search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜப்பான்"

    • நிலநடுக்கத்தால் 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.
    • இதுவரை சுனாமி எச்சரிக்கையோ, பொருட் சேதம் குறித்த அறிக்கை இல்லை.

    ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் நேற்று இரவு 6.3 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஜப்பானின் மேற்கே கியூஷூ மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய பகுதியில் நேற்றிரவு 11.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் 8 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இருப்பினும், இதுவரை சுனாமி எச்சரிக்கையோ, பொருட் சேதம் குறித்த அறிக்கையோ வெளியாகவில்லை.

    யுவாஜிமாவிற்கு மேற்கே சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை சுமார் 25 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

    • நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
    • அலைகள் 3 மீட்டர் உயரத்திற்கு கடலில் எழக்கூடும்.

    தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் கடந்த 3-ம் தேதி 7.2 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. நிலம் மற்றும் நீர் பரப்பை ஒட்டிய பகுதியில் உணரப்பட்ட இந்நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

    தைவானில், 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு, 9 பேர் உயிரிழந்தனர். 1,000-த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

    அலைகள் 3 மீட்டர் உயரத்திற்கு கடலில் எழக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டது.

    இந்நிலையில், ஜப்பானின் ஹோன்ஷு நகரில் இன்று 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . இது ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவாகி உள்ளது.

    • ஜப்பானின் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கப்பட்டு 2035-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
    • இந்த திட்டத்திற்கு முதல்கட்டமாக ரூ.27 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    டோக்கியோ:

    ஜப்பானின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமாக மிட்சுபிசி நிறுவனம், அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

    பசுமை புரட்சி, புவி வெப்பமயமாதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உருவாக உள்ள இந்த விமானத்தில் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜின் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜப்பானின் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கப்பட்டு 2035-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்திற்கு முதல்கட்டமாக ரூ.27 லட்சம் கோடி (33 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஒதுக்கப்பட்டுள்ளது.

    • நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
    • திருப்பதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

    ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி உள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து மக்கள் அச்சமடைந்தனர்.

    இதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் திருப்பதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.9 ஆக பதிவாகியுள்ளது. திருப்பதில் இருந்து 58 கிலோமீட்டர் தொலையில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு இரவு 8.43 மணி அளவில் உணரப்பட்டுள்ளது.

    • ராக்கெட் ஏவுதல் பல்வேறு காரணங்களால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.
    • மத்திய ஜப்பானில் உள்ள வகயாமா என்ற மலைப் பகுதியில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது.

    டோக்கியோ:

    ஜப்பானை சேர்ந்த ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் ஒன் என்ற தனியார் விண்வெளி நிறுவனம், ராக்கெட்டை விண்ணில் ஏவ முடிவு செய்தது. இதற்கான ஏற்பாடுகள் அந்நிறுவனம் செய்து வந்தது.

    ராக்கெட் ஏவுதல் பல்வேறு காரணங்களால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தனியார் நிறுவனத்தின் ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது. மத்திய ஜப்பானில் உள்ள வகயாமா என்ற மலைப் பகுதியில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது.

    ஆனால் ராக்கெட் புறப்பட்ட சில வினாடிகளில் திடீரென்று நடுவானில் வெடித்து சிதறியது. இதனால் வானில் பெரும் புகைமூட்டம் ஏற்பட்டது. ராக்கெட்டின் பாகங்கள் கீழே விழுந்ததில் சில இடங்களில் தீப்பிடித்தது, தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர்.


    ஜப்பானில் முதல் முறையாக தனியார் நிறுவனம் ஒன்று ராக்கெட் விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

    இத்திட்டம் வெற்றி பெற்றிருந்தால் ஜப்பானில் ராக்கெட்டை விண்ணில் செலுத்திய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் ஒன் நிறுவனம் பெற்றிருக்கும்.

    ராக்கெட் வெடித்து சிதறியதற்கான காரணம் குறித்து அந்நிறுவனம் உடனடியாக பதில் அளிக்கவில்லை.

    • அடுத்ததாக கார்த்தி அவரின் 26-வது படத்தில் நடித்து வருகிறார்
    • பூஜை விழா நடைப்பெற்று முடிந்த நிலையில் அதன் வீடியோ நாளை மாலை 5 மணிக்கு வெளியிட போவதாக பட குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கார்த்தியின் 25-வது படமான ஜப்பான் வெளியானது. இதை ராஜூ முருகன் இயக்கியிருந்தார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. கார்த்தி மற்றும் அனு இம்மானுவேல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், ஜப்பான் படம் அதனை பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில் அடுத்ததாக கார்த்தி அவரின் 26-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்குகிறார். நலன் குமாரசாமி எடுத்த இந்த இரண்டு திரைப்படமுமே மிகவும் வித்தியாசமான படம் மிக பெரிய வசூலை ஈட்டியது . அதனால் அவர் கார்த்தியை வைத்து இயக்கும் இந்த படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது  இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் பூஜை விழா நடைப்பெற்று முடிந்த நிலையில் அதன் வீடியோ நாளை மாலை 5 மணிக்கு வெளியிட போவதாக பட குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.



     


    • வரவேற்பு அட்டைகளை கைகளில் ஏந்தியும்,பூங்கொத்து வழங்கியும் உற்சாக வரவேற்பு
    • ஜப்பான் ரசிகர்களை பார்த்து கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

    தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்புக்கும்,நடனத்திற்கும் எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர்.

    தெலுங்கில்ஆரம்பித்து தமிழில் கலக்கி தற்போது ஹிந்தியிலும் வெற்றிநடை போட்டு வரும் நடிகை ராஷ்மிகா அதிகம் பயணம் மேற்கொள்ளக்கூடியவர் என கூறப்படுகிறது.இப்படி உலகம் சுற்றும் பறவையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா ஜப்பான் நாட்டிற்கு சென்று உள்ளார்.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்Crunchyroll Anime Awards-2024 விருது வழங்கும் விழா நாளை (2-ந்தேதி) நடைபெற உள்ளது.இந்தநிகழ்ச்சிக்காக ராஷ்மிகா ஜப்பான் சென்றார். டோக்கியோ விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் அவருக்கு பெரும்வரவேற்பு கிடைத்தது. 

    ஜப்பான் ரசிகர்கள் ராஷ்மிகா புகைப்படங்களுடன் வடிவமைக்கப்பட்ட வரவேற்பு அட்டைகளை கைகளில் ஏந்தியும்,பூங்கொத்து வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    ஜப்பான் ரசிகர்கள் தன் மீது காட்டும் அன்பால் திகைத்துப்போன ராஷ்மிகா கைகளை அசைத்து மகிழ்ச்சியைவெளிப்படுத்தினார்.ஜப்பான் ரசிகர்களுக்கு தனது கைப்பட 'ஆட்டோகிராப்' எழுதி வழங்கினார்.இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

    • ரூ. 25 லட்சம் தொகையை நடிகர் கார்த்தி வழங்கினார்.
    • உதவிவும் எண்ணம் கொண்ட பலர் இருக்கிறார்கள்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் கார்த்தி. சமீபத்தில் இவர் நடித்த 25-வது படம் வெளியானது. இந்த படம் தொடர்பான விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, 25-வது பட வெளியீட்டை கொண்டாடும் வகையில் ரூ. 1 கோடி வரை உதவித் தொகை வழங்குவதாக அறிவித்து இருந்தார்.

    நடிகர் கார்த்தியின் 25-வது பட வெளியீட்டை ஒட்டி, அவரது ரசிகர்கள் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கியதோடு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். அதன்படி, இன்று நடைபெற்ற விழாவில் 25 சமூக செயற்பாட்டாளர்களின் செயல்களை கெளரவப்படுத்தி, தலா 1 லட்சம் வீதம் ரூ. 25 லட்சம் தொகையை நடிகர் கார்த்தி வழங்கினார்.

     


    இந்த விழாவில் பேசிய அவர், "உதவி பண்ண வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட பல பேர் இருக்கிறார்கள். ஆனால் யார் மூலமாக உதவி செய்வது என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கிறது. பலரிடம் பணம் இருக்கிறது நேரம் இல்லை."

    "அப்படி தங்களது பொன்னான நேரத்தை செலவழித்து உதவி தேவைப்படுபவர்களை தேடிச் சென்று உதவி செய்யும் தன்னார்வலர்கள் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம் என்று சொல்லலாம். இதன் மூலம் இவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள, உதவி செய்ய மனம் படைத்த வசதியானவர்களுக்கு இவர்களைப் பற்றி தெரிய வரும். இந்த பணி இன்னும் தொடரும்," என்று தெரிவித்தார்.

    • விமானங்கள் ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு சொந்தமானவை ஆகும்.
    • விமான விபத்துகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.

    ஜப்பான் விமான நிலையத்தில் இரு விமானங்கள் உரசி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. திடீர் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் உரசி கொண்ட விமானம் ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு சொந்தமானவை என்று தெரியவந்துள்ளது.

    ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு சொந்தமான இரு விமானங்கள் ஒசகாவில் உள்ள இடாமி விமான நிலையத்தில் உரசி கொண்டுள்ளன. இந்த சம்பவம் காரணமாக இரு விமானங்களின் இறக்கை பகுதியில் கீறல்கள் ஏற்பட்டன. எனினும், இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இந்த ஆண்டு துவக்கம் முதலே ஜப்பானில் விமான விபத்துகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், சிறிய ரக விமானம் ஒன்று ஜனவரி 2-ம் தேதி விபத்தில் சிக்கிய சம்பவம் அரங்கேறியது.

    • ஜப்பான் அனுப்பிய ஸ்லிம் விண்கலத்தின் லேண்டர் வாகனம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
    • அமெரிக்கா, சீனா, இந்தியாவை தொடர்ந்து 5-வது நாடாக ஜப்பானும் நிலவில் தரையிறங்கி சாதனை புரிந்துள்ளது.

    புதுடெல்லி:

    ஜப்பான் அனுப்பிய விண்கலத்தின் லேண்டர் வாகனம் (ஸ்லிம்) நேற்று வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது.

    இதன்மூலம் அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா, இந்தியாவை தொடர்ந்து 5-வது நாடாக ஜப்பானும் நிலவில் தரை இறங்கி சாதனை புரிந்துள்ளது.

    இந்நிலையில், நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய ஜப்பானுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்த ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் மற்றும் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு வாழ்த்துக்கள். விண்வெளி ஆராய்ச்சியில் ஜப்பானுடன் இணைந்து பணியாற்றுவதை இஸ்ரோ எதிர்நோக்கியுள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் லேண்டரை தரையிறக்கியது.
    • லேண்டர் 100 மீட்டர் தொலைவில் இருந்து தரையிறங்கியது.

    ஜப்பானின் ஸ்மார்ட் லேன்டர் ஃபார் இன்வெஸ்டிகேடிங் மூன் (SLIM) நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இவ்வாறு நிலவில் தரையிறங்கிய 5-வது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றிருக்கிறது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் இந்தியாவின் சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதைத் தொடர்ந்து நிலவில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது. ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையம் 100 மீட்டர் தொலைவில் இருந்து நிலவில் லேண்டரை தரையிறங்க முயற்சித்தது.

    தற்போது லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், இந்த விண்கலம் தனது செயல்பாடுகளில் வெற்றி பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ள ஒரு மாத காலம் வரை ஆகலாம் என ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. 

    • இந்திய மகளிர் அணி அரையிறுதியில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது.
    • 3-வது இடத்துக்கான போட்டியில் முதல் பாதியில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

    இந்த ஆண்டில் பாரிசில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறுவதற்கான எஃப்எச் மகளிர் ஒலிம்பிக் குவாலிபயர் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    இதில், இந்தியா - ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டத்தில், இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்த நிலையில் போட்டியானது 2-2 என சமநிலை அடைந்தது. இதனால் பெனால்டி முறை பின்பற்றப்பட்டது. இதில் 4-3 என்ற கணக்கில் ஜெர்மனி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவுடன் இணைந்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றது.

    தோல்வியடைந்தாலும் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற இந்திய அணிக்கு மற்றொரு வாய்ப்பு இருந்தது. அது என்னவென்றால் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஜப்பானை இந்தியா வீழ்த்த வேண்டும்.

    இந்நிலையில் இந்தியா- ஜப்பான் அணிகள் இன்று மோதியது. இதில் முதல் பாதியில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணியின் ஒலிம்பிக் கனவு இதோடு முடிவுக்கு வந்தது. 

    ×