search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girls"

    • விருதுநகர் மாவட்டத்தில் 2 சிறுமிகள் திடீரென மாயமானார்கள்.
    • வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை.

    விருதுநகர்

    ராஜபாளையம் அருகே உள்ள நத்தனேரியை சேர்ந்தவர் சின்னதுரை(21). தூத்துக்குடி கல்லூரியில் மருத்துவபடிப்பு படித்து வருகிறார். இவரது 16 வயது தங்கை தளவாய்புரத்தில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று தனது தாயிடம் மாடியில் சென்று படிக்க போவதாக சிறுமி கூறி சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து மாடிக்கு சென்று பார்த்தபோது சிறுமி அங்கில்லை.

    எங்கு சென்றார் என்று தெரியவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து சின்னதுரை கொடுத்த புகாரின்பேரில் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரியாபட்டி அருகே உள்ள வேப்பம்குளத்தை சேர்ந்தவர் வள்ளி. இவரது 16 வயது மகள் காரியாபட்டி பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பேக்கிரியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதையடுத்து மகள் வேலை பார்த்த பேக்கரிக்கு வள்ளி போன் செய்து விசாரித்தபோது சிறுமி சம்பளத்தை பெற்றுக்கொண்டு வேலையில் இருந்து நின்று விட்டதாக கூறியுள்ளனர்.

    இதுகுறித்து காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் வள்ளி கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகாசியில் 4 பெண்கள் திடீரென மாயமானார்கள்.
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி முனீஸ்நகரை சேர்ந்தவர் காளிராஜ். இவருக்கு 17 வயது மகள் உள்ளார். இவர்களது வீட்டின் அருகிலேயே காளிராஜின் மாமனார் வீடு உள்ளது.

    காளிராஜின் மகள் அங்கிருக்கும் தனது சித்தி ஆனந்த ஈஸ்வரியை அடிக்கடி சென்று பார்த்து வருவார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த காளிராஜ் மகளை அழைத்து வருவதற்காக மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரது மகளையும், ஆனந்த ஈஸ்வரியையும் காணவில்லை. எங்கு சென்றார்கள்? என்பது தெரியவில்லை.

    இதுகுறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துவேல் மனைவி இசக்கியம்மாள் மற்றும் அவரது மகள் நாகஜோதியையும் காணவில்லை என தெரியவந்தது.

    மேலும் விசாரித்தபோது இந்த 4 பேரும் அந்தப்பகு தியில் உள்ள தனியார் பைனான்ஸ் கம்பெனி முன்பு நின்று பேசிக் கொண்டிருந்ததாக தெரியவந்தது. ஆனால் இந்த 4 பேரும் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்க வில்லை.

    இதையடுத்து பெண்கள் மாயமானது குறித்து காளிராஜ் மாரனேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடமுருட்டி ஆற்றில் துணி துவைத்து குளித்து விட்டு வருவதாக சென்றனர்.
    • சிறுமிகளை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் இறந்து விட்டதாக கூறினார்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஒன்பத்து வேலி, காமராஜ் காலனி, கீழத்தெருவை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி திருநாவுக்கரசு மகள் பிரித்திகா (வயது14) இவர் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அதே தெருவை சேர்ந்த சௌந்தரராஜன் என்பவர் மகள் குணசுந்தரி (16).

    இவர் 10-ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    2 பேரும் நேற்று காலை அருகே உள்ள குடமுருட்டி ஆற்றில் துணி துவைத்து குளித்து விட்டு வருவதாகவும், வீட்டில் இருந்த ஆடுகளை மேய விட்டு வருவதாகவும் சொல்லிவிட்டு ஆடுகளை ஓட்டிக்கொண்டு சென்றனர்.

    நீண்ட நேரம் ஆகியும் இவர்கள் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவர்களை தேடி குடமுருட்டி ஆற்றுப்பகு திக்கு சென்றனர்.

    குடமுருட்டி ஆற்றுப்ப குதியில் சிறுமிகள் கொண்டு சென்ற இரண்டு அலுமினிய பாத்திரங்களும் மணலில் வைக்கப்பட்டிருந்தன.

    துணிகள் துவைத்து காய வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    2 பேரையும் காணவில்லை. உடனடியாக அங்கிருந்த இளைஞர்கள் ஆற்றில் குதித்து தேடினார்கள்.

    அப்போது ஆற்றில் மூழ்கி மயங்கிய நிலையில் இருந்த 2 சிறுமிகளையும் மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் 2 சிறுமிகளையும் பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் இறந்து விட்டதாக கூறினார்கள்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் 2 பேர் பிணத்தை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பிரேதபரிசோதனைக்கு பின்னர் 2 சிறுமிகளின் உடல்களும் ஒன்பத்துவேலி காமராஜர் காலனியில் உள்ள வீட்டிற்கு கொண்டு வந்து வைக்கப்பட்டு உள்ளது.

    அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்க அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
    • திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் உழவாரப்பணி மேற்கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    அதன் தொடர்ச்சியாக திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் உழவாரப்பணி மேற்கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு கோவில் செயல் அலுவலர் முருகையன் தலைமை வகித்தார்.

    செயல் அலுவலர் (பொ) விமலா முன்னிலை வகித்தார்.

    உழவாரப்பணிக் குழு செயலாளர் ஜெயபிரகாஷ் அனைவரையும் வரவேற்றார்.

    நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் உழவாரப்பணி மேற்கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    உழவாரப்பணி குழு அமைப்புச் செயலாளர் எடையூர் மணிமாறன், சர்வாலய உழவாரப்பணிக் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர்துரை ராயப்பன், பத்திரிக்கையாளர் முனைவர் ரவிச்சந்திரன்சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு சிறப்புரையுயாற்றினர்.

    யோகா ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் மாணவிகளுக்கு மூச்சு பயிற்சி கற்றுக் கொடுத்தார்.

    உதவி திட்ட அலுவலர் ஆசிரியை பிரியங்கா, பட்டதாரிஆசிரியர் கழக மாநில பொருளாளர் துரைராஜ், வட்ட தலைவர் சிங்காரவேலு, பொறுப்பு தலைமை ஆசிரியர் முத்துகுமரன் மற்றும் ஆசிரியர்கள் ஆனந்தி ரூபா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் கலந்து கொண்டு கோயிலில் கற்கள், புற்கள் அகற்றினர். திட்ட அலுவலர் ஆசிரியை கலையரசி நன்றி கூறினார்.

    • நடராஜனின் வயலின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விழாவில் பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை முத்ரா இசை மற்றும் நாட்டிய கலாலயம் சார்பில் சலங்கை பூஜை விழா சங்கீத மகாலில் நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா தலைமை தாங்கினார்.

    டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் தமிழ்ப்பல்கலைக்கழக இசைத்துறை பேராசிரியை கற்பகம், பரதநாட்டிய கலைஞர் அருணாசுப்பிரமணியம், மார்னிங் ஸ்டார் மெட்ரிக் பள்ளி தாளாளர் அறிவானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    முத்ரா இசை நாட்டிய கலாலயத்தை சேர்ந்த ராதாமுரளிதரன் வரவேற்றார். விழாவில் மார்னிங் ஸ்டார் பள்ளி மாணவிகள் ஹாசினி, சஹானா, ஸேர்லின்ஹன்சிகா, சிவ ஸ்ரேயா, ஹரிணி, தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சுஷ்மிதா, தாமரை பன்னாட்டு பள்ளி மாணவி ஜெனிட்டாசெலினா, பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா பள்ளி மாணவி ஆதீஷா, சீனிவாசா உயர்நிலைப்பள்ளி மாணவி ஹரிணி, பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி மாணவி ராகினி ஆகியோரின் சலங்கை பூஜை நடைபெற்றது. இதில் ராதாமுரளிதரனின் நாட்டுவாங்கம், ராஜாஸ்ரீவர்ஷனின் வாய்ப்பாட்டு, சதீஷ்குமாரின் மிருதங்கம், நடராஜனின் வயலின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. கதிரவன் வெங்கடசாமி ஒப்பனை செய்தார். நிகழ்ச்சியை வானதி தொகுத்து வழங்கினார். முத்ரா இசை மற்றும் நாட்டிய கலாலய செயலாளர் முரளிதரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இதில் பள்ளி மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • சேலம் குகை பஞ்சாங்கி ஏரி பகுதியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி நேற்று மதியம் வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.
    • இதில் மாயமான 2 சிறுமிகளும் ஈரோட்டில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    சேலம்:

    சேலம் குகை பஞ்சாங்கி ஏரி பகுதியைச் சேர்ந்தவரின் 14 வயது மகள், குகை பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி நேற்று மதியம் வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.

    இதேபோல், குகை பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்த மற்றொரு 14 வயது சிறுமியும் மாயமானார். இதுகுறித்து சிறுமிகளின் தந்தை இருவரும் செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் மாயமான 2 சிறுமிகளும் ஈரோட்டில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஈரோட்டுக்கு விரைந்த போலீசார், சிறுமிகளை மீட்டு வந்து, அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    • போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
    • மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் மதுரை மற்றும் கோவையில் மாநில அளவிலான கலைப்போட்டியில் பங்கேற்கின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலைப்போட்டிகளை பள்ளி கல்வித்துறை நடத்தியது. 6 முதல் 8-ம் வகுப்பு, 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு என 3 பிரிவுகளில் இந்த போட்டி நடைபெற்றது.

    ஓவியப்போட்டி (நுண்கலை), இசைப்போட்டி, பாட்டுப்போட்டி, நடனப்போட்டி, நாடகப்போட்டி, மொழித்திறனுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி என்று 6 வகையான கலைப்போட்டிகள் நடைபெற்றன.

    இதில் திருவள்ளூர் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் புழல் அருகே உள்ள கண்ணப்பசாமி நகர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.

    6 முதல் 8-ம் வகுப்பு வரை நடந்த தனிநபர் நடிப்பு பிரிவில் 6-ம் வகுப்பு மாணவன் அப்துல் பாரிஸ், குழுப்பாடல் போட்டியில் மனிதநேய பாடல் தலைப்பில் சனுஷ்டிக்கா குழுவினர் முதல் பரிசு பெற்றனர். இதேபோல் 9 மற்றும் 10-ம் வகுப்பு பிரிவில் மேற்கத்திய நடனப் போட்டியில் வர்ஷினி குழுவினர் முதல் பரிசை வென்றனர். போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    மாவட்ட அளவில் வெற்றி பெற்ற இவர்கள் மதுரை மற்றும் கோவையில் வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறும் மாநில அளவிலான கலைப்போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 3.36 கோடி பெண்கள் இலவச பயணம் செய்கின்றனர்.
    • திருக்குறளை திருவள்ளுவர் படத்துடன் அனைத்து அரசு பஸ்களிலும் இடம் பெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ராமநாதபுரம்

    முதல்-அமைச்சராக மு. க. ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் 5 திட்டங்களை செயல்படுத்து வதற்கு கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று பெண்களுக்கு டவுன் பஸ்களில் இலவச பயண திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு நிதிசுமை குறைந்து பயனடைவார்கள்.

    இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள், அவருடன் ஒரு உதவியாளர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களும் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இலவசமாக பயணம் செய்பவர்களுக்கு அரசு டவுன் பஸ்களில் கட்டணமில்லா தனி பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் கீழ் 6 டெப்போக்கள் செயல்பட்டு வருகின்றன. டவுன் பஸ்கள் ஏறத்தாழ 120 வழித்தடங்களிலும், புறநகர் பஸ்கள் 200க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் இதுநாள் வரை 3 கோடி 36 லட்சத்து 52 ஆயிரத்து 835 பெண்கள், 2 லட்சத்து 32 ஆயிரத்து 613 மாற்றுத்திறனாளிகள், 10 ஆயிரத்து 411 மாற்றுத்திறனாளிகள் உடன் வரும் உதவியாளர்கள், 12 ஆயிரத்து 767 மூன்றாம் பாலினர்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். நாளொன்றுக்கு சராசரியாக 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை பெண்கள் இத்திட்டத்தின் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் இயங்கும் பஸ்களில் கட்டணமில்லாமல் பயணம் செய்து பயனடைந்து வருகின்றனர்.

    அதே போல, தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் உலகப் பொதுமறையாம் திருக்குறளை அய்யன் திருவள்ளுவர் படத்துடன் அனைத்து அரசு பஸ்களிலும் இடம் பெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி. உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) வினோத் தெரிவித்துள்ளார்.

    • 6-ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் பேச்சு, நடனம் மற்றும் பாடல் போட்டிகளில் தங்களது திறமையை நிரூபித்தனர்.
    • வெற்றி பெற்றவர்கள் வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

    பெருமாநல்லூர் : 

    ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற இருக்கும் கலைப் போட்டியில் பங்கேற்க பெருமாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தங்களது கலைத்திறமையை வெளிப்படுத்தினர் இதில் 6-ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் பேச்சு, நடனம் மற்றும் பாடல் போட்டிகளில் தங்களது திறமையை நிரூபித்தனர்.

    இதில் வெற்றி பெற்றவர்கள் வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.இந்த தகவலை பள்ளியின் தலைமை ஆசிரியை பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

    • சப் -ஜூனியர், ஜூனியர், சீனியர், யூத் ஆகிய நான்கு பிரிவின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.
    • ஒவ்வொரு பிரிவுகளிலும் தலா 10 பேர் என 40 ஆண்கள், 40 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு உள்ளரங்கு மைதானத்தில் 41-வது மாவட்ட சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது . 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியை நேற்று மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தொடங்கி வைத்தார். மாவட்ட சிலம்பா ட்ட கழகம் தலைவர் புனிதா கணேசன், செயலாளர் ஜலேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 560 பேர் கலந்து கொண்டனர். போட்டி யானது ஆண்கள் மற்றும் பெண்க ளுக்கு தனித்தனியாக நடைபெற்றது. சப் -ஜூனியர், ஜூனியர், சீனியர், யூத் ஆகிய நான்கு பிரிவின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.

    இன்று 2-வது நாளாக சிலம்பாட்ட போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    தொடர்ந்து மாலை வரை போட்டி நடைபெறும். முடிவில் ஒவ்வொரு பிரிவுகளிலும் தலா 10 பேர் என 40 ஆண்கள் , 40 பெண்கள் தேர்வு செய்யப்படஉள்ளனர். தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொள்வர்.

    முன்னதாக ஆணையர் சரவணகுமார் சாதனையை பாராட்டி சிலம்பாட்ட கழகம் சார்பில் வரலாற்று பதிவு பட்டயம் வழங்கப்பட்டது.

    • கல்லூரியில் பயிலும் மாணவிகள் தங்குவதற்கான அரசு விடுதி சேலம் சங்கர் நகர் தமிழ் சங்கம் பகுதியில் உள்ளது. இந்த விடுதியை சேர்ந்த மாணவர்கள் தினமும் கல்லூரிக்கு செல்வதற்காக அண்ணா பூங்கா பஸ் ஸ்டாப்பிற்கு வருகின்றனர்.
    • அரசு பஸ்கள் முறையாக தங்களை ஏற்றிச் செல்லாத காரணத்தால் நாள்தோறும் கல்லூரிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக தெரிவித்து இருந்தனர்.

    சேலம்:

    சேலம் கோரிமேடு பகுதியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகள் தங்குவதற்கான அரசு விடுதி சேலம் சங்கர் நகர் தமிழ் சங்கம் பகுதியில் உள்ளது. இந்த விடுதியை சேர்ந்த மாணவர்கள் தினமும் கல்லூரிக்கு செல்வதற்காக அண்ணா பூங்கா பஸ் ஸ்டாப்பிற்கு வருகின்றனர்.

    இந்நிலையில், சமீப காலமாக அரசு பஸ் டிரைவர்கள், அண்ணா பூங்கா பஸ் ஸ்டாப்பில், பஸ்சை நிறுத்துவதில்லை என்றும், பஸ்சில் ஏறினாலும் ஓட்டுநர்கள் கீழே இறங்க வற்புறுத்துவதாகவும் மாணவிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    மேலும் இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாணவிகள் இன்று புகார் அளித்தனர். அதில் அரசு பஸ்கள் முறையாக தங்களை ஏற்றிச் செல்லாத காரணத்தால் நாள்தோறும் கல்லூரிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக தெரிவித்து இருந்தனர்.

    மாணவிகளின் புகார் தொடர்பாக சேலம் கோட்ட போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடியிடம் கேட்டபோது, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    • பள்ளி மாணவ,மாணவிகளுக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் கடந்த 17-ந் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
    • 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஏறி பந்து போட்டியில் பல்லடம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம், மாவட்ட விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பிடித்த விவேகானந்தா பள்ளி மாணவிகள்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ,மாணவிகளுக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் கடந்த 17-ந் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பி.வி.கே.என். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஏறி பந்து போட்டியில் பல்லடம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவிகளை, பள்ளி தாளாளர் சுகந்தி முத்துக்குமார், நிர்வாக அறங்காவலர் பிரேம் அஸ்வத்,முதல்வர் லவ்லின் ராஜகுமாரி, மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள்,மாணவ,மாணவிகள் பாராட்டினர்.

    ×