search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமூக நல்லிணக்க மனித சங்கிலி
    X

    சமூக நல்லிணக்க மனித சங்கிலி

    • சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் பங்கேற்குமாறு பசும்பொன் பாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    • வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் தமிழகம் முழுவதும் நடைபெறும்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசதந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை தேர்வு செய்து தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்தப் போவதாக ஆர்.எஸ்.எஸ். அறிவித்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்.

    வன்முறைப் பின்னணி கொண்டவர்களுக்கு அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்கும்படி தமிழக காவல்துறைக்கு உயர்நீதி மன்றம் வழி காட்டுதலை தந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

    இந்த நிலையில் சமூக நல்லிணக்கத்தை சிதைக்க முயலும் சங்பரிவார்- சனாதன சக்திகளின் சூழ்ச்சியை கண்டிக்கிற வகையிலும், தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கிற வகையிலும் வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள், மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

    இந்த மனிதச் சங்கிலியில் அனைத்து தரப்பு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த அறிவிப்பை அ.தி.ம.மு.க. மனதார வரவேற்கிறது. மனிதச்சங்கிலியில் திரளாக பங்கேற்போம்.

    மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை சமூக நல்லிணக்கம், சமூக அமைதி, தமிழக வளர்ச்சி ஆகியவற்றை பாதுகாத்திட இந்த சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலியில் தமிழகம் முழுவதும் அ.தி.ம.மு.க.வினர் திரளாக பங்கேற்க கேட்டுக்கொள்கிறேன்.

    அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தை கலவர பூமியாக மாற்றி அதன் மூலம் அரசியல் லாபம் அடைய மனுதர்ம வாதிகள் முயற்சிப்பதை முறியடிப்போம். மதவாதம் பேசுபவர்களிடம் இருந்து மக்கள் விலகி இருக்க அன்புடன் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×