search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "goondas act"

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #PollachiAbuseCase #GoondasAct
    கோவை:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள்-பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பொள்ளாச்சி மாக்கினாம் பட்டியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு , சபரிராஜன், சதிஷ், வசந்த குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் திருநாவுக்கரசை ஜாமீனில் விடுதலை செய்ய கோரி அவரது தாய் லதா பொள்ளாச்சி ஜே.எம். எண்-1 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற இருந்தது.

    இந்த நிலையில் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் பரிந்துரையின் பேரில் திருநாவுக்கரசு உள்பட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்த குமார் ஆகியோர் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை போலீசார் சிறைக்கு சென்று வழங்க உள்ளனர். #PollachiAbuseCase #GoondasAct

    கோவையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    கோவை:

    கோவை குனியமுத்தூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக குறிச்சியை சேர்ந்த ஷாஜகான், ஜி.எம். நகரை சேர்ந்த சுபாஷ், திருப்பூரைச் சேர்ந்த சூர்யா ஆகிய 3 பேரை கடந்த 21-ந் தேதி போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் மீது சிங்காநல்லூர் பீளமேடு, சரவணம்பட்டி போலீஸ் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. தொடர்ந்து மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய குனியமுத்தூர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதை ஏற்று 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமி‌ஷனர் உத்தரவிட்டார். அதன் பேரில் 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    பண்ருட்டியில் அரசு மற்றும் தனியார் பஸ்களை சேதப்படுத்திய 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டியில் இருந்து நெய்வேலி நோக்கி கடந்த மாதம் 11-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள் எதிரே வந்த அரசு மற்றும் தனியார் பஸ்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 10 பஸ்களின் முன் பக்ககண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.

    இதுபற்றி காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நெய்வேலி மாற்று குடியிருப்பை சேர்ந்த சத்யராஜ் (வயது 23), சிவசங்கர் (22) ஆகியோரை காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் மலர்விழி கைது செய்து பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். பின்னர் அவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் இவர்களின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரையின் பேரில் அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவிட்டார்.
    குமரி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    நாகர்கோவில்:

    ராஜாக்கமங்கலத்தை அடுத்த கணபதிபுரம் தெற்கூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 23). இவர் மீது சுசீந்திரம், கருங்கல் போலீஸ் நிலையங்கள் திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. மேலும் வெள்ளி சந்தை போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் உள்ளது. இந்த வழக்கில் அரவிந்த் கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் ஜெயிலில் இருக்கும் அரவிந்த் கடந்த நவம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.

    அதன்பின்பு அவர் சுசீந்திரம் பகுதியில் வின்சென்ட் என்பவரை மிரட்டி பணம் பறித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

    எனவே அவரை குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதனை கலெக்டர் ஏற்றுக்கொண்டு, தற்போது ஜெயிலில் இருக்கும் அரவிந்தை குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து நாகர்கோவில் ஜெயிலில் இருந்த அரவிந்த் பாளை. ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    கும்பகோணத்தில் வடமாநில பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 4 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. #GoondasAct
    தஞ்சாவூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கடந்த 2-ந் தேதி வங்கி பயிற்சி பணிக்காக மாவட்டம் கும்பகோணம் ரெயில் நிலையம் வந்தார்.

    அப்போது ரெயில் நிலையம் அருகே வந்த ஒரு ஆட்டோவில் இளம்பெண் ஏறி, தான் செல்ல வேண்டிய ஓட்டலில் இறங்கி விடுமாறு கூறினார்.

    ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் அந்த பெண் சொன்ன முகவரிக்கு செல்லாமல் வேறு பாதையில் ஆட்டோவை ஓட்டி சென்றார். இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டதால் ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணை கும்பகோணம் அருகே உள்ள செட்டிமண்டபம் பைபாஸ் சாலையில் இறக்கி விட்டு சென்றுவிட்டார்.

    நள்ளிரவில் தனியாக ரோட்டில் நடந்து சென்ற அந்த இளம்பெண்ணை 4 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக அந்த பெண் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தினேஷ் (வயது 24), மோதிலால் தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் வசந்த் (21), மூப்பனார் நகரை சேர்ந்த சிவாஜி மகன் புருஷோத்தமன் (19), ஹலிமா நகரை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் அன்பரசன் (19) ஆகிய 4 பேர், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரைக்கு பரிந்துரை செய்தார்.

    இதைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள வசந்த், தினேஷ்குமார், அன்பரசன் மற்றும் புருஷோத்தமன் ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.

    இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 4 வாலிபர்களிடம் அதன் நகலை போலீசார் வழங்கினர். #GoondasAct
    திசையன்விளையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள உறுமன் குளத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது43). இவர் மீது திசையன்விளை போலீஸ் நிலையத்தில் மணல் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடந்த மாதம் இவர் மணல் கடத்தியபோது போலீசாரிடம் பிடிபட்டார். அவருக்கு மணல் கடத்தலில் உடந்தையாக இருந்ததாக திசையன்விளை போலீஸ்காரர் சிவாவையும் போலீசார் கைது செய்தனர்.

    இதனிடையே சின்னதுரையை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்தி குமார் மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீசுக்கு சிபாரிசு செய்தார். அதை ஏற்ற அவர் சின்னதுரையை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தர‌விட்டார். அதன்பேரில் சின்னதுரை பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    திருப்பத்தூர் அருகே சாராயம் விற்பனை செய்து வந்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28), கோதணடராமன் (22) இவர்கள் அந்த பகுதியில் சாராயம் விற்பனை செய்து வந்தனர். இது தொடர்பாக திருப்பத்தூர் கலால் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலெட்சுமி 2 பேரையும் கைது செய்தார்.

    தொடர்ந்த சாராய விற்பனை செய்த 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பரிந்துரை செய்தார்.

    அதனை ஏற்ற கலெக்டர் இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
    சூரம்பட்டி பகுதி பள்ளியில் படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பள்ளிக்கு சைல்டு லைன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வந்தனர். அவர்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது சைல்டு லைன் அலுவலர்களிடம் அந்த சிறுமி தனக்கு தனது தந்தையே பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் கூறினார். இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் உதவியுடன் அந்த சிறுமி ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது தந்தை மீது புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் அந்த சிறுமியின் தந்தையை ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைதானவர் கரூர் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

    வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், கடந்த 10 மாதத்தில் 73 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றச்செயல்களை தடுக்கவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். திருட்டு, கொலை, வழிப்பறி, ஆள் கடத்தல், சாராயம், மதுவிற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்து, ஜெயிலில் அடைக்கின்றனர்.

    இவ்வாறாக ஜெயிலில் அடைக்கப்படும் நபர்கள் ஜாமீனில் அல்லது தண்டனை காலம் முடிந்து வெளியே வந்து, திருந்தி வாழாமல் தொடர்ந்து அதே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், கடந்த 10 மாதத்தில் 73 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். சாராயம், மது விற்பனை செய்த 28 பேரும், மணல் கடத்தலில் ஈடுபட்ட 8 பேரும், திருட்டு, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 37 பேரும் என மொத்தம் 73 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர், எனப் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
    கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் வாகன விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி முதல் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    மோட்டார் வாகன விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள், ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியவர்கள், இருசக்கரவாகனத்தில் 3 பேர் பயணம் செய்தவர்கள், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 21,068 பேர் மீதும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற 18,982 பேர் மீதும், கார்களில் இருக்கை பெல்ட் அணியாமல் சென்ற 6,715 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவை உள்பட மோட்டார் வாகன விதிமீறல் குற்றங்களுக்காக மொத்தம் 65 ஆயிரத்து 774 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    இதுதவிர மணல் கடத்தல் தொடர்பாக 478 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 663 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இந்த ஆண்டில் இதுவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் 65 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த தகவலை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்துள்ளார்.

    ஆலங்குடி அருகே மதுபாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள பரவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 33). இவர் மீது புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் கடத்தி வந்தது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

    இதையடுத்து குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கலெக்டர் கணேசுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். 

    இதையடுத்து ஏற்கனே சிறையில் உள்ள குமாரிடம் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ஆணையின் நகலை ஆலங்குடி போலீசார் வழங்கினர்.
    அரியலூரியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசந்திரன். இவர் குடும்பத்துடன் 7.9.18 அன்று வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது பின்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே வந்த மர்மநபர்கள் ராமசந்திரன் மற்றும் அவரது மனைவி, மகள்களை தாக்கி விட்டு 6 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஜெயங்கொண்டம் பெரிய வளையம் பகுதியை சேர்ந்த செல்வம் (48), திருவாரூர் மனக்கரையை சேர்ந்த பெரியபாண்டி ஆகிய 2 பேரை கைது செய்தனர். 

    விசாரணையில் அவர்கள் 2 பேரும் சேர்ந்து ராமசந்திரன் வீட்டில் 6 பவுன் கொள்ளையடித்ததும், அரியலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் 2 பேரும் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதால் அரியலூர் மாவட்ட எஸ்.பி அபினவ்குமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்
    தொடர்ந்து செல்வம், பெரிய பாண்டி ஆகிய 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டனர். 
    ×