search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி யூனியனில்  மணிமுத்தாறு கால்வாய் குறுக்கே புதிய பாலம் கட்டுமான பணி
    X

    பாலம் கட்டும் பணியை ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய எட்வின் பார்வையிட்ட காட்சி.

    நாங்குநேரி யூனியனில் மணிமுத்தாறு கால்வாய் குறுக்கே புதிய பாலம் கட்டுமான பணி

    • மணிமுத்தாறு கால்வாயில் பாலம் கட்டவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • மணிமுத்தாறு கால்வாய் குறுக்காக பாலம் அமைக்க ரூ.3 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    நெல்லை:

    நாங்குநேரி யூனியனுக்கு உட்பட்ட பெரும்பாலான கிராமங்களில் மணிமுத்தாறு அணை நீர் மூலமாக பாசனம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் அங்குள்ள மணிமுத்தாறு கால்வாயில் பாலம் கட்டவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து நாங்குநேரி யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வின் சமீபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அதன் தொடர்ச்சியாக காடன்குளம், திருமலாபுரம் பஞ்சாயத்து கழுவூர் கிராமம் அருகே மணிமுத்தாறு கால்வாய் குறுக்காக பாலம் அமைக்க ரூ.3 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், யூனியன் கவுன்சிலருமான ஆரோக்கிய எட்வின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை துரிதமாக முடிக்கவும் அறிவுறுத்தினார். அப்போது அவருடன் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், ஒன்றிய பொருளாளர் வின்சென்ட், ஒன்றிய அவைத்தலைவர் செல்லத்துரை, செயற்குழு உறுப்பினர் சின்னத்துரை, காடங்குளம் கூட்டுறவு சங்க செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×