என் மலர்tooltip icon

    உலகம்

    ஜப்பானில் டோக்கியோ சந்தையில் ரூ.28 கோடிக்கு ஏலம் போன டுனா மீன்
    X

    ஜப்பானில் டோக்கியோ சந்தையில் ரூ.28 கோடிக்கு ஏலம் போன டுனா மீன்

    • ஓமா கடற்பகுதியில் பிடிக்கப்பட்ட புளுபின் டுனா மீன் அங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
    • 243 கிலோ எடை கொண்ட டுனா மீனை ஏலம் விட்டதும் போட்டிபோட்டு மக்கள் வாங்க முயன்றனர்.

    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் டோயோசு மீன் சந்தை செயல்படுகிறது. ஓமா கடற்பகுதியில் பிடிக்கப்பட்ட புளுபின் டுனா மீன் அங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மீன் அதன் தனித்துவமான சுவைக்கு பெயர்போனது. இதனை வாங்குவதற்கு எப்போதும் கடுமையான போட்டி நிலவும்.

    அதன்படி புத்தாண்டை முன்னிட்டு இந்த சந்தையில் ஏலம் நடைபெற்றது. அப்போது 243 கிலோ எடை கொண்ட டுனா மீனை ஏலம் விட்டதும் போட்டிபோட்டு மக்கள் வாங்க முயன்றனர். இதன்முடிவில் அந்த மீன் சுமார் ரூ.28 கோடிக்கு விற்பனையானது. இதனை சுஷி ஜான்மாய் என்ற ஓட்டலின் உரிமையாளரான கியோஷி கிமுரா வாங்கினார். இதன்மூலம் கடந்த புத்தாண்டின் சாதனையான ரூ.11 கோடி இந்த முறை முறியடிக்கப்பட்டது.

    Next Story
    ×