தாதகாப்பட்டி உழவர் சந்தையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

உழவர் சந்தைகளில் பல்வேறு புகார்கள் அதிகாரிகளுக்கு வந்த வண்ணம் இருந்தது.அங்குள்ள விவசாயிகள், நுகர்வோர் உள்ளிட்டோரிடம் குறைகளை கேட்டறிந்தனர்
தாதகாப்பட்டி உழவர் சந்தையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
Published on

அன்னதானப்பட்டி:

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகளில் பல்வேறு புகார்கள் அதிகாரிகளுக்கு வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சிங்காரம் மற்றும் அதிகாரிகள் தாதகாப்பட்டி உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள விவசாயிகள், நுகர்வோர் உள்ளிட்டோரிடம் குறைகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து குறைகளை உரிய முறையில் தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இதில் சந்தை நிர்வாக அலுவலர், துணை வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com