search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "intensity"

    • கிராமத்தில் ரூ.1.20 லட்சம் செலவில் 6,800 சதுர அடி பரப்பளவில் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.
    • மேலும் பட்டாம்பூச்சி பூங்காவிற்கு அருகிலேயே ரூ.4.68 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குள்ளம்பாளையம் கிராமத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமம் ஏற்கனவே திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப்போல் இந்த கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தனித்தனியாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு குடிநீர் தேவையில் தன்னிறைவு பெற்ற கிராமமாக விளங்கி வருகிறது.

    இந்த கிராமத்தில் ரூ.1.20 லட்சம் செலவில் 6,800 சதுர அடி பரப்பளவில் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.

    மேலும் பட்டாம்பூச்சி பூங்காவை சுற்றிலும் 147 மீட்டர் தொலைவிற்கு கம்பி வேலி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பட்டாம்பூச்சிகளை ஈர்க்கும் வகையில் 300-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான செடிகள் பூங்காவில் நடப்பட உள்ளது.

    மேலும் பட்டாம்பூச்சி பூங்காவிற்கு அருகிலேயே ரூ.4.68 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த 2 பூங்காக்களின் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பணி கள் விரைவில் முடிக்க ப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தெரி வித்தனர்.

    • சேலம்- மேட்டூர் அணை பாதையை இருவழித்தடமாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
    • இப்பணியை 3 பகுதிகளாக பிரித்து கட்டுமானப்பிரிவு மேற்கொள்ளப்பட்டது.

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டூரில் செயல்பட்டு வரும் அனல்மின் நிலையத்திற்கு சரக்கு ரெயில்களில் நிலக்கரி லோடு மிக அதிக அளவு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த வழித்தடம் ஆரம்பத்தில் மீட்டர்கேஜ் பாதையாக இருந்தது. அதனை அகல ரெயில் பாதையாக மாற்றினர். ஆனால் மேட்டூர் அணைக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்த நிலையில் போக்குவரத்தை விரிவுபடுத்தும் வகையில் சேலம்- மேட்டூர் அணை பாதையை இருவழித்தடமாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

    இதன்படி சேலம்-மேட்டூர் அணை இருவழிப்பாதை திட்டத்திற்கு கடந்த 2012- ஆண்டு மத்திய அரசு ரூ.220 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து, பணியை ரெயில்வே நிர்வாகம் ெதாடங்கியது. இப்பணியை 3 பகுதிகளாக பிரித்து கட்டுமானப்பிரிவு மேற்கொள்ளப்பட்டது. அதாவது மேட்டூர் அணை- மேச்சேரி ஒரு பகுதியாகவும், மேச்சேரி- ஓமலூர் ஒரு பகுதியாகவும், ஓமலூர்- சேலம் ஒரு பகுதியாகவும் பிரித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் முதல் இரு கட்ட பணிகள் நிறைவடைந்து, அப்பாதையில் மின்வழித்தடமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 3-ம் கட்ட பணியாக சேலம் - ஓமலூர் இடையே சுமார் 15 கிலோ மீட்டருக்கு புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் பணியை தற்போது ெரயில்வே கட்டுமானப்பிரிவு தீவிரப்படுத்தி உள்ளது. ஏற்கனவே சேலம்- பெங்களூரு மார்க்கத்தில் மீட்டர்கேஜ் பாதையாக இருந்த பழைய தண்டவாளங்களை அகற்றிவிட்டு, புதிதாக அகல ரெயில் பாதை தண்டவாளங்களை அமைக்க இடத்தை தயார்படுத்தினர்.

    தொடர்ந்து தற்போது சேலம் ஜங்சன் யார்டு பகுதியில் இருந்து ரெட்டிப்பட்டி, மேக்னசைட் வழியே புதிய தண்டவாளங்களை அமைக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். இப்பணியை இன்னும் 6 மாத காலத்திற்குள் முடிக்க ரெயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இது இணை தண்டவாள பாதையாக விளங்கும். இந்த பணியை விரைந்து முடித்து மின்வழித்தடத்தையும் ஏற்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • கண்காணிக்காமல் விட்டால் டெங்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
    • திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

    உடுமலை:

    உடுமலை பகுதியில் தென்மேற்கு பருவமழை சீசன் துவங்கியுள்ளது. சில மாதங்கள் நீடிக்கும் இந்த பருவமழை சீசனில் வீடுகள் மற்றும் பிற இடங்களில் மழை நீர் தேங்குவது வழக்கம். இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து, டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்படும் வாய்ப்புள்ளது.எனவே பருவமழை சீசன் துவங்கும் போது உள்ளாட்சி அமைப்புகள் சார்பில்நோய்த்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

    ஏடிஸ் கொசுக்கள் நம்மை கடிக்கும் போது டெங்கு உண்டாகிறது. இவை பெரும்பாலும் மாலை அல்லது பகலில்தான் கடிக்கும்.திடீரென கடுமையான காய்ச்சல், அதிகமான தலைவலி, கண்களுக்கு பின்புறம் வலி, கண் விழி சிவந்து, வெளிச்சத்தை பார்க்க முடியாத நிலை, கண் கூசுதல், உடலில் சிவப்புப்புள்ளிகள் தோன்றுவது டெங்கு அறிகுறிகள்.இந்தக் காய்ச்சலின்போது, எலும்பு முறிவு ஏற்பட்டதுபோல கடுமையான எலும்பு வலி ஏற்படும்.

    சுகாதாரத்துறையினர் கூறுகையில், துவக்கத்திலே கண்டறிந்து சிகிச்சை முறைகளுக்கு தயாராகினால் 7 நாட்களில் டெங்கு சரியாகிவிடும்.கண்காணிக்காமல் விட்டால் டெங்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை அழித்துவிடும். இவை ரத்தம் உறைவதற்கு உதவக்கூடியவை.ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும்போது அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும் பல் ஈறு, சிறுநீர்ப்பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும். உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பும் ஏற்படும்.

    டெங்குவிலிருந்து தற்காத்துகொள்ள தடுப்பூசி எதுவும் இல்லை. நாம் வசிக்கும் வாழ்விடங்களில் கொசுக்களை ஒழிப்பது ஒன்றே வழி. லார்வா, கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு வீடு, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும்.குடம், தண்ணீர் தொட்டிகளில் சேமித்துவைக்கும் நீரை நன்றாக கொசு புகாதபடி மூடிவைத்துப் பயன்படுத்த வேண்டும். வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசுவலை பொருத்த வேண்டும் என்றனர்.

    சில மாவட்டங்களில் டெங்கு அதிகரித்த போதும், திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்கிறார் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார்.அவர் மேலும் கூறுகையில், பொதுமக்கள் முடிந்தவரை குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். மருந்து, மாத்திரை எடுத்துக்கொண்ட பின்பும் 3 நாட்களுக்கு காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் டாக்டரை சந்தித்து, அடுத்த கட்ட பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்என்றார்.பருவமழை சீசன் துவங்கியுள்ள நிலையில் உடுமலை நகராட்சி, பேரூராட்சிகளிலும், ஒன்றிய கிராமங்களிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • ஆடிப்பூர கொட்டகையில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • ஆடிப்பூர கொட்டகையில் தான் ஆண்டாள் தேர் திருவிழா கருட சேவையின் போது காலையில் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெறும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தன்று பெரிய தேரில் ஆண்டாளும், ரங்க மன்னாரும் காட்சியளிப்பார்கள்.

    பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து நிலைக்கு சேர்ப்பார்கள் இந்த ஆண்டு ஆடித் தேர் திருவிழா வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா அடுத்த மாதம் (ஜூலை) 24-ந் தேதி நடைபெறுகிறது.

    தேர் திருவிழாவை முன்னிட்டு ஆண்டாள் கோவிலுக்கு முன்புறம் உள்ள ஆடிப்பூர கொட்டகையில் மாலை தொடங்கி இரவு வரை பக்தி சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, பரதநாட்டிய நிகழ்ச்சிகளை பக்தர்கள் கண்டு களிப்பதற்காக 9 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் ஆடிப்பூர கொட்டகையின் உள்ளே கண் கவரும் வகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணியில் இரவு பகலாக 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    கண்ணைக் கவரும் வண்ண துணிகள், பூக்களைக் கொண்டு பிரமாண்டமான முறையில் சுமார் 5 ஆயிரம் பேர் அமரும் வகையில் இந்த பந்தலும், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்காக பெரிய மேடையும் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆடிப்பூர கொட்டகையில் தான் ஆண்டாள் தேர் திருவிழா கருட சேவையின் போது காலையில் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெறும்.அதேபோல் தேர் திருவிழாவை முன்னிட்டு ஆண்டாளுக்கு திருப்பதி திருமலை, ஸ்ரீரங்கம், மதுரை அழகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்து பட்டு, மாலை ஆகிய மரியாதைகள் கொண்டுவரப்பட்டு இந்த பந்தலின் கீழ் வைக்கப்பட்ட பின்னர்தான் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும்.

    அதேபோல் பங்குனி மாதம் உத்திர நன்னாள் அன்று ஆண்டாள்- ரங்கமன்னார் திருக்கல்யாணம் இந்த கொட்டகையின் கீழ் நடைபெறும். சிறப்பு வாய்ந்த ஆடிப்பூர கொட்டகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணியை உள்ளூர் மட்டுமல்லாது கோவிலுக்கு வந்து செல்லும் வெளியூர் பக்தர்களும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    ஆடிப்பூர திருவிழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்து ராஜா மற்றும் கோவில் அலுவலர்களும், பணியாளர்களும் செய்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்ட திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறான மாடுகளை பிடிக்கும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் வீடு மற்றும் தோட்டங்களில் கட்டி வைத்து வளர்க்க வேண்டும்.

    உடன்குடி:

    உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறான மாடுகளை பிடிக்கும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று பிடித்த ஒரு மாட்டை குலசேகரன்பட்டினத்தில் உள்ள கோசாலையில் ஒப்படைப்பதற்காக வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இப்பணி தொடர்ந்து நடைபெறும். அதனால் கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் வீடு மற்றும் தோட்டங்களில் கட்டி வைத்து வளர்க்க வேண்டும் அல்லது அடைத்து வைத்து வளர்க்க வேண்டும் என்று உடன்குடி பேரூராட்சி செயல் அலுவலர் பாபு தெரிவித்தார்.

    • கோடை விடுமுறை முடிந்து 13-ந் தேதி திறப்பு பள்ளி வகுப்பறைகள் தூய்மை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • இதேபோல் பள்ளி திறப்பை ஒட்டி மாணவ ர்களின் பள்ளி பேக், பள்ளி சீருடை விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் மாணவர்க ளுக்கு கோடை விடுமுறை முடிந்து வரும் 13-ந் தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதை யடுத்து பள்ளி வளாகம், வகுப்பறைகளை சுத்தப்படு த்தும் பணி நடந்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து பள்ளிகளை தயார்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

    பள்ளி வளாகத்தில் படர்ந்திருக்கும் மரம், செடி கொடிகள் அகற்றப்பட்டு வருகிறது. வகுப்பறையில் கிருமி நாசினி தெளிக்க ப்பட்டு வருகிறது. மாணவ ர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் தூய்மை ப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    மாணவர்கள் குடிநீர் வசதிக்காக நீர்த்தேக்க தொட்டியில் மருந்து தெளித்து அதை சுத்த மாக்கும் பணி நடை பெறுகிறது. அந்தந்த பள்ளி களில் அந்தந்த தலைமை யாசிரியர்கள் மேற்பா ர்வையில் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதேபோல் பள்ளி திறப்பை ஒட்டி மாணவ ர்களின் பள்ளி பேக், பள்ளி சீருடை விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கை முதலில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு அதன் பிறகு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளி நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றவர்களின் பெயர் பட்டியலை பெற்றுச் சென்றனர் .

    இதுதவிர பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகம், பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களுக்கும் சென்றனர். ஆனால் அங்கு எதற்கு சென்றார்கள் என்பது குறித்து தகவல் தெரியவில்லை.

    பொள்ளாச்சி எம்.ஜி.ஆர் நகரில் சபரிராஜன் வீடு உள்ளது. அங்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றனர். சபரிராஜன் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது அவர்கள் சில தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    மாக்கினாம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசு வீட்டிற்கும் சென்று விசாரணை நடத்தலாம் என்ற தகவல் பரவியது. ஆனால் இரவு 10 மணி வரை சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கு செல்லவில்லை.

    இந்த நிலையில் மாக்கினாம் பட்டி மற்றும் அதே பகுதி ஜோதி நகரில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பலரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் முகவரிகளை பெற்று சென்றுள்ளனர்.

    இதனால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து பெண் உள்பட 7 பேர் பலியாகினர். தும்கூரு மாவட்டம், மதுகிரி பகுதிகளில் கனமழையினால் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    பெங்களூரு:

    தென்மேற்கு பருவ மழை கர்நாடகா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தில் பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் உள் மாவட்டங்களில் குறைந்த அளவு முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் தென்மேற்கு பருவ மழையானது கர்நாடகாவின் தெற்கு உள் மாவட்டங்கள், தமிழகம், புதுவையின் சில பகுதிகள், ராயலசீமா, கடலோர ஆந்திராவின் சில பகுதிகள், தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதிகள் மற்றும் வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய பகுதிகளில் மேலும் தீவிரமடைந்துள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரபிக்கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதால், கர்நாடகா, ராயலசீமாவின் இதர பகுதிகள், தெற்கு கொங்கன், கோவா,தெலுங்கானா மற்றும் கடலோர ஆந்திரா, வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் அடுத்த 48 மணிநேரம் மழையின் தாக்கம் இருக்கும்.

    புயல் உருவாவதற்கான சாத்தியங்கள் கொங்கண், கோவா பகுதியில் காணப்படுகிறது. இது மெதுமெதுவாக மகாரஷ்டிரா கடலோரப் பகுதியை நோக்கி நகருவதாக ஸ்கைமெட் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை கேரளாவில் மே 29ந் தேதி தொடங்கியது. ஆனாலும் 3 நாட்களுக்குப் பின்னரே ஜூன் 1-ந் தேதி கர்நாடகாவில் தொடங்கியது. கடலோர மற்றும் தெற்கு கர்நாடகா உள் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்திருந்தது.

    வழக்கமான மழை அளவை விட 40% கூடுதல் மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்திருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் பெய்த கனமழையினால் 7 பலியாகினர். தும்கூரு மாவட்டம், மதுகிரி, குப்பி, கொரட்டகரே பகுதிகளில் இரண்டாவது நாட்களாக பெய்த கனமழையினால் பல இடங்களில் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகனம் தத்தளித்தப்படி செல்கிறது.

    கதக் மாவட்டம், தம்பாபுரம் பகுதியில் பெய்த கனமழையால் வீடு இடிந்து விழுந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த மல்லவாஜடால் என்ற பெண் பலியானார். இந்த பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வருகிறது. இதனால் கதக் மாவட்டம் முழுவதும் எங்கும் பார்த்தாலும் வெள்ளக்காடாக மாறியது.

    அப்பகுதி மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெங்களூர் மற்றும் மங்களூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் மழை பெய்தது. காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைகளில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.
    ×