search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பு: பெரியவெங்காயத்தின் விலை குறைய தொடங்கியது
    X

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பு: பெரியவெங்காயத்தின் விலை குறைய தொடங்கியது

    • மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து 45 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது.
    • பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.65 வரையிலும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110வரையிலும் விற்பனை ஆகி வருகிறது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கடந்த சில நாட்களாக வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ130வரையிலும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.85வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

    தினசரி 70டன் வரை விற்பனைக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து திடீரென பாதியாக குறைந்து போனதால் அதன் விலை அதிகரித்தது. அதேபோல் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பெரிய வெங்காயத்தின் அறுவடை தொடர்ந்து தாமதமாகி வருவதால் வெங்காயத்தின் வரத்து குறைந்து அதன் விலை திடீரென 2 மடங்கு வரை உயர்ந்தது.

    இந்நிலையில் கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் அதிகளவில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வர தொடங்கி உள்ளன. இன்று மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து 45 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது.

    இதையடுத்து தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. இன்று மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது. வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.65 வரையிலும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110வரையிலும் விற்பனை ஆகி வருகிறது.

    இதேபோல் பீன்ஸ், அவரைக்காய், கேரட், கத்தரிக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலையும் குறைந்து உள்ளது. மொத்த விற்பனையில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.50-க்கும், அவரைக்காய் ரூ.40-க்கும், ஊட்டி கேரட் ரூ.20-க்கும், உஜாலா கத்தரிக்காய் ரூ.10-க்கும் விற்கப்படுகிறது.

    Next Story
    ×