என் மலர்
செய்திகள்

இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை திரும்பப்பெறப்பட்டது
இந்தோனேசியாவை இன்று மாலை குலுக்கிய 7 ரிக்டர் நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை பின்னர் திரும்பப்பெறப்பட்டது. #Indonesiaquake #Indonesialiftstsunamiwarning
ஜகர்தா:
பல்வேறு தீவுகளை கொண்ட இந்தோனேசியா நாடு அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுமத்ராவை ஒட்டியுள்ள பாலி மற்றும் லம்பாக் தீவின் அருகே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்து கொண்டு தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

கடந்த வாரம் இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 17 பேர் பலியான நிலையில் இன்றைய நிலநடுக்கத்துக்கு பின்னர் இந்தோனேசிய அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பின்னர் இந்த சுனாமி எச்சரிக்கை திரும்பப்பெறப்பட்டது.
பாலி மற்றும் லம்பாக் நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் வழக்கம்போல் விமான போக்குவரத்து நடைபெற்று வருவதாக இந்தோனேசியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Indonesiaquake #Indonesialiftstsunamiwarning
Next Story






