search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் குளம் போல் தேங்கியது: வியாபாரிகள், பொதுமக்கள் அவதி
    X

    கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் குளம் போல் தேங்கியது: வியாபாரிகள், பொதுமக்கள் அவதி

    • காய்கறி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் வியாபாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
    • கழிவறைகளை சுத்தம் செய்து உரிய முறையில் பராமரிப்பு செய்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    போரூர்:

    கோயம்பேடு, காய்கறி மார்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வரும் சில்லரை வியாபாரிகள், மளிகை, காய்கறி கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் என லட்சக்கணக்கானவர்கள் இங்கிருந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடந்த சில நாட்களாகவே பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் ஒரிரு நாட்கள் பெய்த லேசான மழைக்கே கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ஆங்காங்கே மழைநீர் குளம் போல தேங்கி கிடக்கிறது. இதனால் மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிகள், மூட்டை தூக்கி செல்லும் கூலி தொழிலாளர்கள், பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் என அனைவரும் மார்க்கெட் வளாகத்தில் நடந்து செல்ல கூட முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் காய்கறி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் வியாபாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    மார்க்கெட் வளாகத்தில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததே தண்ணீர் தேங்கி கிடப்பதற்கு காரணம் என்று வியாபாரிகள் தரப்பில் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் மழை காலம் தொடங்கி உள்ளதால் மார்க்கெட் வளாகத்தில் தேங்கும் குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்றிடவும், தொற்று நோய் பரவுவதை தடுத்திடும் வகையில் சுகாதாரமான குடிதண்ணீர் கிடைத்திடவும், கழிவறைகளை சுத்தம் செய்து உரிய முறையில் பராமரிப்பு செய்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அங்காடி நிர்வாக குழு அதிகாரிகளுக்கு வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×