search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்டர்போல்"

    பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நிரவ் மோடி லண்டனில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றி தப்பிக்க திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #NiravModi
    சென்னை:

    பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் சட்டவிரோத பரிவர்த்தனை மூலம் 13,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பி சென்றார்.

    இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்தது.

    நிரவ் மோடியைக் கண்டுபிடிக்க சர்வதேச காவல்துறையான இன்டர்போலின் உதவியை சிபிஐ நாடியது. கடந்த ஆண்டு இன்டர்போல் அமைப்பும் அவருக்கு எதிராக ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் வெளியிட்டது. இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ‘தி டெலிகிராப்’ நாளிதழ் 2 நாட்களுக்கு முன்னர் ஒரு வீடியோவை வெளியிட்டது.

    அந்த வீடியோவில் லண்டன் தெருவில் நடந்து சென்றுகொண்டிருக்கும் நிரவ் மோடி, முழுக்க முழுக்க தனது தோற்றத்தை மாற்றியிருந்தார். நிரவ் மோடி லண்டனில் சுதந்திரமாக சுற்றித்திரிவதை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. தேர்தல் நேரம் என்பதால், எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை கிளப்பின. இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி முற்றியது.

    இதையடுத்து நிரவ் மோடியை நாடு கடத்திக் கொண்டுவருவது தொடர்பாக இந்திய அமலாக்கத்துறை சார்பில் இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்திடம் மனு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை லண்டன் போலீசார் நேற்று முன் தினம் கைதுசெய்தனர்.

    நிரவ் மோடி லண்டனில் உள்ள மெட்ரோ வங்கியில் கணக்கு தொடங்க வந்தபோது வங்கி ஊழியர் போலீசாருக்கு தெரிவித்த தகவலையடுத்து போலீசார் அவரை கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    கோர்ட்டில் நிரவ் மோடி மீதான பண மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவரை நாடு கடத்த இங்கிலாந்து அரசு உத்தரவிடும். நிரவ்மோடி பிடிபட்ட போது, அவரிடம் பல நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் இருந்ததாகவும், ஆனால் அவற்றில் பெரும்பாலானவை காலாவதியாகி விட்டதாகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய 3 நாடுகளுக்கு செல்லத்தக்க பாஸ்போர்ட்டுகள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அவரது இந்திய பாஸ்போர்ட் ஏற்கெனவே ரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தனது பணபலம் மூலம் இந்த பாஸ்போர்ட்டுகளை பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.

    நிரவ் மோடி தான் கைதாவதை தவிர்ப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பசிபிக் பெருங்கடலில் உள்ள வனாது தீவில் செட்டிலாக திட்டமிட்டிருந்ததாகவும் இதற்காக அவர் வனாது நாட்டு குடியுரிமை கோரி விண்ணப்பித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

    இந்த வனாது தீவு ஆஸ்திரேலியாவிலிருந்து 1,750 கி.மீ தொலைவில் உள்ளது. அதுமட்டுமல்லாது சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக லண்டனில் பெரிய சட்ட ஆலோசனை நிறுவனங்களின் உதவியை அவர் நாடி இருப்பதும் தெரியவந்துள்ளது. ஆனால், கைதுசெய்யப்பட்டதன் மூலம் அத்தனை திட்டங்களும் பலிக்காமல் போய்விட்டன.

    நிரவ்மோடி கைதுசெய்யப்பட்டாலும் உடனே இந்தியா கொண்டு வருவதில் சிக்கல்கள் உள்ளன. லண்டன் கோர்ட்டில் அவர் மீதான வழக்கு விசாரணை 6 முதல் 9 மாதங்கள் வரை நடைபெறலாம். விசாரணை முடிவடைந்த பின்னர் தீர்ப்பை நீதிபதி 2 மாதங்கள் வரை ஒத்திவைக்கலாம். அப்போதுதான் அவரை நாடு கடத்துவது தொடர்பாக முடிவு எடுக்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்துக்கு வழக்கு விசாரணை குறித்த தகவலை நீதிபதி தெரிவிப்பார் என்று லண்டன் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அதே சமயம் நிரவ் மோடிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் குற்றத்தை நிரூபித்து, அவரை 6 மாதத்துக்குள் இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வந்துவிடலாம் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



    நிரவ் மோடி கைதுசெய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி காரணமில்லை என்றும், லண்டன் நிருபரின் சமீபத்திய பேட்டியே காரணம் என்றும் கூறியுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் நிரவ் மோடியின் கைது போன்ற பல நடவடிக்கைகளை பா.ஜனதா அரசு நடத்தும். ஆனால், அவை மக்களிடம் பலிக்காது என்று தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகளும் இதை மோடி அரசின் தேர்தல் ஸ்டன்ட் என்றே விமர்சித்துள்ளன. #NiravModi
    சர்வதேச போலீசான இன்டர்போல் காவல்துறையின் புதிய தலைவராக தென்கொரியாவை சேர்ந்த கிம் ஜாங்-யாங் இன்று தேர்வு செய்யப்பட்டார். #Interpol #Interpolpresident
    துபாய்:

    சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதை நோக்கமாக கொண்டு  இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் துறை என்னும் அமைப்பு கடந்த 1923 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் உலகில் உள்ள 184 நாடுகள் அங்கம் வகித்து வருகின்றன.

    இந்த அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் காவல்துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பு, பிறநாடுகளில் பதுங்கி அல்லது தங்கியிருக்கும் தேடப்படும் நபர்களை கைது செய்து ஒப்படைப்பது, சர்வதேச குற்றச்செயல்களை துப்புத் துலக்குவது ஆகியவை இந்த அமைப்பின் பணிகளாகும். இந்த அமைப்பின் தலைமையகம் பிரான்சில் நாட்டில் உள்ள லியான்ஸ் நகரில் அமைந்துள்ளது.

    மேங் ஹோங்வேய்

    இந்நிலையில், இன்டர்போல் காவல்துறை தலைவரான மேங் ஹோங்வேய் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் தனது தாய்நாடான சீனாவுக்கு சென்றபோது திடீரென்று காணாமல் போனார். இரண்டு மாதங்களாகியும் அவர் என்ன ஆனார்? என்பது தொடர்பான தகவல் ஏதும் கிடைக்காததால், அவருக்கு பதிலாக புதிய தலைவரை தேர்வு செய்ய இன்டர்போல் தலைமையகம் தீர்மானித்தது.

    இதற்கிடையில், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு எதிரொலியாக மேங் ஹோங்வேய் ராஜினாமா செய்ததாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

    இந்த பதவிக்கு அமெரிக்காவின் ஆதரவுடன் தென்கொரியாவை சேர்ந்த கிம் ஜாங்-யாங் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ரஷியாவின் உள்துறை அமைச்சக உயரதிகாரியும், இன்டர்போல் துணை தலைவராக பதவி வகித்தவருமான அலெக்சாண்டர் பிரோகோப்சுக் நிறுத்தப்பட்டார். இவரை இந்த பதவியில் நியமிக்க பல்வேறு மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

    இந்நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க துபாயில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் கிம் ஜாங்-யாங் தேர்வு செய்யப்பட்டதாக
    இன்டர்போல் தலைமையகம் இன்று அறிவித்துள்ளது.  #Interpol #Interpolpresident 
    சர்வதேச போலீஸ் அமைப்பின் (இன்டர்போல்) இயக்குநர் மெங் ஹாங்வேயை காணவில்லை என அவரது மனைவி அளித்துள்ள புகாரின் பெயரில் பிரான்ஸ் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். #Interpol #MengHongwei
    பாரீஸ்:

    சர்வதேச அளவிலான பொருளாதார, போதை மற்றும் கிரிமினல் குற்றங்களை தடுக்க உலக நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) அமைப்பின் தலைவராக சீனாவை சேர்ந்த மெங் ஹாங்வே கடந்த 2016-ம் ஆண்டு பொறுப்பேற்றார். இந்நிலையில், அவர் மாயமாகியுள்ளதாக மனைவி புகாரளித்துள்ளார்.

    பிரான்ஸ் நாட்டில் உள்ள லைய்ன் நகரில் வசித்த அவர் சமீபத்தில் சீனா சென்றதாகவும், அப்போதிருந்து திரும்பி வரவில்லை, எந்த தகவலும் இல்லை என மனைவி போலீசில் புகாரளித்துள்ளார். இதனை அடுத்து, பிரான்ஸ் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். 
    பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டிஸ் விடுக்க இன்டர்போல் உதவியை நாட சிபிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #NiravModi #CBI #PNBScam #Interpol #redcornernotice

    புதுடெல்லி:

    மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய குடும்பத்தினரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வாங்கி விட்டு அதை திரும்பச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் புகார் அளித்த நிலையில் நிரவ் மோடியும், அவருடைய குடும்பத்தினரும் வெளிநாட்டு தப்பிச்சென்று விட்டனர். 

    இந்த வழக்கில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் நிரவ் மோடி அவருடைய குடும்பத்தினர் தவிர, பஞ்சாப் நேஷனல் வங்கியின் 4 உயர் அதிகாரிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்ட இருந்தன. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்த 4-ம் காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வழக்கமான அறிக்கை தாக்கல் செய்தது.

    அதில், “நிரவ் மோடி வங்கிக்கு செலுத்தவேண்டிய ஒட்டு மொத்த கடன் தொகை ரூ.14,356 கோடி ஆகும். வங்கி உறுதியளிப்பு கடிதங்களை தவறான முறையில் பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளிலும் இந்த மோசடி நடந்து இருக்கிறது. இதில் நிரவ் மோடியின் ஆபரண நிறுவனமும், பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சிலரும் ஈடுபட்டு உள்ளனர்” என்று கூறப்பட்டு இருக்கிறது. 



    நிரவ் மோடி, சோக்சி உள்ளிட்டோரின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பதற்காக சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலை ஏற்கனவே சிபிஐ நாடியது. வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிரவ் மோடி தற்போது லண்டனில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த பாஸ்போர்ட் மூலம் லண்டன் சென்றிருப்பதாகவும், அவரது சகோதரர் நிஷால் மோடி பெல்ஜியம் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அண்ட்வெர்ப் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நிரவ் மோடி மற்றும் சோக்சிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்க, மீண்டும் இன்டர்போல் உதவியை நாட சிபிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்படும் பட்சத்தில், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் பதுங்கியுள்ள நாட்டிலேயே கைது செய்யப்பட்டு, அவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #NiravModi #CBI #PNBScam #Interpol #redcornernotice
    ×