என் மலர்
நீங்கள் தேடியது "Iga Swiatek"
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேறினார்.
- ஏற்கனவே பெலாரசின் அரினா சபலென்கா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஸ்பெயின்:
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், குரோசியா வீராங்கனை பெட்ரோ மாட்ரிக்குடன் மோதினார்.
இதில் இகா ஸ்வியாடெக் 6-0, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் கிரேக்க வீராங்கனை மரியா சக்காரி, ரோமானிய வீராங்கனை இரினா கமாலியா பிகுவுடன் மோதினார்.
இதில், முதல் செட்டை இழந்த சக்காரி அடுத்த இரு சுற்றுகளை கைப்பற்றி அசத்தினார். இறுதியில், சக்காரி 6-7, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- மணிக்கு அதிகபட்சமாக 190 கிலோமீட்டர் வேகத்தில் சர்வீஸ் போட்டு மிரட்டிய ரைபகினா முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வசப்படுத்தினார்.
- அவரது தற்காப்பு யுக்தியும் சிறப்பாக இருக்கும். அதனால் முதல் வினாடியில் இருந்தே ஆக்ரோஷமாக விளையாட வேண்டியது அவசியமாக இருந்தது.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருந்த 'நம்பர் ஒன்' வீராங்கனையும், கடந்த ஆண்டில் இரு கிராண்ட்ஸ்லாம் வென்றவருமான இகா ஸ்வியாடெக் (போலந்து), 25-ம் நிலை வீராங்கனையும், விம்பிள்டன் சாம்பியனுமான எலினா ரைபகினாவுடன் (கஜகஸ்தான்) பலப்பரீட்சை நடத்தினார்.
மணிக்கு அதிகபட்சமாக 190 கிலோமீட்டர் வேகத்தில் சர்வீஸ் போட்டு மிரட்டிய ரைபகினா முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வசப்படுத்தினார். 2-வது செட்டில் தொடக்கத்தில் 3-0 என்று முன்னிலை கண்ட ஸ்வியாடெக் அதன் பிறகு கோட்டை விட்டார். முடிவில் ரைபகினா 6-4, 6-4 என்ற நேர் செட்டில் 89 நிமிடங்களில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபனில் முதல்முறையாக கால்இறுதியில் கால்பதித்தார்.

இகா ஸ்வியாடெக்
தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள வீராங்கனையை ரைபகினா தோற்கடித்தது இதுவே முதல் முறையாகும். 23 வயதான ரைபகினா கூறுகையில், 'நம்பர் ஒன் வீராங்கனைக்கு எதிராக விளையாடும் போது நாம் இழப்பதற்கு எதுவும் இல்லை. அவர் பந்தை வேகமாக ஓடி திருப்பி அடிக்கக்கூடியர்.
அவரது தற்காப்பு யுக்தியும் சிறப்பாக இருக்கும். அதனால் முதல் வினாடியில் இருந்தே ஆக்ரோஷமாக விளையாட வேண்டியது அவசியமாக இருந்தது. அதனால் தொடக்கம் முதலே அதிரடியாக மட்டையை சுழற்றினேன். இந்த முயற்சிக்கு உண்மையிலேயே பலன் கிடைத்தது' என்றார்.
- டென்னிஸ் போட்டி வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை டபிள்யூ.டி.ஏ. வெளியிட்டு வருகிறது.
- இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் மகளிர் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
பாரீஸ்:
டென்னிஸ் போட்டியில் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை டபிள்யூ.டி.ஏ. வெளியிட்டு வருகிறது. நேற்று முன்தினம் நடந்த சான் டீகோ ஓபன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், குரோசியா நாட்டின் டோன்னா வெகிச் என்பவரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்நிலையில், மகளிர் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் இகா ஸ்வியாடெக் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இது, நடப்பு ஆண்டில் அவர் பெறும் 64-வது சாதனை வெற்றியாகும்.
இந்த தரவரிசை பட்டியலில் ஆன்ஸ் ஜேபியர் 2-வது இடத்திலும், ஆனெட் கொன்டாவிட் 3-வது இடத்திலும், ஆரைனா சபலென்கா 4-வது இடத்திலும், ஜெஸ்சிகா பெகுலா 5-வது இடத்திலும் உள்ளனர்.
- 28 வயதான ஜபேர் முதல் முறையாக அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.
- 2 முறை பிரெஞ்சு ஓபன் பட்டத்தை கைப்பற்றிய ஸ்வியாக்டெக் ஒட்டு மொத்தத்தில் 3-வது தடவையாக கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளார்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 5-வது வரிசையில் உள்ள ஆன்ஸ் ஜபேர் (துனிசியா) -கரோலின் கார்சியா (பிரான்ஸ்) மோதினார்கள்.
இதில் ஜபேர் 6-1 , 6-3 என்ற நேர் செட் கணக்கில் 17-ம் நிலை வீராங்கனையான கார்சியாவை எளிதில் வென்று இறுதிப்போட்டி தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 6 நிமிட நேரம் தேவைப்பட்டது.
28 வயதான ஜபேர் முதல் முறையாக அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். ஜூலை மாதம் நடந்த விம்பிள்டனில் அவர் இறுதிப் ஆட்டத்துக்கு தகுதிபெற்ற முதல் ஆப்பிரிக்க வீராங்கனை என்ற சாதனையை படைத்து இருந்தார். தற்போது 2-வது முறையாக கிராண்ட்சிலாம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த தோல்வியால் கார்சியாவின் முதல் இறுதிப்போட்டி கனவு கலைந்தது.
மற்றொரு அரை இறுதியில் நம்பர் ஒன் வீராங்கனையான இகாஸ்வியாடெக் (போலந்து),-ஷபலென்கா (பெலாரஸ்) மோதினார்கள்.
6-வது வரிசையில் உள்ள ஷபலென்கா முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் வென்று அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் ஸ்வியாடெக் சுதாரித்து ஆடி தொடர்ச்சியாக 2 செட்டையும் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். ஸ்கோர் 3-6, 6-1, 6-4.
21 வயதான அவர் அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முதல் தடவையாக முன்னேறி உள்ளார். 2 முறை பிரெஞ்சு ஓபன் பட்டத்தை கைப்பற்றிய ஸ்வியாக்டெக் ஒட்டு மொத்தத்தில் 3-வது தடவையாக கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளார்.
ஷபலென்காவின் இறுதிப்பேரட்டி கனவு 3-வது முறையாக தகர்ந்துள்ளது. இறுதி போட்டியில் ஸ்வியாடெக்-ஆன்ஸ் ஜபேர் மோதுகிறார்கள்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெறும் அரை இறுதி ஆட்டங்களில் கேஸ்பர் ரூட் (நார்வே)-கரென் கச்சனோவ் (ரஷியா), கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்)-பிரான் செஸ்டியாபோ (அெமரிக்கா) மோதுகிறார்கள்.
- பெகுலா 4-வது தடவையாக கிராண்ட்சிலாமில் கால் இறுதியில் தோல்வியை தழுவினார்.
- கால்இறுதி ஆட்டத்தில் 6-வது வரிசையில் இருக்கும் அர்யனா ஷபலென்கா ( பெலாரஸ்)-கரோலினா பிளிஸ்கோவா ( செக் குடியரசு ) மோதினார்கள்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) கால் இறுதியில் அமெரிக்காவை சேர்ந்த 8-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலாவை எதிர் கொண்டார்.
இதில் இகா 6-3, 7-6 (7-4) என்ற நேர்செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். நடப்பு பிரெஞ்சு ஓபன் சாம்பியனான அவர் முதல்முறையாக அமெரிக்க ஓபனில் அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளார்.
பெகுலா 4-வது தடவையாக கிராண்ட்சிலாமில் கால் இறுதியில் தோல்வியை தழுவினார். இந்த முறையும் அவரது முதல் அரையிறுதி கனவு கலைந்தது.
மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் 6-வது வரிசையில் இருக்கும் அர்யனா ஷபலென்கா ( பெலாரஸ்)-கரோலினா பிளிஸ்கோவா ( செக் குடியரசு ) மோதினார்கள்.
இதில் ஷபலென்கா 6-1, 7-6 (7-4) என்ற நேர் செட் கணக்கில் 22-ம் நிலை வீராங்கனையான பிளிஸ்கோவாவை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் தொடர்ச்சியாக 2-வது முறையாக அமெரிக்க ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
நாளை நடைபெறும் அரை இறுதி ஆட்டங்களில் ஒன்ஸ் ஜாபியுர் (துனிசியா)-கரோலின் கார்சியா (பிரான்ஸ்) , இகாஸ்வியா டெக்-ஷபலென்கா மோதுகிறார்கள்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 9-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா)-பிரான்செஸ் டியாபோ (அமெரிக்கா) மோதினார்கள்.
இதில் டியாபோ 7-6 (7-3), 7-6, (7-0), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். 22-வது வரிசையில் உள்ள அவர் 4-வது சுற்றில் முன்னணி வீரரான ரபெல் நடாலை வீழ்த்தி இருந்தார். தற்போது ருப்லெவை தோற்கடித்து உள்ளார்.
டியாபோ முதல் முறையாக கிராண்ட்சிலாம் அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறார். இதற்கு முன்பு 2019-ல் ஆஸ்திரேலிய ஓபனில் கால் இறுதி வரை நுழைந்ததே சிறந்ததாக இருந்தது. ரூப்லெவின் முதல் அரை இறுதி கனவு தகர்ந்தது. அவர் 6-வது தடவையாக கிராண்ட்சிலாம் கால் இறுதியில் தோற்றுள்ளார்.
டியாபோ அரை இறுதியில் அல்காரஸ் (ஸ்பெயின்) அல்லது சின்னரை (இத்தாலி) சந்திக்கிறார்.
- முதல் செட்டை நடால் 2-6 என்ற கணக்கில் நடால் இழந்தார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் (போலந்து) 2-வது சுற்றில் ஸ்டெப்ஹென்சை எதிர்கொண்டார்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளவரும், 22 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 2-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த பேபியோ போக்னியை எதிர் கொண்டார்.
இதன் முதல் செட்டை நடால் 2-6 என்ற கணக்கில் இழந்தார். அதன் பின்னர் அவர் சுதாரித்து விளையாடி தொடர்ந்து 3 செட்களில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஸ்கோர் 2-6, 6-4, 6-2, 6-1.
மற்ற ஆட்டங்களில் 3-வது வரிசையில் உள்ள கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 11-ம் நிலை வீரரான சின்னர் (இத்தாலி), ஆகியோர் வெற்றி பெற்றனர்.
17-வது வரிசையில் இருக்கும் டிமிட்ரோவ் (பல்கேரியா), போர்னா கோரிக் (குரோஷியா) ஆகியோர் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) 2-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டெப்ஹென்சை எதிர் கொண்டார். இதில் இகா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இன்னொரு ஆட்டத்தில் 9-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா 6-4 , 6-4 என்ற நேர் செட் கணக்கில் அலியா சாண்ட்ராவை ( பெலாரஸ்) வீழ்த்தினார்.
மற்ற ஆட்டங்களில் 6-வது இடத்தில் உள்ள ஷபலென்கா (பெலாரஸ்) 9-வது வரிசையில் உள்ள முகுருஜா (ஸ்பெயின்), 19-ம் நிலை வீராங்கனையான டேனிலி கோலின்ஸ் ( அமெரிக்கா ) , 21-வது வரிசையில் உள்ள பெட்ரோ கிவிட்டோவா ( செக் குடியரசு ) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
4-வது வரிசையில் உள்ள பவுலா படோசா (ஸ்பெயின்) 7-6, (7-5), 1-6, 2-6 என்ற கணக்கில் பெட்ரோ மேட்ரிக்கிடம் (குரோஷியா) அதிர்ச்சிகரமாக தோற்றார்.
- சர்வதேச டென்னிசில் அவர் தொடர்ச்சியாக பெற்ற 37-வது வெற்றி இதுவாகும்.
- முன்னணி வீரர் பாடிஸ்டா அகுத் (ஸ்பெயின்) கொரோனா பாதிப்பு காரணமாக கடைசி நேரத்தில் விலகினார்.
லண்டன்:
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்றில் 5-ம் நிலை வீரர் சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-2,6-3,6-7 என்ற நேர் செட்டில் ஜோர்டான் தாம்சனை (ஆஸ்திரேலியா) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னணி வீரர் பாடிஸ்டா அகுத் (ஸ்பெயின்) கொரோனா பாதிப்பு காரணமாக கடைசி நேரத்தில் விலகியதால் அவரை எதிர்த்து ஆட இருந்த டேனியல் காலன் (கொலம்பியா) களம் இறங்காமலேயே 3-வது சுற்றை எட்டினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் போராடி பட்டினாமா கெர்கோவை (நெதர்லாந்து) வெளியேற்றி 3-வது சுற்றுக்குள் கால்பதித்தார். சர்வதேச டென்னிசில் அவர் தொடர்ச்சியாக பெற்ற 37-வது வெற்றி இதுவாகும்.
- இது, இகா ஸ்வியாடெக் வெல்லும் இரண்டாவது பிரெஞ்சு ஓபன் பட்டம்.
- தொடர்ந்து 35 போட்டிகளில் வெற்றிகளை குவித்த பெருமையை அவர் பெற்றுள்ளார்.
பாரீஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காப்பை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார் . இது அவர் வெல்லும் இரண்டாவது பிரெஞ்சு ஓபன் பட்டம் ஆகும்.
பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டியில் பெற்ற வெற்றி மூலம், தொடர்ந்து 35 போட்டிகளில் வெற்றிகளை குவித்த பெருமையை இகா ஸ்வியாடெக் பெற்றுள்ளார். இதன் மூலம் வீனஸ் வில்லியம்சின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.