search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inspection"

    • மணிமுத்தாறு கால்வாயில் பாலம் கட்டவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • மணிமுத்தாறு கால்வாய் குறுக்காக பாலம் அமைக்க ரூ.3 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    நெல்லை:

    நாங்குநேரி யூனியனுக்கு உட்பட்ட பெரும்பாலான கிராமங்களில் மணிமுத்தாறு அணை நீர் மூலமாக பாசனம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் அங்குள்ள மணிமுத்தாறு கால்வாயில் பாலம் கட்டவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து நாங்குநேரி யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வின் சமீபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அதன் தொடர்ச்சியாக காடன்குளம், திருமலாபுரம் பஞ்சாயத்து கழுவூர் கிராமம் அருகே மணிமுத்தாறு கால்வாய் குறுக்காக பாலம் அமைக்க ரூ.3 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், யூனியன் கவுன்சிலருமான ஆரோக்கிய எட்வின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை துரிதமாக முடிக்கவும் அறிவுறுத்தினார். அப்போது அவருடன் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், ஒன்றிய பொருளாளர் வின்சென்ட், ஒன்றிய அவைத்தலைவர் செல்லத்துரை, செயற்குழு உறுப்பினர் சின்னத்துரை, காடங்குளம் கூட்டுறவு சங்க செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தெருவிளக்கு, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட பெற முடியாமல் தவித்து வருகின்றனா்.
    • மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம் காமராஜபுரம், மஸ்தான் நகா் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தாா்.

    தாராபுரம்:

    தாராபுரத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீட்டுக்கு பட்டா கேட்டு பொதுமக்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம் ஆய்வு மேற்கொண்டாா்.

    தாராபுரம் நகரில் காமராஜபுரம், வடதாரை, சூளைமேடு, நேரு நகா், குறிஞ்சிப்பாடி, அம்பேத்கா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனா். ஆனால் மேற்கண்ட வீடுகளுக்கு பட்டா இல்லாததால் தெருவிளக்கு, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட பெற முடியாமல் தவித்து வருகின்றனா். இதையடுத்து குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கேட்டு கலெக்டரிடம் இப்பகுதி மக்கள் தொடா்ச்சியாக விண்ணப்பித்து வருகின்றனா்.

    இந்நிலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம் காமராஜபுரம், மஸ்தான் நகா் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தாா். ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியா் செந்தில் அரசன், நகரமன்ற தலைவா் பாப்புக்கண்ணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

    • பயணிகளுக்கு இடையூறாக இருந்த கடைகளை அப்புறப்படுத்துமாறு மேயர் அறிவுரை வழங்கினார்.
    • பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என மேயர் சரவணன் தெரிவித்தார்.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் மேயர் பி.எம். சரவணன் ஆய்வு செய்தார். அப்போது பிளாட்பாரங்களில் பயணிகளுக்கு இடையூறாக இருந்த கடைகளை அப்புறப்படுத்துமாறு அறிவுரை வழங்கினார்.

    மேலும், அருகில் இருந்த கட்டண சுகாதார வளாகங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து பஸ் நிலையத்தில் பயணிகளிடம் குறைகளை கேட்டார். பின்னர் பயணிகள் வேண்டுகோளை ஏற்று பயணிகள் அமரும் இருக்கைகள் அருகிலேயே சுத்திகரிப்பு குடிநீரை வைக்க உத்தரவிட்டார்.

    மேலும் இனிவரும் காலங்களில் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு செய்து பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றார். அப்போது துணை மேயர் கே.ஆர். ராஜு மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர். 

    • நெல்லை, பாளை சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பான முகாம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.
    • டி.பி.எம். மைதீன்கான் வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர்கள் குறித்த விபரங்களை சரிபார்த்து பார்வையிட்டார்.

    நெல்லை:

    நெல்லை மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, பாளை சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பான முகாம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதனை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர்கள் குறித்த விபரங்களை சரிபார்த்து பார்வையிட்டார்.

    இந்த நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் வி.கே. முருகன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்க மீரான்மைதீன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கல்லூர் பாலா, ஆதி திராவிட நலக் குழு அமைப்பாளர் நவநீதன், தொண்டரணி துணை அமைப்பாளர் சேக் உஸ்மான், வட்ட செயலாளர் வேல்முருகன், ஆறுமுகம், மலை கண்ணன், தொப்பி காஜா, செல்வகுமார், ஜாய் மரகதம், சாலி மவுலானா, மைதீன் பிள்ளை, சாகுல் ஹமீது, அலி, முத்துச்சாமி, வேல்சாமி பாண்டியன், தர்வேஸ் மைதீன், காதர் ஒளி மற்றும் பலர் கலந்த கொண்டனர்.

    • வாக்காளர்கள் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தத்திற்கான சிறப்பு முகாம் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது.
    • சிறப்பு முகாமினை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், நெல்லை மாவட்ட திட்டக்குழு தலைவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் நேரில் ஆய்வு செய்தார்.

    திசையன்விளை:

    தமிழ்நாடு முழுவதும் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தத்திற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்கு சாவடிகளில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. ராதாபுரம் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாமினை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், நெல்லை மாவட்ட திட்டக்குழு தலைவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் நேரில் ஆய்வு செய்தார். அந்த வாக்குச்சாவடிகளில் புதிதாக சேர்ந்தவர்கள், திருத்தம் மேற்கொண்டவர்கள் மற்றும் நீக்கல் குறித்த தகவ ல்களை கேட்டறிந்தார். முகாமிற்கு மக்கள் வருகை குறித்தும் கேட்டறிந்தார்.

    இதில் தி.மு.க. ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளருமான சுரேஷ் மனோகரன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி, ஊராட்சி மன்ற தலைவர் அருள், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி எஸ்தாக் கெனிஸ்டன், சொக்கலிங்கம், மாவட்ட பிரதிநிதி ராஜன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அமைச்சியார், ஒன்றிய துணை செயலாளர் கென்னடி, நவலடி சரவணகுமார், பொன்னி சக்கி பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அரியலூரில் வாக்காளர் பட்டியில் திருத்த பணிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது
    • வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் என்.வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் என்.வெங்கடாசலம் தலைமை வகித்து, கடந்த இரு தினங்களாக நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து, ஆலோசனைகளை வழங்கினார்.

    தொடர்ந்து அவர், அரியலூர்  மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வாலாஜாநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் உடையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்ற முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய இரு தினங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வுகளில் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா, மாவட்ட வருவாய் அலுவலர்கலைவாணி, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் பூங்கோதை, வருவாய் கோட்டாட்சியர்கள் அரியலூர் ராமகிருஷ்ணன், உடையார்பாளையம் பரிமளம்  அரியலூர் வட்டாட்சியர் ஆனந்தவேல், தேர்தல் வட்டாட்சியர் வேல்முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • நோய்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
    • அரசு ஆஸ்பத்திரிகளில் கூடுதல் ஊழியர்களை பணியமர்த்தி நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவு

    கோவை.

    கோவை மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மாநகர் மற்றும் புறநகர பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது.

    இதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் அங்கு உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது.

    மேலும் கோவை மாவட்டத்தில் கனமழை தொடருவதால் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளும் தலைதூக்க தொடங்கி உள்ளன. எனவே அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் போதிய மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டு உள்ளன.

    அங்கு கூடுதல் படுக்கை வசதிகள் தயார்நிலையில் உள்ளன. மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் கூடுதல் ஊழியர்களை பணியமர்த்தி நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கோவை மாவட்ட மருத்துவத்துறை இணைஇயக்குனர் டாக்டர் அருணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் பருவமழை தொடங்குவதை முன்னிட்டு நவம்பர் 1-ந்தேதி முதல் 100 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டு உள்ளது. அங்கு நோய்பாதிப்புடன் வருவோருக்கு மருத்து வர்கள் பரிசோதனை செய்து தகுந்த சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும் கோவை மாநகராட்சியில் ஆபத்தான நோய் அறிகுறிகள் தென்படும் பகுதியாக 54 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு வசிப்பவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்க ஏதுவாக, மருத்துவ-சுகாதார ஊழியர்கள் அடங்கிய 100 பேர் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த குழுவினர் ஒரு வட்டாரத்துக்கு தலா 10 பேர் வீதம் நேரடியாக சென்று அங்கு நோய் பாதிப்பின் சதவீதத்தை கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுப்பார்கள்.

    மேலும் நோய்அறிகுறி பாதிப்பு உடைய 10 வட்டார பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது. டெங்கு காய்ச்சல் பரவலும் தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கார்சிலி முதல் குண்டடா வரை ரூ.93 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்
    • நேரு பூங்காவில் விரிவாக்க பணிகளை அதிகப்படுத்த வலியுறுத்தல்

    அரவேணு,

    தமிழக பேரூராட்சிகள் இயக்குநர் திரன்குறாலா அரசு முறை பயணமாக நீலகிரி மாவட்டத்துக்கு வந்துள்ளார்.

    இந்த நிலையில் அவர் கோத்தகிரி பேரூராட்சி பகுதியில் அம்ருத் திட்டத்தின்கீழ் ரூ.42 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் குடிநீர் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அங்கு பதிக்கப்பட உள்ள குடிநீர் குழாய்களின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சக்தி மலையில் குடிநீர் தொட்டி அமைவிடத்திலும் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

    தொடர்ந்து கோத்தகிரியில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழும் நேரு பூங்காவுக்கு சென்ற பேரூராட்சிகள் இயக்குநர் திரன்குறாலா, அங்கு நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அங்கு உள்ள கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் அங்காடியை பார்வையிட்டார். அப்போது அங்கு தெளிப்பு உரங்கள் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து பேரூராட்சிக்குட்பட்ட கார்சிலி முதல் குண்டடா வரை ரூ.93 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பேரூராட்சிகள் இயக்குநர் திரன்குறாலா, கோத்தகிரியில் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளையும் திறம்பட செய்ய வேண்டும், முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழும் கோத்தகிரி நேரு பூங்காவில் இன்னும் விரிவாக்க பணிகள் செய்யப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட பேரூராட்சி இணை இயக்குனர் இப்ராஹிம்ஷா, பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம் (பொறுப்பு), சுகாதார ஆய்வாளர் ரஞ்சித், பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • நீர்வழிப்பாதையில் பாலம் அமைக்க ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் இச்சிப்பட்டி ஊராட்சியில் அனுமதி பெற்றனர்.
    • சிமெண்ட் குழாய்களை இச்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வேலுமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள இச்சிப்பட்டி ஊராட்சி ரோசரி கார்டன் என்ற பகுதியில் நீர்வழி பாதையை அடைத்து தார் சாலை அமைக்கப்பட்டு இருந்தது. இதனை ஆய்வு செய்த இச்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வேலுமணி நீர்வழிப் பாதையை அடைக்காமல் பாலம் அமைத்து அதன் மீது சாலை அமைக்க வேண்டும் என அந்த பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் அறிவுறுத்தினார்.

    இதையடுத்து அந்த நீர்வழிப்பாதையில் பாலம் அமைக்க ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் இச்சிப்பட்டி ஊராட்சியில் அனுமதி பெற்றனர். இந்த நிலையில் பாலம் அமைக்க, அதற்கான சிமெண்ட் குழாய்கள் கொண்டு வரப்பட்டது. சிமெண்ட் குழாய்களை இச்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வேலுமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • திருவரங்குளம் அரசு பள்ளியில் அமைச்சர்கள் மெய்யநாதன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டனர்
    • மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திலும் ஆய்வு நடைபெற்றது

    ஆலங்குடி,

    தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.

    திருமயம் வட்டார கல்வி அலுவலகம் மற்றும் திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அவர் ஆய்வு செய்தார். மேலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்து, தலைமை ஆசின்யர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நடந்து வருவதை பார்வையிட்டு, பணி மாறுதல் ஆணைகளை, ஆசின்யர்களுக்கு வழங்கினார்.

    இதனைத்தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறும்போது:-

    பள்ளிக் கல்வி துறை சார்பில் 234 தொகுதியிலும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆய்வுப் பணி மேற்கொண்டு அங்குள்ள குறைகள், ஆசின்யர்களின் கோன்க்கைகள் என்னென்ன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த ஆய்வுப் பணி நடந்து வருகிறது.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் நூலகம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இதுபோன்று கள ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளும் போது, ஆசின்யர்களின் கோன்க்கைகள் குறித்து கேட்டு அறிந்து கொள்வதற்கு வசதியாக உள்ளது. கோன்க்கைகள் மட்டுமல்லாமல் என்னென்ன தேவைகள் என்பது குறித்தும் இந்த ஆய்வின் மூலமாக தென்ந்து கொள்ள முடிகிறது. இந்த ஆய்வில் பெறப்படும் ஆலோசனைகள் கருத்துக்கள் ஆகியவற்றை சென்னையில் நடைபெறும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூட்டங்களில் விவாதிப்பதற்கு இது வசதியாக உள்ளது என்றார்.

    • சிவகங்கை ரெயில் நிலையத்தில் புதிய கட்டமைப்பு பணிகளை நகர் மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.
    • அனைத்து கட்சியினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் கடந்த செப்.23-ந் தேதி 13 அம்ச கோரிக்கையை நிறைவேற்றி தரக் கோரி நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் அனைத்து கட்சியினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கடந்த மாதம் 8-ந் தேதி நகர்மன்ற தலைவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் டெல்லி சென்று மத்திய இணை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக சிவகங்கை ரெயில் நிலை யத்தில் நடைபாதை லிப்ட் வசதி, டிஜிட்டல் போர்டு, கழிப்பறை வேலைகள் நடை பெற்று வருகின்றன. இதனை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த், நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெய காந்தன், அயூப்கான், ராமதாஸ், சரவணன், விஜயகுமார், சண்முக ராஜன், மகேஷ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    • உழவர் சந்தைகளில் பல்வேறு புகார்கள் அதிகாரிகளுக்கு வந்த வண்ணம் இருந்தது.
    • அங்குள்ள விவசாயிகள், நுகர்வோர் உள்ளிட்டோரிடம் குறைகளை கேட்டறிந்தனர்

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகளில் பல்வேறு புகார்கள் அதிகாரிகளுக்கு வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சிங்காரம் மற்றும் அதிகாரிகள் தாதகாப்பட்டி உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள விவசாயிகள், நுகர்வோர் உள்ளிட்டோரிடம் குறைகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து குறைகளை உரிய முறையில் தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இதில் சந்தை நிர்வாக அலுவலர், துணை வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×