளது.

    அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் படவேடு ஆகிய பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட லாரிகளில் வாழைகன்று விற்பனைக்கு வந்திருந்தன. இவை அனைத்தும் கோயம்பேடு மார்கெட்டை ஒட்டியுள்ள "இ மற்றும் ஏ" சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

    அவல், பொறி, கடலை, வாழைத்தோரணம், பழங்கள் விற்பனை களைகட்டி உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அவல் ஒரு படி ரூ.100-க்கும், பொரி-ரூ.20, கடலைரூ.150-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல் ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளம் பழங்கள் விலையும் அதிகமாக இருந்தது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூஜை பொருட்கள் விலை விபரம் வருமாறு:- ஆப்பிள்-ரூ.200, சாத்துக்குடி-ரூ.100, மாலூர் கொய்யா-ரூ.150, மாதுளம் பழம்-ரூ.250, அவல் ஒரு படி (பெரியது) -ரூ.100, பொரி ஒரு படி-ரூ.20, கடலை ஒரு படி-ரூ.150, நாட்டு சர்க்கரை ஒரு கிலோ-ரூ.100, தேங்காய் ஒன்று-ரூ.20-ரூ.25வரை, வாழை இலை ஒன்று-ரூ.10, வாழைகன்று (10எண்ணிக்கை - 1 கட்டு) -ரூ.100, பூசணிக்காய் (1கிலோ)-ரூ.10, எழுமிச்சை கிலோ ரூ.120, தோரணம் (20எண்ணிக்கை) -ரூ.50, மாங்கொத்து ஒரு கட்டு ரூ.15, வெற்றிலை கவுளி(80 எண்ணிக்கை)-ரூ.40 மஞ்சள் வாழைத்தார் ஒன்று- ரூ.500.

    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது, அங்காடி நிர்வாக குழு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1000வசூல் செய்து வருகின்றனர். ஆனால் மார்கெட் வளாகத்தை சுற்றி உள்ள சாலைகளில் நேரடியாக வியாபாரிகள் பலர் தற்காலிக கடைகள் அமைத்தும் வாகனங்களில் வைத்தும் நேரடியாக பூஜை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் எங்களுக்கு வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவல்,பொரி, கடலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை ஆகாமல் அதிகளவில் தேக்கமடைந்து பெருத்த நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள் கண்காணிப்பு செய்து ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆயதபூஜையையொட்டி ஆந்திரா, திருவள்ளூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து இன்று 80-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பூ விற்பனைக்கு குவிந்து உள்ளது. பூக்கள் விலை அதிகமாக காணப்பட்டது. சாமந்தி ஒரு கிலோ ரூ.200-க்கும், மல்லி மற்றும் கனகாம்பரம் ரூ.900-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் வலை விபரம்(கிலோவில்)வருமாறு:-

    சாமந்தி பூ -ரூ.200-க்கும், பன்னீர் ரோஜா-ரூ.150-க்கும், சாக்லேட் ரோஜா-ரூ.250, மல்லி மற்றும் கனகாம்பரம்-ரூ.90, அரளி-ரூ500, ஜாதி-ரூ.450,முல்லை-ரூ.600, சம்பங்கி-ரூ250 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளி மார்கெட்டில் உள்ள கடைகளில் பூக்கள் விலை மேலும் பல மடங்கு எகிறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கோயம்பேடு பூ மார்க்கெட்டில் சாமந்தி பூ ஒரு கிலோ ரூ.240-க்கு விற்கப்படுகிறது.
    • தினசரி 15 முதல் 20 லாரிகளில் மட்டுமே சாத்துக்குடி விற்பனைக்கு வருவது வழக்கம்.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூஜை பொருட்களின் விற்பனை களை கட்டியது.

    பூ மார்கெட்டுக்கு ஆந்திரா மாநிலம் குப்பம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து இன்று ஏறத்தாழ 80 வாகனங்களில் சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்கு குவிந்துள்ளது. வழக்கமாக தினசரி 40 வாகனங்கள் மூலம் மட்டுமே பூ விற்பனைக்கு வரும். இந்த நிலையில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பூக்கள் வரத்து 2 மடங்காக அதிகரித்து உள்ளது.

    கோயம்பேடு பூ மார்க்கெட்டில் சாமந்தி பூ ஒரு கிலோ ரூ.240-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் பன்னீர் ரோஜா ஒரு கிலோ-ரூ.150 முதல் 200வரையிலும், சாக்லேட் ரோஜா ஒரு கிலோ -ரூ.240-க்கும், மல்லி ஒரு கிலோ ரூ.900-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் பூக்கள் விலை மேலும் பல மடங்கு எகிறி உள்ளது.

    மற்ற பூக்கள் விலை விபரம் வருமாறு (கிலோவில்) ஜாதி-ரூ.600, முல்லை-ரூ.700, கனகாம்பரம்-ரூ.1100, அரளி-ரூ.500, சம்பங்கி-ரூ.300. இதேபோல் பழ மார்க்கெட்டுக்கு ஆந்திரா மாநிலத்தில் இருந்து இன்று 60-க்கும் மேற்பட்ட லாரிகளில் சாத்துக்குடி பழங்கள் விற்பனைக்கு குவிந்துள்ளது. தினசரி 15 முதல் 20 லாரிகளில் மட்டுமே சாத்துக்குடி விற்பனைக்கு வருவது வழக்கம்.

    ஆனால் கடந்த 2 நாட்களாக அதன் வரத்து 3 மடங்கு வரை அதிகரித்து உள்ளது. எனினும் எதிர்பார்த்த விற்பனை நடக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் சாத்துக்குடி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ சாத்துக்குடி ரூ.35 முதல் ரூ40-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் இருந்து 4 வகையான ஆப்பிள் பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 10 லாரிகளில் ஏறத்தாழ 150 டன் ஆப்பிள் பழங்கள் விற்பனைக்கு வரும். இதில் தினசரி விற்பனை ஆவது போக மீதமுள்ள ஆப்பிள் பழங்களை வியாபாரிகள் குளிர்சாதன வசதி கொண்ட குடோனில் வைத்து பதப்படுத்தி வைத்து பின்னர் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்வது வழக்கம்.

    தற்போது ஆயுத பூஜை பண்டிகை என்பதால் கடந்த சில நாட்களாக வியாபாரிகள் அதிகளவில் ஆப்பிள் பழங்களை கொள்முதல் செய்து தங்களது குடோனில் கையிருப்பில் வைத்து தற்போது விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இமாச்சல் ஆப்பிள் 25 கிலோ பெட்டி -ரூ.5 ஆயிரத்துக்கும், காஷ்மீர் ஆப்பிள் 14 கிலோ பெட்டி- ரூ.2ஆயிரத்துக்கும், இத்தாலி ராயல்கலா ஆப்பிள் 18 கிலோ பெட்டி- ரூ.3800-க்கும், கின்னூர் ஆப்பிள் 10 கிலோ பெட்டி-ரூ.2200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கர்நாடக மாநிலம் மாலூர், கடலூர் மாவட்டம் பண்ருட்டி, திருப்பத்தூர் அடுத்த ஒடுக்கத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து கொய்யா பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் கொய்யா பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது. மாலூர் கொய்யா 25 கிலோ பெட்டி ரூ.2 ஆயிரம், மற்ற கொய்யா 25 கிலோ பெட்டி ரூ1200-க்கும் விற்கப்படுகிறது.

    இதேபோல் மாதுளை மற்றும் மஞ்சள் வாழைத்தார் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. மாதுளம் பழம் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.180-க்கும், மஞ்சள் வாழைத்தார் ஒன்று ரகத்தை பொறுத்து ரூ.300 முதல் 500 வரை விற்பனை ஆகி வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு தொடங்கி மழை பெய்து வருவதால் வெளிமார்கெட் மற்றும் பல்வேறு பகுதிகளில் தற்காலிக கடைகள் மூலம் பூஜை பொருட்களை விற்பனை செய்து வரும் வியாபாரிகள் மழை தொடருமா என்கிற அச்சத்தின் காரணமாக பெரிதும் கவலை அடைந்து உள்ளனர்.

    • புரட்டாசி மாதம் முழுவதும் பூ விற்பனை மிகவும் மந்தமாகவே நடந்தது.
    • கடந்த சில நாட்களாக மார்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் வருகை அதிகரித்து உள்ளது.

    போரூர்:

    கோயம்பேடு பூ மார்கெட்டுக்கு ஓசூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணாமாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி சுமார் 40 வாகனங்களில் பூக்கள் விற்பனைக்கு வருகிறது. புரட்டாசி மாதம் தொடங்கியது முதலே சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் கோவில் திருவிழாக்கள் இல்லாததால் பூக்கள் விற்பனை மந்தமானது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் தினசரி சுமார் 10 டன் அளவிலான பூக்கள் தேக்கம் அடைந்து குப்பைகளில் கொட்டப்பட்டன. இந்த நிலையில கடந்த கடந்த 15-ந் தேதி நவராத்திரி பண்டிகை தொடங்கியது முதல் பூக்கள் விற்பனை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் அதன் விலை உயரத்தொடங்கி உள்ளன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சாமந்தி, பன்னீர் ரோஜா உள்ளிட்ட பூக்கள் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரையே விற்கப்பட்டது.

    இந்த நிலையில் ஐப்பசி மாதம் தொடக்கம், நவராத்திரி பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த நாட்கள், விசேஷச நாட்கள், ஆயுத பூஜை என அடுத்தடுத்து வர உள்ளதால் பூக்கள் விற்பனை சூடு பிடித்து அதன் வலையும் எகிறி உள்ளது.

    கடந்த வாரத்தில் ரூ.20-க்கு விற்கப்பட்ட சாமந்தி இன்று ஒரு கிலோ ரூ.150-க்கும், பன்னீர் ரோஜா-ரூ.100, மல்லி-ரூ.700, கனகாம்பரம்- ரூ.800 வரையிலும் விற்கப்படுகிறது.

    பூக்கள் விலை உயர்வு குறித்து மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, புரட்டாசி மாதம் முழுவதும் பூ விற்பனை மிகவும் மந்தமாகவே நடந்தது. விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்த போதிலும் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்த சுமார் 10 டன் அளவிலான பூக்களை தினசரி குப்பையில் கொட்டி வந்தோம். இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வந்தது.

    கடந்த சில நாட்களாக மார்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் வருகை அதிகரித்து உள்ளது. ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு நாளை மாலை முதல் பூக்கள் விற்பனை மேலும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூக்களின் விலையும் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார். 

    • கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மலர் அங்காடி வளாகத்தில் ஆயுத பூஜையையொட்டி சிறப்பு சந்தை இன்று தொடங்கியது.
    • சிறப்பு சந்தை திறக்கப்பட்டதையொட்டி பொதுமக்கள் வீடுகளுக்கு தேவையான பூஜை பொருட்களை குறைந்த விலையில் வாங்கி சென்றனர்.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட விழா காலங்களில் சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம். பொதுமக்கள் பண்டிகைகளை கொண்டாடுவதற்கான பொருட்கள் மற்றும் பூஜை பொருட்களை ஒரே இடத்தில் வாங்குவதற்காக இந்த சிறப்பு சந்தை நடைபெறும்.

    இந்த சந்தையில் பொதுமக்களுக்கு பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். கோயம்பேடு மலர் அங்காடி வளாகத்தில் இந்த சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம். இந்த சந்தையானது, கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் மூலம் ஏலம் விடப்பட்டு, ஒப்பந்ததாரர் மூலம் நடத்தப்படும்.

    தற்போது கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் மூலம் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் இந்த முறை சிறப்பு சந்தை நடத்துவதற்காக ஏலம் விடப்படவில்லை. கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகமே நேரடியாக சிறப்பு சந்தையை நடத்துகிறது.

    அதன்படி கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மலர் அங்காடி வளாகத்தில் ஆயுத பூஜையையொட்டி சிறப்பு சந்தை இன்று தொடங்கியது. இதில் முதல் நாளான இன்று பல கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த சிறப்பு சந்தையில் நவராத்திரி மற்றும் ஆயுத பூஜையை கொண்டாடுவதற்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    இந்த சந்தையில் பொரி, கடலை, வாழைப்பழம், வாழைக்கன்று, வாழை இலை, தேங்காய், கரும்பு போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை உள்ளிட்ட பூஜையில் வைப்பதற்கு தேவையான அனைத்து பழங்களும் விற்கப்படுகிறது.

    சாமி படங்களுக்கு அணிவிப்பதற்கான சாமந்தி உள்ளிட்ட அனைத்து வகையான பூக்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

    சிறப்பு சந்தை திறக்கப்பட்டதையொட்டி பொதுமக்கள் இங்கு வந்து வீடுகளுக்கு தேவையான பூஜை பொருட்களை குறைந்த விலையில் வாங்கி சென்றனர். இங்கு பொருட்கள் மொத்த விலையிலும், சில்லரை விலையிலும் விற்பனை செய்யப்பட்டன. இந்த சிறப்பு சந்தை வருகிற 27-ந்தேதி வரை 10 நாட்களுக்கு செயல்படும்.

    ×