search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "France"

    ஐரோப்பிய யூனியன் அமல்படுத்தி இருக்கும் பயனரின் புதிய டேட்டா விதிமுறைகளை பின்பற்றாததால் கூகுள் நிறுவனத்திற்கு சுமார் ரூ.462 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #Google



    ஐரோப்பா சமீபத்தில் விதித்த கடுமையான டேட்டா தனியுரிமை விதிகளை மீறியதாக கூகுள் நிறுவனத்தின் மீது பிரான்ஸ் அரசு ரூ.4,62,49,03,172 கோடி அபராதம் விதித்துள்ளது. 

    பயனரின் தகவல்கள் எவ்வாறு சேகரிக்கப்படுகிறது என்றும் அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்ற விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை என கூகுள் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் தனிப்பட்ட முறையில் பிரத்யேக விளம்பரங்களை வழங்க வாடிக்கையாளர்களிடம் முறையான அனுமதி பெறவில்லை என்றும் கூகுள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.



    கூகுள் நிறுவனம் ஐரோப்பாவின் பொது தகவல் பாதுகாப்பு கட்டுப்பாடு (GDPR) விதிகளை மீறியதைத் தொடர்ந்து பிரான்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கூகுள், ஃபேஸ்புக், அமேசான் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களை நெறிப்படுத்தும் வகையில் உலகில் மேற்கொள்ளப்பட்ட முதல் அமைத்தாக GDPR இருக்கிறது.

    இந்த அமைப்பு தொழில்நுட்ப நிறுவனங்கள் பயனர் விவரங்களை சேகரிப்பது பற்றிய விதிமுறைகளை சரியாக பின்பற்றுகின்றதா என்பதை கவனிக்கிறது. ஐரோப்பியா விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப கூகுள் தனது தளத்தில் மாற்றம் செய்திருந்தாலும், பிரான்ஸ் மேற்கொண்ட நடவடிக்கை போதுமானதாக இல்லை என GDPR தெரிவித்துள்ளது.

    கூகுள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு மற்றும் அபராதம் பற்றி கூகுள் இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை.
    பிரான்சில் மஞ்சள் அங்கி போராட்டம் மீண்டும் வலுப்பெற்றது. பல இடங்களில் வன்முறை வெடித்தது. #France #YellowVest #Protest
    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டில், சுற்றுச்சூழலை காரணம் காட்டி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை அரசு உயர்த்தியது. இதனை எதிர்த்து கார் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களுடன் பொது மக்களும் கைகோர்த்ததால் இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது.

    பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை கண்டித்து தொடங்கிய போராட்டம், அரசின் பல்வேறு கொள்கைகளுக்கு எதிராக திரும்பியதால் பெருந்திரளான மக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

    கார் டிரைவர்கள் அணியும் மஞ்சள் நிற அங்கிகளை அணிந்து கொண்டு மக்கள் போராட்டம் நடத்தியதால் இது மஞ்சள் புரட்சி என்றும், மஞ்சள் அங்கி போராட்டம் என்றும் அழைக்கப்பட்டது.



    ஒவ்வொரு வாரத்தின் இறுதிநாட்களிலும் நடந்த இந்த போராட்டம் தலைநகர் பாரீசை ஸ்தம்பிக்க வைத்தது. அதே சமயம் இந்த போராட்டத்தில் பல முறை வன்முறையும் வெடித்தது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    மக்களின் இந்த ஓயாத போராட்டம் அதிபர் மெக்ரானின் அரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. இதையடுத்து போராட்டத்துக்கு அரசு பணிந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து தொடர்ந்து 5 வாரங்களாக நடந்து வந்த மஞ்சள் அங்கி போராட்டத்தின் தீவிரம் சற்று குறைந்தது. எனினும் அதிபர் மெக்ரான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் தொடர்ந்தது.

    பாரீஸ் உள்பட பிற நகரங்களில் நடந்த போராட்டங்களில் குறைந்த அளவிலான மக்கள் மட்டும் பங்கேற்றனர். அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றதால் வன்முறை சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை.

    இந்த நிலையில் 8-வது வாரமாக நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் மஞ்சள் அங்கி போராட்டம் மீண்டும் வலுப்பெற்றது. மேலும் இந்த போராட்டத்தின் போது பல இடங்களில் வன்முறையும் வெடித்தது.

    பாரீசில் செயின்ட் ஜெர்மைன் என்கிற இடத்தில் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் தங்கள் கண்ணில் பட்ட பொருட்களுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது.

    அதேபோல், செயின் ஆற்றங்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் குவிந்த போராட்டக்காரர்கள் படகுகளுக்கும், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களுக்கும் தீ வைத்தனர். இதையடுத்து வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, அவர்களை விரட்டி அடித்தனர்.

    இந்த நிலையில் மஞ்சள் அங்கி போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டதற்கு அதிபர் மெக்ரான் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு ஆலோசனை மற்றும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

    இது குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    குடியரசு நாட்டின் மீது மீண்டும் ஒரு முறை பயங்கரமான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு உள்ளது. வன்முறைக்கு காரணமான அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். போராட்டத்தில் ஈடுபடும் ஒவ்வொருவரும் தாங்களாகவே போராட்டத்தை கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #France #YellowVest #Protest

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்தியவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்க படை வீரர்கள் முயற்சித்தபோது அவர் தப்பினார். #France #ChristmasMarket #Shooting
    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அங்குள்ள ஸ்டிராஸ்பர்க் நகர கிறிஸ்துமஸ் சந்தையில் நேற்று முன்தினம் மாலையில் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர்.

    இரவு 8 மணி அளவில் அங்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மர்ம நபர், மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்கிருந்த மக்கள் நாலாபுறமும் பதறியடித்தவாறு ஓட்டம் எடுத்தனர்.



    இருப்பினும் துப்பாக்கிச்சூட்டில் குண்டு பாய்ந்து 3 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும், அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படை வீரர்கள் அங்கு விரைந்தனர். துப்பாக்கிச்சூட்டை தடுத்து நிறுத்த அவர்கள் முயற்சித்தனர். ஆனால் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், அவர்கள் சொல் கேட்டு துப்பாக்கிச்சூட்டை நிறுத்துவதாக இல்லை.

    ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் அவர் காயம் அடைந்தாலும், சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார். அவரை சுட்டும், பிடிக்க முடியாமல் போனது படை வீரர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

    துப்பாக்கிச்சூடு பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், கண்காணிக்கப்பட்டு வந்த சந்தேக நபர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர், 29 வயதான அவரது பெயர் ஷெரீப் என தகவல்கள் கூறுகின்றன.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தைகள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தினர். பல உணவு விடுதிகளிலும், ‘பார்’களிலும் கதவுகளை இழுத்து மூடினர். அங்கிருந்த மக்கள் அங்கேயே அடைக்கலம் தேடினர்.

    இதற்கிடையே தாக்குதல் நடத்தி விட்டு தப்பிய நபர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து, அங்கு படையினர் சென்று சுற்றி வளைத்தனர். ஆனால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை.

    இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து, அந்த நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றம் மூடப்பட்டது. தாக்குதலில் பலியானவர்களுக்கு சபாநாயகர் ஆன்டனியோ தஜானி இரங்கல் தெரிவித்தார்.

    அந்த நாட்டின் அதிபர் மெக்ரான் மந்திரிசபை அதிகாரிகளைக் கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்ட மெக்ரான், நடந்த சம்பவத்துக்கு தனது கண்டனத்தை பதிவு செய்தார். நாட்டு மக்களுடன் இணைந்து நிற்பதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தாக்குதல் நடத்திய நபரை தேடிப்பிடித்து கைது செய்வதற்காக அந்த நகரில் பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 2 ஹெலிகாப்டர்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. #France #ChristmasMarket #Shooting 
    பிரான்சில் பெட்ரோல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடைபெற்ற மஞ்சள் சட்டை ஆர்ப்பாட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி தாக்கினர். #Yellowvestprotests
    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் விலை சமீப காலமாக உயர்த்தப்பட்டு வந்தது. ஒரு லிட்டருக்கு 1.24 யூரோ பணம் முதல் 1.53 யூரோ வரை உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஒரு ஆண்டில் 23 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.
     
    இதை எதிர்த்து கடந்த 3 வாரமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டனர்.

    இதனால் பிரான்ஸ் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு தொடர்ந்து கலவரம் நடந்து வந்தது. எனவே பெட்ரோல் விலை உயர்த்தியதை 6 மாதத்திற்கு நிறுத்தி வைக்க முடிவு செய்தது. இதனால் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்தனர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது.

    மஞ்சள் சட்டை அணிந்து போராட்டக்காரர்கள் இதில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டு வந்தனர். எனவே இதற்கு மஞ்சள் ஜாக்கெட் போராட்டம் என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். 

    இதனால் பிரான்சில் மிகப்பெரிய கலவரம் ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக பிரான்ஸ் முழுவதும் பல்லாயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.



    தலைநகரம் பாரீசில் மட்டும் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவர்களுடன் ராணுவத்தினரும் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். ஆங்காங்கே ராணுவ வாகனம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தலைநகர் பாரீசில் சுமார் 1500க்கு மேற்பட்ட போராட்டக்காரர்கள் இன்று ஒன்றுதிரண்டனர். அவர்கள் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    இதைத்தொடர்ந்து அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இதனால் அவர்களை அங்கிருந்து கலைக்க போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்கள் 127 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், பிரான்ஸ் முழுவதும் போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    பிரான்சில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் இன்று மூடப்பட்டுள்ள நிலையிலும், அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Yellowvestprotests
    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் அர்ஜெண்டினா அணியை 5 -3 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #HockeyWorldCup2018 #France #Argentina
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் இன்று மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பிரான்ஸ் அனி வீரர்கள் அபாரமாக ஆடினர். ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஹுயூகோ ஜெனஸ்டெட் ஒரு கோல் அடித்தார்.

    அவரை தொடர்ந்து 23-வது நிமிடத்தில் மற்றொரு வீரர் விக்டர் சார்லட் ஒரு கோலும், 26-வது நிமிடத்தில் மற்றொரு வீரரான அரிஸ்டைட் காய்ஸ்னி ஒரு கோலும் அடித்தனர். இதனால் பிரான்ஸ் அணி 3-0 என முன்னிலை பெற்றது.

    இதற்கு பதிலடியாக, ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் லூகஸ் மார்டினஸ் ஒரு கோல் அடித்தார். 
    30-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் காஸ்பர்டு பாம்கார்டன் ஒரு கோல் அடித்தார்.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 44 மற்றும் 48-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் கான்சால்டு பெய்லட் கோல் அடிக்க 3 - 4 என ஆனது. ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் பிரான்கோயிஸ் கோயட் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், அர்ஜெண்டினா அணியை 5- 3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.  இந்த போட்டியில் தோற்றாலும் அர்ஜெண்டினா அணி புள்ளிப்பட்டியலில் ஏ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது.

    ஏ பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில், ஸ்பெயின் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என சமனிலையில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்த ஸ்பெயின் அணி போட்டியை விட்டு வெளியேறியது. #HockeyWorldCup2018 #France #Argentina
    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான போட்டி 1 - 1 என சமனில் முடிந்தது. #HockeyWorldCup2018 #France #Spain
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பிரான்ஸ், ஸ்பெயின் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 6-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் திமோதி கிளமெண்ட் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். அதன்பின்னர், ஆட்டத்தின் முதல் பாதி வரையில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் பிரான்ஸ் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அல்வரோ இக்லியாஸ் ஒரு கோல் அடித்து ஆட்டத்தாஇ சமனிலைக்கு கொண்டு வந்தார். இதனால் ஆட்டம் சமனானது.

    இறுதியில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1 -1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. #HockeyWorldCup2018 #France #Spain
    பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டதற்கு பிரான்சில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். #FrenchRevolution
    பாரீஸ்:

    பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதனால் அவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை மீண்டும் அதிகரிப்பதால் வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரும் என அதிபர் இம்மானுவல் மெக்ரான் அறிவித்தார்.

    இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வெகுண்டெழுந்த மக்கள் நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    2034 இடங்களில் விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. அதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



    போராட்டக்காரர்கள் முக்கிய சாலைகளை மறித்து போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர். ரோட்டில் கற்கள், மரங்கள் போன்றவற்றை போட்டு இருந்தனர். ஆங்காங்கே டயர்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.

    பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வன்முறை சம்பவங்களில் 409 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 28 பேர் போலீசார், எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் தீயணைப்பு படையினரும் அடங்குவர்.

    போராட்டத்தின்போது வன்முறை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். காயம் அடைந்தவர்களில் 14 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    157 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தகவலை பிரான்ஸ் உள்துறை மந்திரி கிறிஸ்டோப் கேஸ்டனர் தெரிவித்தார்.

    இப்போராட்டத்தின் காரணமாக அதிபர் இம்மானுவேல் மெக்ரானின் செல்வாக்கு 25 சதவீதம் குறைந்துள்ளது. ஒரு பத்திரிகை பொதுமக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தியது. அப்போது கடந்த மாதத்தை விட தற்போது மெக்ரானின் மக்கள் செல்வாக்கு மிகவும் குறைந்து இருப்பது தெரியவந்தது. #FrenchRevolution
    பிரான்ஸ் நாட்டில் இந்தியா சார்பில் முதல் முதலாக அமைக்கப்பட்டுள்ள போர் நினைவு சின்னத்தை இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று திறந்து வைத்தார். #France #WarMemorial #VenkaiahNaidu
    பாரிஸ்:

    பிரான்ஸ் தலைநகரில் பாரிஸ் அமைதி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பிரான்ஸ் சென்றுள்ளார். அவருடன் அவரது மனைவி உஷாவும் சென்றுள்ளார்.

    முதலாம் உலகப் போர் முடிந்து நூறு வருடம் நிறைவடைந்ததை நினைவு கூரவும், சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மெக்ரான் தலைமை தாங்குகிறார். இதில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.



    இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் விலர்ஸ் குய்ஸ்லேனில் இந்தியா சார்பில் அமைக்கப்பட்ட போர் நினைவுச் சின்னத்தை துணை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், விலர்ஸ் குய்ஸ்லேனில் இந்தியா சார்பில் கட்டப்பட்டுள்ள போர் நினைவுச் சின்னத்தை திறந்து வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். முதலாம் உலக போரில் உயிர் நீத்த பல்லாயிரக்கணக்கான இந்திய படைவீரர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும் என தெரிவித்தார்.
     
    முன்னதாக, பிரான்ஸ்வாழ் இந்திய மக்களை சந்தித்து வெங்கையா நாயுடு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    #France #WarMemorial #VenkaiahNaidu
    பிரான்சில் கல்வி பயில 10 ஆயிரம் பேர் இந்தியாவில் இருந்து விசா பெறும் வாய்ப்பு உள்ளதாக துணை தூதர் கேத்தரின் ஸ்வார்டு கூறியுள்ளார். #studentvisa

    புதுச்சேரி:

    பிரான்ஸ் நாட்டுக்கான தமிழக- புதுவை துணை தூதர் கேத்தரின் ஸ்வார்டு புதுவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரான்சுக்கு கல்வி கற்கவும், வர்த்தகம், சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிரான்சுக்கு சராசரி வருகையாளர் எண்ணிக்கை தற்போது 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    வருகிற 2020-ம் ஆண்டில் பிரான்சில் கல்வி பயில 10 ஆயிரம் பேர் இந்தியாவில் இருந்து விசா பெறும் வாய்ப்பு உள்ளது.


    பிரான்ஸ் தூதரகத்துடன் இணைந்து இந்த சேவையை வழங்கும் முறை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

    வருகிற ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் புதுவையில் இருந்து பிரான்ஸ் செல்ல விசா விண்ணப்பங்கள் எண்ணிக்கை 34 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    தென் இந்தியாவிலேயே அதிக அளவில் புதுவையில் இருந்து விண்ணப்பிக்கின்றனர்.

    கொச்சியில் இது 51 சத வீதமாகவும், சென்னையில் 39 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #studentvisa

    தேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் எஸ் 400 ரக ஏவுகணை வாங்கப்படுகிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #MEA #RaveeshKumar
    புதுடெல்லி:

    வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    'பிரான்சிடம் இந்தியா வலுவான உறவை கொண்டுள்ளது. இந்தியாவின் மிக முக்கிய நட்பு நாடுகளில் பிரான்சும் ஒன்று. இந்தியா- பிரான்சு இடையேயான உறவில் எந்த தொய்வும் இல்லை.

    தேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் எஸ் 400 ரக ஏவுகணை வாங்கப்படுகிறது. நமது கொள்கைகள் மற்றும் எண்ணத்தை அமெரிக்காவிடம் தெரிவித்து விட்டோம். இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். நமது எதிர்பார்ப்புகளையும் அந்நாட்டிடம் தெரிவித்து விட்டோம். ஈரான் மீதான தடை இந்தியாவை பாதிக்காது என்று அமெரிக்க மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் விவகாரத்தை பொறுத்தவரை, பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக நடக்க முடியாது என்பதில் தெளிவாக உள்ளோம். இதனால், தான் இந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. தனது மண்ணில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் பேச்சுவார்த்தைக்கான ஆக்கப்பூர்வான சூழ்நிலையை பாகிஸ்தான் ஏற்படுத்த வேண்டும்.

    எச்1 பி விசா விவகாரம் முக்கியமானது. இது குறித்து அமெரிக்க அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இரண்டு நாடுகளுக்கு இடையில் அமைச்சர்கள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் போதும் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

    இலங்கையுடன் வலுவான நல்லுறவை கொண்டுள்ளோம். இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கை பிரதமர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்'.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #MEA #RaveeshKumar
    சர்வதேச போலீஸ் அமைப்பின் (இன்டர்போல்) இயக்குநர் மெங் ஹாங்வேயை காணவில்லை என அவரது மனைவி அளித்துள்ள புகாரின் பெயரில் பிரான்ஸ் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். #Interpol #MengHongwei
    பாரீஸ்:

    சர்வதேச அளவிலான பொருளாதார, போதை மற்றும் கிரிமினல் குற்றங்களை தடுக்க உலக நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) அமைப்பின் தலைவராக சீனாவை சேர்ந்த மெங் ஹாங்வே கடந்த 2016-ம் ஆண்டு பொறுப்பேற்றார். இந்நிலையில், அவர் மாயமாகியுள்ளதாக மனைவி புகாரளித்துள்ளார்.

    பிரான்ஸ் நாட்டில் உள்ள லைய்ன் நகரில் வசித்த அவர் சமீபத்தில் சீனா சென்றதாகவும், அப்போதிருந்து திரும்பி வரவில்லை, எந்த தகவலும் இல்லை என மனைவி போலீசில் புகாரளித்துள்ளார். இதனை அடுத்து, பிரான்ஸ் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். 
    காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் மாதம் தோறும் முதல் ஞாயிறு அன்று கார்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #Paris #AirPollution
    பாரீஸ்:

    ஐரோப்பிய நாடுகளிலேயே பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தான் காற்று மிக அதிகமாக மாசுபட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை நகர நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாதத்தின் முதல் ஞாயிற்று கிழமையில் முக்கிய பகுதிகளில் கார்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இரு சக்கர வாகனங்கள், மிதி வண்டிகள் மற்றும் சாலையோர நடைபாதை ஆகியவற்றை அன்று ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் பயன்படுத்தும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், டெலிவரி வாகனங்கள், மருத்துவ அவசர வாகனங்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
    ×