search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tsunami warning"

    • கடலுக்கடியில் 9.3 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    அலாஸ்கா தீபகற்ப பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலநடுக்கமானது, கடலுக்கடியில் 9.3 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    பசிபிக் பெருங்கடலில் உள்ள நியூ கலிடோனியா தீவில் 7.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள மூன்று தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #Fiji #TSunami
    சிட்னி:

    பசிபிக் பெருங்கடலில் உள்ள நியூ கலிடோனியா தீவில் 7.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலில் சுமார் 24 கிலோ மீட்டர் ஆழத்தினை மையமாக கொண்டு இந்த நில நடுக்கம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள பிஜி, வானட்டு தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சுமார் 1 மீட்டர் உயரத்திலான அலைகள் வீசலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதன் காரணமாக பேரிடர் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. 
    இந்தோனேசியாவை இன்று மாலை குலுக்கிய 7 ரிக்டர் நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை பின்னர் திரும்பப்பெறப்பட்டது. #Indonesiaquake #Indonesialiftstsunamiwarning
    ஜகர்தா:

    பல்வேறு தீவுகளை கொண்ட இந்தோனேசியா நாடு அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில், சுமத்ராவை ஒட்டியுள்ள பாலி மற்றும் லம்பாக்  தீவின் அருகே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்தது.

    இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்து கொண்டு தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

    கடந்த வாரம் இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 17 பேர் பலியான நிலையில் இன்றைய நிலநடுக்கத்துக்கு பின்னர் இந்தோனேசிய அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பின்னர் இந்த சுனாமி எச்சரிக்கை திரும்பப்பெறப்பட்டது.

    பாலி மற்றும் லம்பாக் நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் வழக்கம்போல் விமான போக்குவரத்து நடைபெற்று வருவதாக இந்தோனேசியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Indonesiaquake #Indonesialiftstsunamiwarning 
    ×