விளையாட்டுப்போட்டியில் பல்லடம் விவேகானந்தா பள்ளி மாணவிகள் சாதனை

பள்ளி மாணவ,மாணவிகளுக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் கடந்த 17-ந் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஏறி பந்து போட்டியில் பல்லடம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.
மகளிர் ஏறி பந்து போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிகளை படத்தில் காணலாம்.
மகளிர் ஏறி பந்து போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிகளை படத்தில் காணலாம்.
Published on

பல்லடம் :

பல்லடம், மாவட்ட விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பிடித்த விவேகானந்தா பள்ளி மாணவிகள்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ,மாணவிகளுக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் கடந்த 17-ந் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பி.வி.கே.என். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஏறி பந்து போட்டியில் பல்லடம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவிகளை, பள்ளி தாளாளர் சுகந்தி முத்துக்குமார், நிர்வாக அறங்காவலர் பிரேம் அஸ்வத்,முதல்வர் லவ்லின் ராஜகுமாரி, மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள்,மாணவ,மாணவிகள் பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com