search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "French Open"

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ரஷிய வீரர் மெத்வதேவ் பிரேசில் வீரருடன் மோதினார்.
    • இதில் உலகின் நம்பர் 2 வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் இன்றும் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 2 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், 172-ம் நிலை வீரரான பிரேசிலின் தியாகோ செபோத் வைல்டுடன் மோதினார்.

    முதல் செட்டை தியாகோ 7-6 என கைப்பற்றினார். இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டை மெத்வதேவ் 7-6, 6-2 என வென்று பதிலடி கொடுத்தார்.

    இதையடுத்து சுதாரித்துக் கொண்ட தியாகோ 4 மற்றும் 5வது செட்டை 6-3, 6-4 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    சுமார் 4 மணி 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலகின் நம்பர் 2 வீரரான மெத்வதேவ் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

    • கை மற்றும் கணுக்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
    • கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை தவறவிடுவேன் என்பது எனக்கு வேதனை அளிக்கிறது.

    இங்கிலாந்தை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை எம்மா ராடுகானு. 2021-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றவரான அவர், இந்த ஆண்டுக்கான பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கை மற்றும் கணுக்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

    சமீபத்தில் நடந்த மாட்ரிட் ஓபனில் இருந்து கையில் காயத்துடன் வெளியேறி இருந்தார். காயம் காரணமாக அவர் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும் போது, கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை தவறவிடுவேன் என்பது எனக்கு வேதனை அளிக்கிறது.

    என்னை ஆதரித்த என்று ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

    • இந்திய ஜோடி காலிறுதியில் உலகின் நம்பர் 1 ஜோடியை வீழ்த்தியது.
    • அரையிறுதியில் இந்திய ஜோடி கொரிய ஜோடியுடன் மோதியது.

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் கடந்த 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி/சிராக் ஷெட்டி ஜோடி கொரியாவின் சோய் சோல் கியூ மற்றும் கிம் வோன் ஹோ ஜோடியை எதிர்கொண்டது.

    இந்தப் போட்டியில் சாத்விக்- சிராக் ஜோடி 21-18, 21-14 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்று கொரியா வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இதன்மூலம் இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    • இது, இகா ஸ்வியாடெக் வெல்லும் இரண்டாவது பிரெஞ்சு ஓபன் பட்டம்.
    • தொடர்ந்து 35 போட்டிகளில் வெற்றிகளை குவித்த பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    பாரீஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காப்பை எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார் . இது அவர் வெல்லும் இரண்டாவது பிரெஞ்சு ஓபன் பட்டம் ஆகும்.

    பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டியில் பெற்ற வெற்றி மூலம், தொடர்ந்து 35 போட்டிகளில் வெற்றிகளை குவித்த பெருமையை இகா ஸ்வியாடெக் பெற்றுள்ளார். இதன் மூலம் வீனஸ் வில்லியம்சின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.


    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் முன்னணி வீராங்கனைகள் நவோமி ஒசாகா, ஹாலெப் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    3-வது நாளான நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    இதில், ஜப்பான் நாட்டை சேர்ந்த நம்பர் ஒன் புயல் நவோமி ஒசாகா, சுலோவாக்கியா வீராங்கனை அன்ன கரோலினா சிமிட்லோவாவை எதிர்கொண்டார். 

    ஒசாகா 0-6, 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் சிமிட்லோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 



    இதேபோல், ருமேனியா நாட்டை சேர்ந்த நடப்பு சாம்பியனான சிமோனா ஹாலெப், ஆஸ்திரேலியா நாட்டின் டோம்ஜனோவிச்சை எதிர்கொண்டார். ஹாலெப், 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் டோம்ஜனோவிச்சை தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், செர்பியாவின் ஜோகோவிச் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    இதில், 11 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் ஜெர்மனியின் தகுதி சுற்று வீரர் யான்னிக் ஹன்ப்மனை எதிர்கொண்டார். இதில் 6-2, 6-1, 6-3 என்ற நேர்செட்டில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.



    மற்றொரு ஆட்டத்தில், நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் போலந்து வீரர் ஹூபெர்ட் ஹூர்காச்சை எதிர்கொண்டார். இதில், 6-4, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் ஹூர்காச்சை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நான்கு மணி நேரம் போராடியும், 12-ம் நிலை வீரரான மெட்வெதேவால் வெற்றிபெற முடியவில்லை.
    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸில் நேற்று தொடங்கியது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான முதல் சுற்று ஒன்றில் 12-ம் தரநிலையில் உள்ள ரஷியாவைச் சேர்ந்த டேனில் மெட்வெதேவ் பிரான்ஸைச் சேர்ந்த ஹெர்பெர்ட்-ஐ எதிர்கொண்டார்.

    தொடக்கத்தில் தரநிலை பெறாத ஹெர்பெர்ட்டால் 12-ம் நிலை வீரரான மெட்வெதேவின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் மெட்வெதேவ் 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    அதன்பின் ஹெர்பெர்ட் வீறுகொண்டு எழுந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 3-வது செட்டை 6-3, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் 2-2 என இருவரும் சமநிலையில் இருந்தனர். வெற்றியை தீர்மானிக்கும் ஐந்தாவது செட்டில் இருவரும் ஒருவருக்கொருவர் ஈடுகொடுத்து விளையாடினர். இறுதியில் ஹெர்பெர்ட் 7-5 என வெற்றி பெற்று மெட்வெதேவ்-ஐ முதல் சுற்றோடு வெளியேற்றினார்.

    ஐந்து செட்டுகளில் மூன்று மணி நேரம் 54 நிமிடங்கள் போராடி ஏமாற்றம் அடைந்தார் மெட்வெதேவ்.
    பிரெஞ்ச் ஓபனில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 13-ம் நிலை வீரரான வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வியடைந்து முதல் சுற்றோடு வெளியேறினார்.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் நேற்று பாரீஸ் நகரில் தொடங்கியது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் 13-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, தரநிலை பெறாத ரஷியாவின் வெரோனிகா குடேர்மெட்டோவை எதிர்கொண்டார்.

    முதல் செட்டை வோஸ்னியாக்கி 6-0 என எளிதில் வென்றார். பின்னர் அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 2-வது செட்டை வெரோனிகா 6-3 எனக் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டிலும் ஆக்ரோஷம் காட்டினார். 3-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றி வோஸ்னியாக்கியை வெளியேற்றினார்.
    செம்மண் தரையில் நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று தொடங்குகிறது. பெண்கள் பிரிவில் செரீனா சாதனைப் படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஒவ்வொரு ஆண்டும் 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும். முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் கடந்த ஜனவரி மாதம் மெல்போர்னில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் ஜோகோவிச்சும் (செர்பியா), பெண்கள் பிரிவில் ஒசாகாவும் (ஜப்பான்) பட்டம் பெற்றனர்.

    இந்த ஆண்டின் 2-வது கிராண்ட்சிலாம் போட்டியான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் இன்று தொடங்குகிறது. ஜூன் 9-ந்தேதிவரை இந்த போட்டி நடக்கிறது.

    உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச், நடப்பு சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), டொமினிக் தீயெம் (ஆஸ்திரியா), அலெக்ஸாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி) போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

    பெண்கள் பிரிவில் முதல் நிலை வீராங்கனை ஒசாகா, நடப்பு சாம்பியன் சிமோனா ஹாலெப், கரோலினா, கெர்பர் மற்றும் 10-ம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), போன்ற முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.



    பிரெஞ்ச் ஓபன் போட்டியில் நடால் இதுவரை 11 பட்டங்களை வென்றுள்ளார். 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று இருந்தார். அவர் 12-வது முறையாக பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று சாதிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 18-வது கிராண்ட்சிலாம் பட்டத்துக்காக காத்து இருக்கிறார்.

    ஜோகோவிச், பெடரர் ஆகியோர் அவருக்கு கடும் சவாலாக விளங்குவார்கள். பெடரர் 20 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று முதல் இடத்திலும், ஜோகோவிச் 15 பட்டம் வென்று 3-வது இடத்திலும் உள்ளனர்.



    பெண்கள் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் 24-வது கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்று முத்திரை பதிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அவர் இதுவரை 23 பட்டம் வென்றுள்ளார். பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 3 முறை கைப்பற்றி உள்ளார். அவருக்கு ஒசாகா, சிமோனா ஹாலெப், முகுருஜா போன்ற முன்னணி வீராங்கனைகள் கடும் சவாலாக இருப்பார்கள்.
    பிரெஞ்ச் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் சாய்னா நெவால் தோல்வி அடைந்து வெளியேறினார். #SainaNehwal
    பாரீஸ்:

    பிரெஞ்ச் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில், தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சாய்னா நேவால், ‘நம்பர் ஒன்’ வீராங்கனை தாய் ஜூ யிங்குடன் (சீனதைபே) பலப்பரீட்சை நடத்தினார். முதலாவது செட்டில் 20-16 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வெல்வது போல் நெருங்கிய சாய்னா கடைசி கட்டத்தில் கோட்டை விட்டார். இதன் பிறகு 2-வது செட்டில், தாய் ஜூ யிங்கின் ஷாட்டுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சாய்னா ‘சரண்’ அடைந்தார். முடிவில் தாய் ஜூ யிங் 22-20, 21-11 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார். தாய் ஜூ யிங்கை அடக்க முடியாமல் திணறி வரும் சாய்னா அவருக்கு எதிராக கடைசியாக ஆடிய 12 ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வி அடைந்துள்ளார். இதில் கடந்த வாரம் டென்மார்க் ஓபன் இறுதி ஆட்டத்தில் தோற்றதும் அடங்கும். #SainaNehwal
    பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி 2-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். #SrikanthKidambi
    பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி தென்கொரியாவின் லீ டாங் கெயுன்-ஐ எதிர்கொண்டார்.

    முதல் செட்டை 12-21 என எந்தவித போராட்டமின்றி ஸ்ரீகாந்த் கிதாம்பி இழந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்டு விளையாடிய ஸ்ரீகாந்த் 2-வது செட்டை 21-16 எனவும், வெற்றிக்கான 3-வது செட்டை 21-18 எனவும் கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    ஸ்ரீகாந்த் கிதாம்பி காலிறுதியில் நம்பர் வீரரான கேன்டோ மொமோட்டாவை எதிர்கொள்கிறார். கடந்த வாரம் நடைபெற்ற டென்மார்க் ஓபன் அரையிறுதியில் மொமோட்டாவிடம் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    20 கிராண்ட் சிலாமுடன் முதல் இடத்தில் உள்ள பெடரரின் சாதனையை நெருங்குவது பற்றி அதிகமாக சிந்திக்கவில்லை என நடால் கூறியுள்ளார். #RogerFederer #RafaelNadal

    உலகின் நம்பர்-1 வீரரான நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 11-வது முறை யாக கைப்பற்றி சாதித்தார். ஒட்டு மொத்தமாக 17 கிராண்ட் சிலாம் பெற்றுள் £ர். ரோஜர் பெடரர் 20 கிராண்ட் சிலாமுடன் முதல் இடத்தில் உள்ளார். அவ ருக்கு அடுத்தப்படியாக நடால் உள்ளார். பெடரரின் சாதனையை நடால் முறியடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அவர் கூறிய தாவது, ‘பெடரரின் சாதனையை நெருங்குவது பற்றி அதிகமாக சிந்திக்க வில்லை. என்னை பொறுத்த வரை டென்னிஸ் மிகவும் முக்கியமானது தான். ஆனால் அதுமட்டுமே வாழ்க்கை அல்ல. எனது உடல் தகுதி இருக்கும் வரை ஆடுவேன்’ என்றார். #RogerFederer #RafaelNadal

    ×