search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "human chain"

    • இன்று மாலை 4 மணி அளவில் திட்டமிட்ட இடங்களில் வெற்றிகரமாக நடைபெறும்.
    • 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கலந்து கொள்கின்றன.

    காரனை:

    மாமல்லபுரத்தை அடுத்த காரனையில் பஞ்சமி நில மீட்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் நினைவு தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் நேற்று அனுசரிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் மறைவிற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் சாதி, மதவாத அரசியலுக்கு இடமில்லை. சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை.

    சமூக நீதிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் மட்டுமே இந்த மண்ணில் எப்போதும் இடமுண்டு என்பதை உணர்த்தக் கூடிய வகையில் தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர் நடைபெறுகிறது. இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கலந்து கொள்கின்றன.  


    இன்று மாலை 4 மணி அளவில் திட்டமிட்ட இடங்களில் இந்த அறப்போர் வெற்றிகரமாக நடைபெறும். லட்சக் கணக்கானோர் இதில் பங்கேற்க இருக்கிறார்கள். சென்னையில் பெரியார் சிலையில் இருந்து அண்ணா மேம்பாலம் வரை மனித சங்கிலி நடைபெறும். முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

    சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் சங்பரிவார் வலதுசாரி அமைப்புகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பது உணர்த்துவதற்காகதான் இந்த அறப்போர் நடைபெறுகிறது. வலதுசாரிகளுக்கு இது கடைசி எச்சரிக்கையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ராமேசுவரத்தில் 11-ந் தேதி நடைபெறும் அனைத்து கட்சி மனித சங்கிலி குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • மக்கள் ஒற்றுமை, சமூக அமைதி, மாநில வளர்ச்சி ஆகியவற்றை காப்பாற்ற வலியுறுத்தி இந்த மனித சங்கிலி நடக்கிறது.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் வருகிற 11-ந் தேதி அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி இயக்கம் நடத்தப்படுகிறது.

    மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், சமூக அமைதி, மாநில வளர்ச்சி ஆகியவற்றை காப்பாற்ற வலியுறுத்தி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடக்கிறது.

    இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கராத்தே பழனிச்சாமி தலைமையில் நடந்தது.

    இதில் மனித சங்கிலி இயக்கம் நடத்துவதற்கு அனைத்துக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை மற்றும் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

    கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன், ராமேசுவரம் தாலுகா செயலாளர் சிவா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் முருகானந்தம்,, காங்கிரஸ் நகர் பொறுப்பாளர் ராஜீவ் காந்தி, ம.தி.மு.க. நகர் செயலாளர் பாஸ்கரன், விடுதலை சிறுத்தை நகர செயலாளர் நாகராஜன், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் செய்யது இப்ராஹிம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகர பொருளாளர் மரியா ராபர்ட் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

    • சமூக மத நல்லிணக்க மனித சங்கிலி நடந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • வருகின்ற 11-ந் தேதி நடக்க உள்ளது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை தலைமை வகித்தார். நிர்வாகிகள் சிவானந்தம், கருணாநிதி, கோகுலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரமேஷ் உட்பட பலர் பேசினர்.

    சிறப்பு அழைப்பாளராக மாநிலக்குழு உறுப்பினரும், தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுசெயலாளருமான சாமிநடராஜன், மத்திய, மாநிலக்குழு முடிவுகள் குறித்து விளக்க பேசினார்.

    கூட்டத்தில் பெரம்பலூர் அருகே திருமாந்துறை சுங்கச்சாவடி பணியாளார்கள் 28 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பது, கடந்த 8 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதால் இதில் உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 11ம்தேதி சமூக மத நல்லிணக்க மனித சங்கிலி நடத்துவது, வெற்றி பெற திரளாக பொதுமக்களை கலந்து கொள்ள செய்வது. பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிர் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் காரணத்தால் மிகுந்த விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளதால் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வீடற்றவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மாவட்ட செயற்குழுஉறுப்பினர் கலையரசி, அகஸ்டின், ரெங்கநாதன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், டாக்டர் கருணாகரன், மகேஸ்வரி, சின்னப்பொண்ணு, ரெங்கராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    தமிழகம் முழுவதும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் இடதுசாரிகள் கட்சிகள் சார்பில் வருகிற 11-ந்தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடக்கிறது.

    மனித சங்கிலி

    வேலூர் மாவட்டத்திலும் மனிதசங்கிலி போராட்டம் நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் இன்று அண்ணா சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    காங்கிரஸ் கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் டீக்காராமன், கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி இளங்கோ, சஜன் குமார், ம.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் கோபி, பழனி மற்றும் காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் கப்பல் மணி, கணேஷ் தங்கமணி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மனித சங்கிலி போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    வேலூர் கோட்டை காந்தி சிலை அருகில் இருந்து திருப்பதி தேவஸ்தானம் வரை வருகிற 11-ந்தேதி மாலை 4 மணிக்கு மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும் என முடிவு செய்தனர்.

    • ராமநாதபுரத்தில் வருகிற 11-ந் தேதி மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் மனித சங்கிலி நடைபெறுகிறது.
    • முதுகுளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் பொறுப்புக் குழு தலைவரும், முதுகுளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மலேசியா பாண்டியன் பரமக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசை கண்டித்து வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தை, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.முதுகுளத்தூரில் நடை பெறும் போராட்டம் எனது தலைமையிலும், ராமநாதபுரத்தில் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ரமேஷ் பாபு, கோபால் தலைமையிலும், பரமக்குடியில் பொறுப்புக் குழு உறுப்பினர் கோட்டை முத்து தலைமையிலும், தொண்டியில் பொறுப்புக் குழு உறுப்பினர் தெய்வேந்திரன் தலைமையிலும், ராமேசுவரத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பாரதிராஜன் தலைமையிலும் நடக்கிறது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்.

    மறுநாள் (12-ந்தேதி) ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறும். அதில் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த சில நாள்களாக ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
    • அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கும்படி காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது அதிா்ச்சியளிக்கிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் வரும் அக்டோபா் 2ந் தேதி 7 இடங்களில் மனித சங்கிலி இயக்கம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.

    திருப்பூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன் தலைமை வகித்தாா். இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம் வருமாறு:-

    தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைத்து வன்முறைகளைத் தூண்டி, பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பினா் திட்டமிட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாள்களாக ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவரையும் காவல் துறையினா் விரைந்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

    தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நச்சு அரசியலுக்கு இடமளிக்க வேண்டாம் என்று தமிழக மக்களைக் கேட்டுக்கொண்டதுடன், தமிழகத்தின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம். மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகளை புறக்கணிக்க வேண்டும் என்றும், எவ்வித ஆத்திரமூட்டலுக்கும் இரையாகி விடக்கூடாது என்று பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம்.

    காந்தி ஜெயந்தி நாளான அக்டோபா் 2ந் தேதி 50 இடங்களில் ஆா்எஸ்எஸ். அணிவகுப்பு நடத்துவதாக அறிவித்துள்ளது. அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கும்படி காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது அதிா்ச்சியளிக்கிறது.

    ஆகவே சங்பரிவாா்களின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும், ஒற்றுமையை வலியுறுத்தியும் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் மனித சங்கிலி இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படியில், திருப்பூா் மாவட்டத்தில், திருப்பூா் மாநகரம், அவிநாசி, ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம், உடுமலை மற்றும் பல்லடம் ஆகிய 7 இடங்களில் மனித சங்கிலி இயக்கம் நடத்துவதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    • சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் பங்கேற்குமாறு பசும்பொன் பாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    • வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் தமிழகம் முழுவதும் நடைபெறும்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசதந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை தேர்வு செய்து தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்தப் போவதாக ஆர்.எஸ்.எஸ். அறிவித்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்.

    வன்முறைப் பின்னணி கொண்டவர்களுக்கு அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்கும்படி தமிழக காவல்துறைக்கு உயர்நீதி மன்றம் வழி காட்டுதலை தந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

    இந்த நிலையில் சமூக நல்லிணக்கத்தை சிதைக்க முயலும் சங்பரிவார்- சனாதன சக்திகளின் சூழ்ச்சியை கண்டிக்கிற வகையிலும், தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கிற வகையிலும் வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள், மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

    இந்த மனிதச் சங்கிலியில் அனைத்து தரப்பு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த அறிவிப்பை அ.தி.ம.மு.க. மனதார வரவேற்கிறது. மனிதச்சங்கிலியில் திரளாக பங்கேற்போம்.

    மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை சமூக நல்லிணக்கம், சமூக அமைதி, தமிழக வளர்ச்சி ஆகியவற்றை பாதுகாத்திட இந்த சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலியில் தமிழகம் முழுவதும் அ.தி.ம.மு.க.வினர் திரளாக பங்கேற்க கேட்டுக்கொள்கிறேன்.

    அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தை கலவர பூமியாக மாற்றி அதன் மூலம் அரசியல் லாபம் அடைய மனுதர்ம வாதிகள் முயற்சிப்பதை முறியடிப்போம். மதவாதம் பேசுபவர்களிடம் இருந்து மக்கள் விலகி இருக்க அன்புடன் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 25-ந்தேதி முதல் செப்டம்பர் 8-ந்தேதி வரை தேசிய கண்தான விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    • பேரணியில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

    நெல்லை:

    ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 25-ந்தேதி முதல் செப்டம்பர் 8-ந்தேதி வரை தேசிய கண்தான விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு இன்று முதல் வருகிற 8-ந்தேதி வரைள 2 வாரங்கள் விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில் பொதுமக்களுக்கு கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி நெல்லை வண்ணார்பேட்ைடயில் இன்று நடைபெற்றது.

    அதனை நெல்லை கிழக்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது போதை இல்லா நெல்லையை உருவாக்குவோம். போதை பொருட்கள் புழக்கம் குறித்து தகவல் தெரிந்தால் மாணவிகள் 100 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    பேரணியில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

    டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மண்டல மருத்துவ இயக்குனர் டாக்டர் லயனல்ராஜ் கண்தானம் செய்வதன் அவசியம் குறித்தும், உலக அளவில் கருவிழி பார்வை இழப்பு தடுப்பதை குறித்தும் விளக்கி பேசினார்.

    மேலும் கல்லூரி மாணவிகள் சார்பில் கண்தானம் செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு படங்கள் வரைந்து காட்சி படுத்தினர்.

    இந்த 2 வார விழிப்புணர்வையொட்டி வருகிற 8-ந்தேதி வரை மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பேரணியில் மேலாளர் கோமதிநாயகம், உதவி பொது மேலாளர் பிரபு, உதவி மேலாளர் அகிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டு விழிப்புணர்வு
    • அமைச்சர் காந்தி பங்கேற்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் பள்ளிக்கல்வி துறை சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழகம் போதை பழக்கத்திற்கு எதிரான மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் உஷா வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.

    இதில் பள்ளி மாணவ மாணவிகள் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், டி.எஸ்.பி பிரபு, நகர செயலாளர் பூங்காவனம், கவுன்சிலர்கள் கிருஷ்ணன், வினோத், குமார், ஜெய்சங்கீதா அசேன் உள்பட ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    தூத்துக்குடியில் கடற்கரை சாலையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. பேரணியை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடற்கரை சாலையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் அல்பி ஜான்வர்க்கீஸ் வரவேற்றார். பேரணியை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்து பேசியதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை பலர் எதிர்த்தனர். பின்னர் அதன் பலன்களை மக்கள் தெரிந்து கொண்டு நடைமுறை படுத்தினார்கள். தமிழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அத்திட்டத்தை செயல்படுத்தியதற்கு ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்தது மட்டுமன்றி இந்தியா முழுவதும் அந்த திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என்றார்.

    இது போல் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமைகளை நடைமுறைப்படுத்தப்படும் வகையில் விழிப்புணர்வு நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சின்னத்துரை, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள பல்லடம் ரோட்டில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
    திருப்பூர்:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள பல்லடம் ரோட்டில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் ஞானசேகரன், ரோஸ்மேரி, அன்வருல்ஹக், இளங்கோவன், மாவட்ட இணை செயலாளர்கள் ராமன், ராணி, பி.தங்கவேல், எம்.தங்கவேல் ஆகியோர் முன்னிலைவகித்தனர். மாவட்ட செயலாளர் அம்சராஜ், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் குமரேசன், டி.ஒய்.எப்.ஐ. மாவட்ட தலைவர் நந்தகோபால், எஸ்.எப்.ஐ. மாவட்ட செயலாளர் சம்சீர் அகமது ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

    போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள ரோட்டில் கைகளை பிடித்தபடி வரிசையாக நின்று கொண்டு, அரசுத்துறைகளில் உள்ள பணியிடங்களை ஒழிக்க அமைக்கப்பட்டுள்ள கமிட்டியை ரத்து செய்ய வேண்டும். அரசுப்பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். அரசுத்துறைகளின் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 
    ஜெயங்கொண்டம் அருகே பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் சார்பில் மனிதசங்கிலி விழிப்புணர்வு நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் உலக சுற்று சூழல் தினத்தை ஒட்டி கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி மற்றும் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

    பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, துணிப்பையை பயன்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்  வகையில் கழுத்தில் மஞ்சள் நிற துணிப்பையை அணிந்து கோஷங்கள் எழுப்பியவாறு மனித சங்கிலியில் நின்றனர், 
    மேலும் பிளாஸ்டிக் பைகளை உடையாக அணிந்த ஒருவரை பாரத மாதா சூலம் கொண்டு விரட்டும் வகையில் இரண்டு மாணவர்கள் நடித்து காண்பித்தனர்.

    இதனை அடுத்து மரங்கள் நட வேண்டும், மரத்தால் கிடைக்கும் நன்மைகள், இருக்கும் மரங்களை பாதுகாப்பது போன்ற சிறிய நாடகத்தை மாணவர்கள் பள்ளியின் அருகே சாலை யோரத்தில் பொதுமக்கள் பார்க்கும் வண்ணம் நடித்து காட்டினர். இந்நிகழ்ச்சியை உடையார்பாளையம் கல்வி மாவட்ட அதிகாரி விஜய லட்சுமி  தொடங்கி  வைத்தார், நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அதிகாரி இளங்கோவன், தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட சுற்று சூழல் ஒருங்கிணைப்பாளர் கொளஞ்சியப்பன், தலைமை ஆசிரியை வெற்றிச்செல்வி மற்றும் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர். 

    நிகழ்ச்சி ஏற்பாட்டை பள்ளியின் அறிவியல் ஆசிரியரும், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளருமான செங்குட்டுவன் செய்திருந்தார்.
    ×