search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருநாவுக்கரசு"

    • உண்மை குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • ஏராளமான தலித் மக்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடு என்று போற்றப்படுவது திருத்தணி முருகன் கோவில் ஆகும். இங்கு தாழ்த்தப்பட்ட பணியாளர்கள் மீது சாதி ரீதியாக பாகுபாடு காட்டப்படுவதாகவும் பணி நியமனம், பதவி உயர்வு, நிலுவைத் தொகை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் சாதி ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் கோவில் பணியாளர்களால் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இது தலித் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. உண்மை குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சோளிங்கர், நாங்குநேரி கல்லூரி, பள்ளிகளிலும், கல்வி நிலையங்களிலும் நடைபெறும் தாக்குதல்களை கண்டித்தும் தலித் மக்கள் முன்னணியினர் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏராளமான தலித் மக்கள் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தலித் மக்கள் முன்னணி தலைவர் வழக்கறிஞர் திருநாவுக்கரசு பேசுகையில், தமிழகத்தின் புகழ்பெற்ற திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் பல்வேறு வகையான சாதிரீதியாக பாகுபாடு காட்டப்படுகிறது. இது குறித்து தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையம் விசாரணை செய்து வருகிறது. இந்த விசாரணையில் உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தவறினால் தலித் மக்கள் முன்னணி சார்பில் கோவில் அலுவலகம் முன்பு மாபெரும் முற்றுகை போராட்டத்தை விரைவில் நடத்துவோம் என்றார்.

    ×