search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus damage"

    பண்ருட்டியில் அரசு மற்றும் தனியார் பஸ்களை சேதப்படுத்திய 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டியில் இருந்து நெய்வேலி நோக்கி கடந்த மாதம் 11-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள் எதிரே வந்த அரசு மற்றும் தனியார் பஸ்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 10 பஸ்களின் முன் பக்ககண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.

    இதுபற்றி காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நெய்வேலி மாற்று குடியிருப்பை சேர்ந்த சத்யராஜ் (வயது 23), சிவசங்கர் (22) ஆகியோரை காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் மலர்விழி கைது செய்து பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். பின்னர் அவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் இவர்களின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரையின் பேரில் அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவிட்டார்.
    தா.பழூர் அருகே வீடுகள் மீது அரசு சொகுசு பஸ் புகுந்ததில் 3 பேர் காயம் அடைந்தனர். இதில் வீட்டின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது.
    ஜெயங்கொண்டம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை கிராமத்தை சேர்ந்தவர் வினோதன்(வயது 52). அரசு சொகுசு பஸ் டிரைவரான இவர், நேற்று அதிகாலை 4 மணி அளவில் சென்னையில் இருந்து அரசு சொகுசு பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு தஞ்சவூரை நோக்கி சென்று கொண்டு இருந்தார். தா.பழூர் அருகே மதனத்தூர் கிராமத்தில் கும்பகோணம்- ஜெயங்கொண்டம் சாலையில் சென்று கொண்டு இருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் அருகில் இருந்த முருகானந்தம்(36) என்பவரது வீட்டில் மோதி நின்றது. இதில் வீட்டின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது. 

    இதில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், சைக்கிள் உள்ளிட்டவை சேதம் அடைந்தன. மேலும் அருகில் உள்ள செல்வராஜ் என்பவரது வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த மொபட், ஜெயலட்சுமி(65) என்பவரது வீட்டின் சுற்றுச்சுவரும் இடிந்து சேதம் அடைந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த கரடிகுளம் மேலத்தெருவை சேர்ந்த கதிரவன்(35), கொடுக்கூர் குடிகாடு நடுத்தெருவை சேர்ந்த சம்பத்(30), அரசு பஸ் டிரைவர் வினோதன் ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த 3 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    அங்கு 3 பேரும் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற அரசு பஸ்சை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
    பாட்டவயல் அருகே அரசு பஸ் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்சின் முன்பாகம் சேதம் அடைந்தது.
    கூடலூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கூடலூர், ஊட்டி, மேட்டுப்பாளையம் கிளை அலுவலகங்களில் இருந்து மைசூரூ, பெங்களூரூ, கேரளாவுக்கு தினமும் பஸ்கள் இயக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்துக்குள் மட்டும் பெரும்பாலும் பழுதடைந்த பஸ்களே இயக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம், ஊட்டியில் இருந்து மைசூரூ, பெங்களூரூ பகுதிக்கு புதிய பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேபோல் கூடலூரில் இருந்து கேரளாவுக்கு நல்ல நிலையில் இயங்கக்கூடிய பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனிடையே தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், நீலகிரிக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் கூடலூர்-ஊட்டி, மேட்டுப்பாளையம் சாலைகளில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. மேலும் போக்குவரத்து பாதிப்பும் அடிக்கடி ஏற்படுகிறது.

    இந்த நிலையில் கூடலூர் பகுதியில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 10 விபத்துகள் நடந்துள்ளன. நேற்று முன்தினம் மாலையில் ஊட்டியில் இருந்து கூடலூர் நோக்கி சென்ற சுற்றுலா பயணி ஒருவரின் கார் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது ஊட்டி நோக்கி சென்ற அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ்சின் முன்பாகம் சேதம் அடைந்தது. மேலும் காரும் அப்பளம் போல் நொறுங்கியது. அப்போது காரில் இருந்த கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பீரான்(வயது 65), ஆயிஷாபீ (60) ஆகியோர் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இதேபோல் சுல்தான்பத்தேரியில் இருந்து கூடலூருக்கு நேற்று தமிழக அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பாட்டவயல் அருகே நம்பிக்கொல்லி என்ற இடத்தில் வந்தபோது, கார் ஒன்று பஸ்சின் பக்கவாட்டில் மோதியது. இந்த விபத்தில் பஸ் சேதம் அடைந்தது. மேலும் காரில் வந்த சுற்றுலா பயணிகள் காயத்துடன் உயிர் தப்பினர். கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழக அரசு பஸ்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி சேதம் அடைந்துள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் பழுதடைந்த பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ள அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழக பஸ்கள் புதியதாகவும், நல்ல நிலையிலும் இயக்கப்படுகிறது. போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றாத சுற்றுலா பயணிகளால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு, தமிழக பஸ் சேதம் அடைந்து வருகின்றன. குறிப்பாக புதிய பஸ்களும் விபத்துகளில் சிக்குவது கவலை அளிப்பதாக உள்ளது. 

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×