search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coco Gauff"

    • ஒரு காலிறுதி ஆட்டத்தில் போலந்து வீராங்கை இகா ஸ்வியாடெக் டென்மாரிக்கின் கரோலின் வோஸ்னியாக்கி உடன் மோதினார்.
    • முதல் செட்டை 6-4 என இகா ஸ்வியாடெக் கைப்பற்றினார்.

    கலிபோர்னியா:

    இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு காலிறுதி ஆட்டத்தில் போலந்து வீராங்கை இகா ஸ்வியாடெக் டென்மாரிக்கின் கரோலின் வோஸ்னியாக்கி உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-4 என இகா ஸ்வியாடெக் கைப்பற்றினார். இதையடுத்து நடைபெற்ற 2வது செட்டில் 1-0 என ஸ்வியாடெக் முன்னிலையில் இருந்த போது காயம் காரணமாக கரோலின் வோஸ்னியாக்கி வெளியேறினார். இதன் மூலம் ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப் சீனாவின் யுவான் யுஇ உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோகோ காப் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் யுவான் யுஇ-யை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடந்தது.
    • இந்த இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் வென்றார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகா காப்புடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை சபலென்கா 6-2 என வென்றார். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட கோகோ காப் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் கோகோ காப் மற்றும் வோஸ்னியாக்கி வெற்றி பெற்றுள்ளனர்.
    • கோகோ காப் 3-6, 6-2 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதலாவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் ஜெர்மன் வீராங்கனை லாரா சீக்மண்ட் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை சீக்மண்ட் கைப்பற்றி கோகோ காப்பிற்கு அதிர்ச்சி அளித்தார். பின்னர் எழுச்சி பெற்ற காப் கடைசி 2 செட்களையும் எளிதில் கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த போட்டி முடிவில் கோகோ காப் 3-6, 6-2 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    இதில் நடந்த மற்றொரு போட்டியில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான டென்மார்கை சேர்ந்த கரோலின் வோஸ்னியாக்கி ரஷிய வீராங்கனை டாட்டியானா பிரோசோரோவா உடன் பலபரீட்சை நடத்தினார். இதில் கரோலின் வோஸ்னியாக்கி 6-3 மற்றும் 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    • கோகோ காப் அரையிறுதியில் லியுட்மிலா சாம்சோனோவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
    • நடந்து முடிந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ராக் க்ரீக் பூங்காவின் வில்லியம் எச்.ஜி. பிட்ஸ்ஜெரால்ட் டென்னிஸ் மைதானத்தில் வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்தது. இந்த தொடர் ஜூலை 29-ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது.

    இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் அமெரிக்க இளம் வீராங்கனையான கோகோ காப், கிரீஸ் நாட்டை சேர்ந்த மரியா சக்காரியா உடன் பலப்பரீட்சை நடத்தினார். கோகோ காப் அரையிறுதியில் லியுட்மிலா சாம்சோனோவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். மரியா சக்காரியா, ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

    கோகோ காப் நேற்று நடந்த இறுதி போட்டியில் முதல் இரண்டு செட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். 1 மணி நேரம் 24 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் கோகோ காப் 6-2 மற்றும் 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். நடந்து முடிந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறினார். அதன் பின் நடந்த இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார்.

    • சுவிட்டோலினா (உக்ரைன்) 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    • 7-வது வரிசையில் இருக்கும் கோகோ கவூப்பூம் (அமெரிக்கா) தொடக்க சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று தொடங்கியது.

    விம்பிள்டன் பட்டத்தை 5 முறை வென்ற முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

    சுவிட்டோலினா (உக்ரைன்) 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல 7-வது வரிசையில் இருக்கும் கோகோ கவூப்பூம் (அமெரிக்கா) தொடக்க சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்றார். சோபியா கெனின் 6-4, 4-6, 6-2 என்ற கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த கவூப்பை வீழ்த்தினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்ற ஆட்டங்களில் முதல்நிலை வீராங்கனையான இகாஸ்வியா டெக் (போலந்து), 4-வது வரிசையில் உள்ள பெகுலா (அமெரிக்கா), கரோலினோ கார்சியா (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது வரிசையில் உள்ள கேஸ்பர் ரூட் (நார்வே) தொடக்க சுற்றில் பிரான்சை சேர்ந்த லவுரென்ட் லோகோலியை எதிர்கொண்டார். இதில் கேஸ்பர் ரூட் 6-1, 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார்.

    • இது, இகா ஸ்வியாடெக் வெல்லும் இரண்டாவது பிரெஞ்சு ஓபன் பட்டம்.
    • தொடர்ந்து 35 போட்டிகளில் வெற்றிகளை குவித்த பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    பாரீஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காப்பை எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார் . இது அவர் வெல்லும் இரண்டாவது பிரெஞ்சு ஓபன் பட்டம் ஆகும்.

    பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டியில் பெற்ற வெற்றி மூலம், தொடர்ந்து 35 போட்டிகளில் வெற்றிகளை குவித்த பெருமையை இகா ஸ்வியாடெக் பெற்றுள்ளார். இதன் மூலம் வீனஸ் வில்லியம்சின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.


    ×