என் மலர்
நீங்கள் தேடியது "engineer arrested"
- வாலிபர் ஒருவர் இளம்பெண் குளிப்பதை கதவு சந்து வழியாக எட்டிப்பார்த்ததாக தெரிகிறது.
- சூர்யபிரசாத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை,
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் 50 வயது பெண். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று அவரது 23 வயது மகள் குளியலறையில் குளித்து கொண்டிருந்தார். அப்போது சத்தம் கேட்டு இளம்பெண்ணின் தாயார் வெளியே வந்து பார்த்தார். அப்போது வாலிபர் ஒருவர் குளியலறை அருகே நின்று கொண்டு இளம்பெண் குளிப்பதை கதவு சந்து வழியாக எட்டிப்பார்த்ததாக தெரிகிறது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் தாயார் அந்த வாலிபரை எச்சரித்தார். இதில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் இளம்பெண்ணின் தாயாரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
அவர்களை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில், இளம்பெண் குளிப்பதை எட்டிப்பார்க்க முயன்றது மதுரை மாவட்டம் வண்டியூரை சேர்ந்த சூர்யபிரசாத்(25) என்பதும், அப்பகுதியில் வாடகைக்கு குடியிருந்து சிவில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சூர்யபிரசாத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மனைவி மற்றும் 2 குழந்தைகளை ஓடும் காரில் இருந்து தள்ளி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
- பாஸ்கரை ரோந்து வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு புறப்பட போலீசார் முயன்றனர்.
சேலம்:
சேலம் திருவா கவுண்டனூரை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் ஆர்த்தி (28), இவருக்கு கண்ணன் என்பவருடன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு கண்ணன் இறந்து விட்டார்.
இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான அமெரிக்காவில் வசித்து வரும் 57 வயதான பாஸ்கர் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு காரில் சென்ற போது பாஸ்கர் மனைவி மற்றும் 2 குழந்தைகளை சீலநாயக்கன்பட்டி பகுதியில் சாலையில் ஓடும் காரில் இருந்து தள்ளி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆர்த்தி, கணவர் பாஸ்கரை இரவு முழுவதும் தேடினார். அப்போது சேலம் முள்ளுவாடி கேட் அருகே பாஸ்கருக்கு சொந்தமான விடுதியில் இருப்பதை அறிந்து அங்கு சென்றார். அங்கு பாஸ்கரிடம், ஆர்த்தி முறையிட அங்கிருந்த போலீசார் ஆர்த்தியை விசாரணைக்கு அழைத்தனர்.
அப்போது நான் ஏன் விசாரணைக்கு வர வேண்டும் என ஆர்த்தி கேட்டார். மேலும் தன்னை அடித்து கொடுமைபடுத்திய கணவர் மீது நான் தான் புகார் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து பாஸ்கரை ரோந்து வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு புறப்பட போலீசார் முயன்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆர்த்தி போலீசாரின் வாகனம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது அவர் கூறுகையில், 2 மகன்களையும் பார்த்து கொள்வதாக கூறி பாஸ்கர் என்னை திருமணம் செய்து கொண்டார். ஆனால் தற்போது எனது 2 மகன்களையும் பார்த்து கொள்ள முடியாது என கூறி என்னையும் எனது குழந்தைகளையும் அடித்து துண்புறுத்துகிறார்.
இதனால் மன வேதனை அடைந்த நான் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க முற்பட்டேன், இதையறிந்த பாஸ்கர் என் மீது பொய்யான புகாரை கொடுத்துள்ளார்.
மேலும் 40 வயது என்று கூறி என்னை திருமணம் செய்து கொண்டார். தற்போது தான் 57 வயது என தெரிய வந்துள்ளது. எனது வயது கொண்ட அவரது முதல் மனைவியின் மகள் அமெரிக்காவில் டாக்டருக்கு படித்து வருகிறார். தற்போது அமெரிக்காவுக்கு செல்ல தயாராகி விட்ட அவர் தன்னை அடித்து விரட்டி டார்ச்சர் செய்கிறார். என்னை கொடுமைபடுத்தி எனது 2 மகன்களை வெளியேற்றி கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளேன் என்றார்.
இதற்கிடையே ஆர்த்தியை அப்புறப்படுத்திய போலீசார் அங்கிருந்து போலீஸ் காரில் பாஸ்கருடன் புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று இது தொடர்பாக ஆர்த்தி புகார் அளித்தார்.
மேலும் போலீசார் விசாரணை நடத்திய போது, சீலநாயக்கன்பட்டி பகுதியில் சென்ற போது காரில் இருந்து பாஸ்கர், ஆர்த்தி மற்றும் அவரது குழந்தைகளை கீழே தள்ளி விட்டதாக புகார் கூறினார். மேலும் அது தொடர்பான வீடியோக்களும் சமூக வலை தளங்களில் வைரலானது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் பாஸ்கர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே பாஸ்கர் சேலம் டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விஜில் ஜோண்சை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
- பத்மநாபபுரம் கோர்ட்டில் விஜில் ஜோண்சை ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தக்கலை:
குமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியை சேர்ந்தவர் விஜில்ஜோண்ஸ் (வயது 40). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் பெங்களூருவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் விஜில் ஜோண்ஸ் முகநூலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மனோ தங்கராஜ் ஆகியோரை பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. வக்கீல் அணி அமைப்பாளர் ஜோசப்ராஜ் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். ஆனால் புகார் கூறப்பட்ட விஜில் ஜோண்சை கைது செய்ய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பற்றி அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரம் தொடாபாக மதுரை ஐகோர்ட் கிளையிலும் ஜோசப் ராஜ் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் விஜில் ஜோண்சை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி அவரை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்தனர். அங்கு அவரை கைது செய்தனர்.
பெங்களூருவில் கைது செய்யப்பட்ட விஜில் ஜோண்ஸ் இன்று தக்கலைக்கு அழைத்து வரப்பட்டார்.
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பற்றி முகநூலில் அவதூறு கருத்துகள் வெளியிட்டது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின் பத்மநாபபுரம் கோர்ட்டில் விஜில் ஜோண்சை ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது தொடர்பாக திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார்.
- அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த 27 வயது பெண் தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் இணையதள பக்கத்தை பயன்படுத்தி வந்தார். இந்தநிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அந்த பெண்ணை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த அந்த பெண் மனஉளைச்சல் மிகுந்த மனவேதனை அடைந்தார்.
பின்னர் சம்பவத்தன்று திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நாமக்கல் மாவட்டம் கருங்குமாரன்பாளையத்தை சேர்ந்த நடேசனின் மகன் சக்திவேல் (வயது 27) என்ஜினீயர் என்பது தெரியவந்தது. பின்னர் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது தான் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், தற்போது காதலித்த பெண் என்னிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டு எப்போதும் அவினாசியை சேர்ந்த காதலியின் தோழியிடம் அதிகமாக பேசி வந்துள்ளார். இது குறித்து காதலிடம் கேட்டபோது எனக்கு உன்னை விட எனது தோழி தான் முக்கியம் என கூறினார். இதனால் தோழி மீது உள்ள ஆத்திரத்தில் இது போன்ற படத்தை சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாக கூறினார். இதனையடுத்து திருப்பூர் மாவட்டம் சைபர் கிரைம் போலீசார் சக்திவேலை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூர் அருகே உள்ள ஒலையக்குன்னம் கிராமத்தை சேர்ந்தவர் அழகிரி.
விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது வயலுக்கு சென்றார். அப்போது வயலில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி பியாரே பூட்டியார் பெர்னாண்டோரெனே (வயது68) என்பவரின் பாஸ்போர்ட், டைரி உள்ளிட்ட சில பொருட்கள் அடங்கிய பை கிடந்தது.
இதைபார்த்த அழகிரி மதுக்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பையை கைப்பற்றி சோதனை செய்தனர்.
அப்போது அந்த பையில் மதுக்கூரை அடுத்த ஆவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த திருமுருகன் (வயது29) என்பவரின் முகவரி எழுதப்பட்டிருந்த துண்டுச்சீட்டு இருந்தது.
இதையடுத்து போலீசார் திருமுருகனை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பிரான்ஸ் சுற்றுலா பயணி பியாரே பூட்டியார் பெர்னாண்டோரெனே உடலை புதைத்து விட்டதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.
இதை கேட்டு ஆடிப்போன போலீசார், திருமுருகனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் போலீசாரிடம் கூறிய தகவல்கள் வருமாறு:-
சென்னையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 2009-ம் ஆண்டு முதல் 2011 வரை பி.டெக் படித்தேன். அப்போது மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பியாரே பூட்டியார் பெர்னாண்டோரெனே என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் நண்பர்கள் ஆனோம்.
மேலும் பியாரே பூட்டியார் பெர்னாண்டோரெனே தமிழகம் வரும் போது தன்னை தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். எங்களுக்குள் ஓரினச்சேர்க்கை பழக்கம் இருந்தது.
அதன்படி கடந்த மாதம் 31-ந்தேதி பியாரே பூட்டியார் பெர்னாண்டோரெனே சுற்றுலாவாக சென்னை வந்தார். சென்னையில் தங்கி இருந்த அவர் பின்னர் திருச்சி வந்தார். திருச்சியில் தங்கி இருந்த அவர் 5-ந்தேதி என்னை தொடர்பு கொண்டார்.
இதையடுத்து திருச்சி சென்று அவரை அழைத்துக்கொண்டு மதுக்கூரில் உள்ள எனது வீட்டிற்கு வந்தேன். அங்கு வைத்து 2 பேரும் மது குடித்தோம். பின்னர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பதட்டமடைந்த நான் அவரை எழுப்ப முயற்சி செய்தேன். ஆனால் அவர் இறந்துவிட்டார்.
இதனால் அவருடைய உடலை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேன். பின்னர் எனது வீட்டின் சமையலறையில் வைத்து டீசல், பெட்ரோல் டயர் ஆகியவற்றைக் கொண்டு பியாரேபூட்டியார் பெர்னாண்டோரெனே உடலை எரித்தேன். எரிந்து முடிந்ததும் எலும்பு, சாம்பல் மற்றும் எரியாமல் கிடந்த சதைப்பகுதியை 3 சாக்குகளில் அடைத்து மூட்டையாக கட்டி மதுக்கூரில் இருந்து வாட்டாக்குடி செல்லும் சாலையில் இரட்டை புளியமரத்தடி அருகே உக்கடை வாய்க்காலிலும், பையை ஓலையக்குன்னம் கிராமத்தில் உள்ள ஒரு வயலிலும் போட்டு வந்துவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து பட்டுக்கோட்டை தாசில்தார் சாந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாக்குமூட்டையில் இருந்த உடலின் சதை பகுதிகள், எலும்பு ஆகியவற்றை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வாட்டாக்குடி உக்கடை கிராம நிர்வாக அதிகாரி தனவேல் கொடுத்த புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் திருமுருகனை கைது செய்தனர்.






