search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "knife"

    • மணிகண்டன்அப்பகுதியை சேர்ந்த பொது மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய–தாக புகார்கள் வந்தன.
    • இதை தொடர்ந்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையிலான போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

     புதுக்கோட்டை

    ஆலங்குடி கல்லுக்குண்டு கரையைச் சேர்ந்தவர் துப்பாக்கி முருகன் மகன் மணிகண்டன் (வயது 23). இவர் தற்போது ஆலங்குடி கே.வி.எஸ். தெருவில் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த பொது மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டியதாக புகார்கள் வந்தன. அதன் பேரில் ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையிலான போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் ஆய்வாளர் அழகம்மை விசாரித்து வழக்குப்பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் நேற்று அடைத்தனர். தீபாவளி அன்று கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் கைதான மணிகண்டன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • சமரசம் பேச வந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சரவணனை வெட்டியதில் படுகாயமடைந்தார்
    • சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகேமுன்வி ரோதம் காரணமாக ஆதமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவருக்கு அரிவாள் வெட்டு; படுகாயங்களுடன் நாகை அரசு மருத்துவம னையில் அனுமதி

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஆதமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் அகிலா.

    இவரவது கணவர் சரவணன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊராட்சி மன்றத் தலைவாரன இவருக்கும் அதே பகுதி திமுகவைச் சேர்ந்த ராமாயி, மணிக்கண்டன், சிவானந்தம், கரிகாலன் ஆகியோருக்கும் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டதலில் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று ஆதமங்கலம் ஊராட்சி மாவிலங்கை பேருந்து நிலையத்தில் ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் சூர்யா தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது மணிக்கண்டன் என்பவர் அரிவாளால் அவர்களை வெட்ட வந்துள்ளார். அவர்கள் தெருவுக்குள் ஓடிய நிலையில் அவர்களை ராமாயி, அவரது மகன் சிவானந்தம், உறவினர்களான மணிக்கண்டன், கரிகலாலன் ஆகியோர் வெட்டுவதற்காக துரத்தி உள்ளனர்.

    அப்போது சமரசம் பேச வந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சரவணனை பிளேடு, கத்தி, அரிவாள் கொண்டு வெட்டியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு வலிவலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வலிவலம் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

    • தனியார் நிறுவனத்தில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார்.
    • காந்திமா நகர் பகுதியில் சிறுவன் ஒருவனை வாலிபர் ஒருவர் தாக்கினார்.

    கோவை 

    கோவை ஆவாரம்பாளையம் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 22). இவர் காந்தி மாநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் தனது நண்பர்களுடன் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

    இதேபோன்று கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அஜித் குமார் வேலைக்கு சென்றபோது காந்திமா நகர் பகுதியில் சிறுவன் ஒருவனை வாலிபர் ஒருவர் தாக்கினார். இதனை பார்த்த அஜித் குமார் அந்த வாலிபரை கண்டித்தார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே மோதல் இருந்து வந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக அஜித்குமார் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க முயன்றார். ஆனால் அவரை புகார் அளிக்க விடாமல் அந்த வாலிபர் மிரட்டினார். இதனை அடுத்து அவரின் நடவடிக்கை குறித்து தந்தையிடம் தெரிவிப்பதற்காக நேற்று அஜித்குமார் தனது நண்பர் கார்த்திக் (21) என்பவருடன் கணபதி வீ. ராவ் நகரில் உள்ள அந்த வாலிபரின் வீட்டுக்கு சென்றார்.

    அப்போது அவர்களுக்கி டையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த அஜித்குமார் மற்றும் கார்த்திகை கத்தியால் குத்தினார். பின்னர் இருவரையும் மிரட்டிவிட்டு அந்த வாலிபர் அங்கு இருந்து தப்பி சென்றார்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கத்திக்குத்தில் காயமடைந்த 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அஜித்குமார் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 2 பேரையும் கத்தியால் குத்தியது கோபால் என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கோபாலை தேடி வருகின்றனர்.

    • மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் கத்தி முனையில் செல்போன் பறிக்கப்பட்டது.
    • இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்தனர்.

    மதுரை

    பெருங்குடி, அம்பேத்கர் நகரை சேர்ந்த பால்பாண்டி மகன் பாண்டியராஜன் (22). நேற்று இரவு இவர் நண்பருடன் பெருங்குடி பகுதியில் நடந்து சென்றார்.

    அங்கு வந்த கீரைத்துறை திரவிய லிங்கேஸ்வரர் கோவில் தெரு, ராஜ்குமார் மகன் சக்திவேல் (22), ஜெய்ஹிந்த்புரம், ராமையா தெரு, முனியசாமி மகன் ஆயகிருஷ்ணன் (20), கலையரசன் மகன் செந்தூர்ராஜன் (24) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.1050-ஐ பறித்து தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 3 பேரையும் கைது செய்தனர்.

    செல்லூர் அகிம்சாபுரத்தைச் சேர்ந்தவர் தீபன் (29). இவர் நேற்று குலமங்கலம் ரோடு சந்திப்பில் நடந்து சென்றார்.

    அப்போது கோவில் பாப்பாக்குடி, மீனாட்சி நகர், பழனி மகன் அருண்குமார் (24), அகிம்சாபுரம் சக்தி கணேசன் (36), திருமங்கலம், காங்கேயநத்தம் காக்கா பாண்டி (32) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 1200, செல்போன், வாட்ச் ஆகியவற்றை பறித்து தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 3 பேரையும் கைது செய்தனர்.

    ஆனையூர், கருப்பசாமி நகரை சேர்ந்தவர் துரைசாமி (60). இவர் நேற்று மிளகரனை, கொல்லங்குளம் அய்யனார் கோவில் அருகே நடந்து சென்றார். அங்கு வந்த 3 பேர், கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கூடல் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறித்த பாசிங்காபுரம், அம்பேத்கர் காலனி பரதன் மகன் பாரதி (23), விசால் நகர் பழனிவேல் மகன் பிரதீப் (22), காளியம்மன் கோவில் தெரு முருகேசன் மகன் நம்பிராஜா (24) ஆகியோரை கைது செய்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர்திடீரென பேராசிரியை கத்தியால் குத்தியதுடன் கழுத்தில் கிடந்த 7 1/2 பவுன் நகையை பறித்துக் கொண்டு வேகமாக தப்பினர்.
    • திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காங்கயம் ரோடு பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா தேவி (வயது 40). தனியார் கல்லூரி பேராசிரியை. அதிகாலை காங்கயம் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.

    அப்போது தனியார் பள்ளி அருகே சென்றபோது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர்திடீரென பேராசிரியை கத்தியால் குத்தியதுடன் அவரை மிரட்டி கழுத்தில் கிடந்த 7 1/2 பவுன் நகையை பறித்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து தப்பினர். காயம் அடைந்த பேராசிரியை சத்தம் போட்டார். உடனே அப்பகுதி மக்கள் மஞ்சுளாதேவியை மீட்டு திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இது தொடர்பாக மஞ்சுளாதேவி அளித்த புகாரின் பேரில், திருப்பூர் நல்லூர் போலீசார் வழக்கு பதிந்து 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • மூதாட்டியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • கோவில் அருகே அமர்ந்திருந்த வாலிபரிடம் கேள்வி கேட்டதற்கு ஆத்திரமடைந்த அவர் நிர்மலாவை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் அருகே உள்ள வீராணம் கொய்யாத்தோப்பு பகுதிகள் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த பச்சையப்பன் மனைவி நிர்மலா (வயது 60) என்பவர்தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் அல்லிக்குட்டை கணபதி நகர் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் அசோக்குமார் (வயது 22).

    இந்த கோவிலில் வெகுநேரமாக அங்கேயே அமர்ந்து இருந்துள்ளார்.இதைக்கண்ட நிர்மலா ஏன் இங்கே அதிக நேரமாக இருக்கிறாய் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அசோக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நிர்மலாவின் கழுத்தில் குத்தி உள்ளார்.

    நிர்மலாவின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து நிர்மலாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அசோக்குமாரை பிடித்து வீராணம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    • கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    • செல்லூர் போலீசில் புகார் கொடுத்தார்.

     மதுரை

    மதுரை மேலகைலாசநாதபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் என்ற சில்க் முருகன் (வயது 41). கட்டிட மேஸ்திரி. இவரிடம் அருள்தாஸ்புரத்தை சேர்ந்த சொக்கன் என்ற முருகன் (50) கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சில்க் முருகன் நேற்று தத்தநேரி குளியல் தொட்டி அருகே நின்று கொண்டு இருந்தார்.

    அங்கு வந்த வாலிபர் ஒருவர் 'மதுபானம் வாங்கித்தா' என்று தொந்தரவு செய்தார். சொக்கன் அவரிடம், 'ஏன் இப்படி சங்கடப்படுத்துகிறீர்கள்?' என்று தட்டிக் கேட்டார். ஆத்திரம் அடைந்த வாலிபர் சொக்கனை கத்தியால் குத்திவிட்டு தப்பினார். சொக்கனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சில்க் முருகன் செல்லூர் போலீசில் புகார் கொடுத்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமங்கலம், மேல வாகைகுளம், கிழக்குத் தெருவைச் சேர்ந்த அழகுராஜா மகன் கேடா என்ற அறிவழகன் (வயது 22) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் வாலிபரை கத்தியால் குத்தி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தனிப்படை போலீசார் ஆரப்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    மதுரை

    மதுரை பொன்னகரம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி (வயது 42). இவர் நேற்று இரவு சிம்மக்கல் பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர், கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்து 730-ஐ பறித்து சென்றனர். இதுபற்றி மாடசாமி திலகர் திடல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாசப்பெருமாள் மேற்பார்வையில், திடீர்நகர் உதவி கமிஷனர் ரவீந்திரபிரகாஷ் ஆலோசனைபேரில், திலகர் திடல் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் குற்றவாளியை தேடி வந்தனர்.

    இதற்கிடையே ஆரப்பாளையம், மஞ்சள்மேடு காலனியில் பிச்சை (47) என்பவரை மர்ம கும்பல் கத்தியால் குத்தி விட்டு தப்பிச்சென்றது. இதையடுத்து படுகாயங்களுடன் கிடந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் என் மகனை இதே பகுதியில் வசிக்கும் 2 பேர் கத்தியால் குத்தினர். இது தொடர்பாக நான் போலீசில் புகார் கொடுத்தேன். இதன் காரணமாக அவர்களுக்கும் எனக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் நான் நேற்று இரவு மஞ்சள்மேடு காலனியில் நடந்து சென்றேன்.

    அப்போது அங்கு வந்த 2 பேர் என்னை கத்தியால் குத்திவிட்டு, உருட்டுக்கட்டையால் தாக்கினர் என்று கூறினர். அவர் கொடுத்த தகவலின்பேரில் தனிப்படை போலீசார் திலகர் திடல், கரிமேடு ஆகிய பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கேமராவில் இடம்பெற்று இருந்த காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தனர்.

    இதில் மேற்கண்ட 2 சம்பவங்களிலும் ஒரே நபர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் ஆரப்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து வந்து, போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் கண்மாய்க்கரை, சகாயமாதா தெருவைச் சேர்ந்த அஜய்குமார் என்ற குட்டி சாக்கு (23), ஆரப்பாளையம், அன்னை இந்திரா நகர், மலையாளம் மகன் ஜீவமணி என்ற தீப்தி (20) என்பது தெரியவந்தது.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் மாடசாமியிடம் பணம் பறித்தது, பிச்சையை கத்தியால் குத்தியது நாங்கள் தான் என்று தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து திலகர் திடல் போலீசார் மேற்கண்ட 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் வரதட்சணை கேட்டு மாமியாரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை கரிமேடு மேலப்பொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். இவரது மகன் அஜித் (வயது 22). இவரும், பாத்திமா நகரைச் சேர்ந்த தமிழ்செல்வி (38) என்பவரின் மகள் சந்தியாவும் காதலித்து வந்தனர். காதலுக்கு எதிர்ப்பு வந்ததால் கடந்த மாதம் 30-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

    சில நாட்களுக்கு முன்பு அஜித், வரதட்சணை கொடுக்குமாறு மாமியார் தமிழ்செல்வியிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தமிழ்செல்வி கரிமேடு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், எனது வீட்டில் இருந்த பொருட்களை அஜித் திருடிச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித் வீட்டில் இருந்த பொருட்களை மீட்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அஜித், தமிழ்செல்வியை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தமிழ்செல்வி ஆட்டோவில் காளவாசல் பகுதியில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது ஆட்டோவை மறித்த அஜித், அவரது தந்தை சுந்தர், உறவினர் மாணிக்கம் ஆகிய 3 பேர் தமிழ்செல்வியிடம் தகராறு செய்து அவரை கத்தியால் சரமாரியாக குத்தினர்.

    படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர்.

    முன்விரோத தகராறில் தேமுதிக பிரமுகரை கத்தியால் குத்திய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பேரை தேடி வருகிறார்கள்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி பேர்பெரியான் குப்பத்தை சேர்ந்தவர் அனந்தராமன் (வயது 42). தே.மு.தி.க. பிரமுகர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராம்கி என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ராம்கி மற்றும் அவரது நண்பர் நெய்வேலியை சேர்ந்த என்ஜினீயர் விஷ்னு(21). உள்பட 7 பேர் அன்ந்தராமனின் வீட்டிற்க்கு சென்றனர். பின்னர் அங்கு இருந்த அனந்தராமனை, ராம்கி தகாத வார்த்தைகளால் திட்டினார். இதில் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

    இதை தொடர்ந்து ராம்கி அவரது நண்பர்களுடன் சேர்ந்து அனந்தராமனை இரும்பு பைப் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அனந்தராமனை சரமாரியாக குத்தினர். கத்திக்குத்தில் தலை மார்பு உள்பட பல்வேறு இடங்களில் அனந்தராமன் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அதன் பின்னர் ராம்கி மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். 

    படுகாயம் அடைந்த அனந்தராமனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனந்தராமனை அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் அனந்தராமன் புகார் செய்தார். அதன் பேரில் ராம்கி மற்றும் நெய்வேலியை சேர்ந்த அவரது நண்பர்கள் என்ஜினீயர் விஷ்னு, ராஜதுரை, சாமிதுரை, ரஜினி, அருண்குமார், மகேஸ்வரன், ஆகிய 7 பேர் மீதும் இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குபதிவு செய்து விஷ்னுவை கைது செய்தார். மற்ற 6 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்.
    ஆத்தூரில் முன்விரோத தகராறில் வாலிபரின் காதை அறுத்த 2 தொழிலாளிகள் கைது செய்யப்பட்டனர்.

    ஆறுமுகநேரி:

    ஆத்தூர் அருகே உள்ள முக்காணி வடக்கு யாதவர் தெருவைச் சேர்ந்தவர் பூவண் மகன் மாரியப்பன் (வயது 28). கூலித்தொழிலாளி.

    இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வண்ணமுத்து (35). என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை மாரியப்பன் முக்காணி மெயின் பஜார் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது வண்ணமுத்து மற்றும் சின்னத்தம்பி ஆகியோர் வழிமறித்து மாரியப்பனை தாக்கினர். பின்னர் கத்தியால் குத்தி அவரது காதை அறுத்தனர்.

    இதில் படுகாயமடைந்த மாரியப்பன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசில் வழக்குபதிவு செய்து கூலித்தொழிலாளிகளான வண்ணமுத்து, சின்னதம்பி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தருமபுரி அருகே பட்டபகலில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வடக்கு தெரு கொட்டாவூரைச் சேர்ந்தவர் ராஜா. இவர் நேற்று காலை சந்தை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ராஜாவை வழிமறித்தார். அப்போது மர்ம நபர் ராஜாவிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 1 பவுன் நகை மற்றும் ரூ.370-யை பறிமுதல் செய்து அங்கிருந்து வண்டியில் வேகமாக தப்பி சென்று விட்டார். 

    இந்த சம்பவம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொதுமக்கள் அதிகமாக நடமாடும் சந்தை அருகே பட்டபகலில் வாலிபரை கத்தியைகாட்டி மிரட்டி மர்ம நபர் ஒருவர் துணிகரமாக  நகை, பணத்தை வழிப்பறி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×