search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmers happy"

    • வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் அவரை சாகுபடி நடைபெற்று வருகிறது.
    • தற்போது அவரை கொடிகளில் பூக்களின் உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை- மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு, மூலக்கடை, முத்தால ம்பாறை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஏரா ளமான ஏக்கர் பரப்பளவில் அவரை சாகுபடி நடைபெற்று வருகிறது.

    அடுத்த மாதம் சீசன் தொடங்க உள்ள நிலையில் கடந்த மாதம் கடமலை மயிலை ஒன்றிய கிரா மங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. அதன் எதிரொலியாக தற்போது அவரை கொடிகளில் பூக்களின் உற்பத்தி அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் இந்த சீசனில் அவரை உற்பத்தி அதிகரி க்கும் வாய்ப்புகள் உள்ளது.

    இதற்கிடையே கடந்த சீசனில் அவரை விலை அதிக அளவில் இருந்தும் மஞ்சள் நோய் தாக்கம் காரணமாக உற்பத்தி மிக குறைவாகவே காண ப்பட்டது. இதனால் விவ சாயிகளுக்கு போதுமான அளவில் லாபம் கிடைக்க வில்லை. இந்த சூழ்நிலையில் தற்போது உற்பத்தி அதிகரித்து காணப்படுவ தால் விலையும் அதே அளவில் நீடித்தால் விவ சாயிகளுக்கு அதிக அளவில் லாபம் கிடைக்கும்.

    இது தொடர்பாக விவ சாயிகள் கூறுகையில், பொதுவாக ஆடி மாதங்களில் வெயில் தாக்கம் காரணமாக வறட்சி நிலவும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக சாரல் மழை காரணமாக தற்போது அவரை கொடிகளில் பூக்களின் உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது.

    இதே போல விலையும் அதிகரித்தால் இந்த ஆண்டு அவரை விவசாயிகளுக்கு மறக்க முடியாத ஆண்டாக இருக்கும் என தெரிவித்தனர்.

    சூளகிரி பகுதியில் சூறாவளி காற்றுடன்கூடிய இடி, மின்னலுடன் பரவலான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டாரப் பகுதியில் சூறாவளி காற்றுடன்கூடிய இடி, மின்னலுடன் பரவலான மழை பெய்தது.
    கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. ஆங்காங்கே மழையும் பெய்தது. பகலில் சுட்டெரிக்கும் வெயிலினால் இரவு நேரங்களில் வீடுகளில் தூங்குவோர் கடும் புழுக்கத்திற்கு ஆளாகி பெரும்பாலானோர் தெருக்கள் மற்றும் வீட்டு தின்னைகளை நோக்கியே சென்றனர். மேலும், சூளகிரி பகுதி ஏரி, குளங்களில் போதியஅளவு தண்ணீர் இன்றி பல ஊராட்சிகளில் 500-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கினறுகள் முற்றிலும் வற்றிய நிலையில் காணப்பட்டது.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் உத்தரவின்பேரில், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெபராஜ், சாமுவேல், ரங்கராஜன் ஆகியோர் அந்தந்த ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கிவந்த நிலையில் நேற்று மாலை சூளகிரி பகுதிகளில் சுமார் மாலை 5 மணி அளவில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

    இதில் சூளகிரி, மாரண்டபள்ளி, தியாகரசன பள்ளி, சென்னபள்ளி, பஸ்த்தள பள்ளி, சின்னார் மற்றும் பல பகுதியில் பரவலான மழை பெய்தது. மழையினால் நள்ளிரவு நேரத்தில் சூளகிரி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி முன்பு உள்ள வேப்பமரம் வேரோடு சரிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் பொதுமக்களுக்கு எந்தவித விபத்து மற்றும் சேதங்கள் இல்லாமல் இருந்தது.
    சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்த மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று பெய்த கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. சமவெளிப்பகுதியில் தகிக்கும் அனல் காற்றில் இருந்து தப்பிக்க ஊட்டியில் தஞ்சமடைந்த சுற்றுலா பயணிகளுக்கு போதிய சீதோஷ்ண நிலை கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்தனர். பசுமை நிறைந்த புல்வெளிகள் காய்ந்து பரிதாபமாக காட்சியளித்தன.

    காட்டுத்தீ ஏற்பட்டு வனப்பகுதிகள் எரிந்து சாம்பலாகி வந்தன. தேயிலைச்செடிகள் காய்ந்து மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது. போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் காய்கறிகளை பயிரிடவில்லை. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    இந்நிலையில் நேற்று கருமேகமூட்டம் நிலவியது. காலை 11.30 மணியில் இருந்து திடீரென லேசான மழை பெய்தது.

    பின்னர் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை மதியம் 12.30 மணியில் இருந்து 2 மணி வரை பெய்தது.

    ஊட்டியில் பெய்த மழையால் சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, மத்திய பஸ் நிலையம், கூட்ஷெட் சாலை, பிங்கர்போஸ்ட், ஊட்டிகுன்னூர் சாலை உள்பட பல்வேறு முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், அப்பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. பிரதான கால்வாயான கோடப்பமந்து கால்வாயில் மழைநீர் அதிகளவில் சென்றது.

    ஊட்டி படகு இல்ல சாலை ரெயில்வே மேம்பாலத்தின் கீழ்பகுதியில் தேங்கி கிடந்த மழைநீரில், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வந்திருந்த பயணிகள் மழையில் நினைந்தபடி மகிழ்ந்தனர்.

    ஊட்டி படகு இல்லத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 2 மணி நேரம் படகு சவாரி நிறுத்தப்பட்டது. ஊட்டி, நஞ்சநாடு, பாலாடா, கேத்தி, தலைகுந்தா, கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.

    இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். நேற்று பெய்த மழையால் காட்டு தீ ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. வனவிலங்குகளுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதால் ஊருக்குள் நுழையும் அச்சமும் நீக்கியது. மழையால் நீலகிரியில் மீண்டும் இதமான சீதோஷ்ண நிலை திரும்பியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    இதேபோன்று கோவை மாவட்டம் மேட்டுப் பாளையம், பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், மருதமலை பகுதியில் சூறாவளியுடன் கோடை மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    கோடை வெயிலில் சிக்கித்தவித்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கோவை மாநகரை பொருத்தவரை மாலை 4 மணி முதலே கார்மேகம் திரண்டிருந்தன. இதனால் திடீர் குளிர்ச்சி ஏற்பட்டது. மாலை 5 மணிக்கு லேசான சாரல் மழை பெய்தது. அனல் காற்று நீங்கி குளிர்ந்த காற்று வீசியது.

    இதேபோன்று கோவை மாவட்டம் வால்பாறையில் பகுதியில் கடந்த 3 நாட்களாக பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் கனமழையும் நகர் பகுதியில் லேசான மழையும் பெய்து வந்தது.

    நேற்று மதியம் 2 மணிமுதல் 3 மணிவரை வால்பாறை நகர் பகுதி உட்பட அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் பலத்த இடி-மின்னலுடன் பலத்த சூறாவளியுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

    நொய்யல் பகுதியில் தேங்காய் பருப்பு விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    நொய்யல்:

    கரூர் மாவட்டம் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளான மரவாபாளையம், சேமங்கி, குளத் துப்பாளையம், வேட்டமங்கலம், ஒரம்பு பாளையம், நல்லிக்கோவில் திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் தென்னைந்தோப்புகளை வைத்துள்ளனர்.

    இவர்கள் தேங்காய்கள் விளைந்ததும், அவற்றினை உடைத்து அதில் உள்ள தேங்காய் பருப்புகளை வெயிலில் போட்டு காய வைக்கின்றனர். பின்னர் அவற்றை சாலைப்புதூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்று, ஏல அடிப்படையில் விற்பனை செய்கின்றனர். 

    இதனை தமிழகத்தின் பல்வேறு மாவட்ட வியாபாரிகளும் அதேபோல் பிரபல எண்ணெய் நிறுவனங்களில் இருந்தும் ஏஜெண்ட்கள் வந்திருந்து ஏலம் எடுத்து செல்கின்றனர். வியாபாரிகள் தேங்காய்களை லாரிகள் மூலம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.    

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கடந்தவாரம் 100 கிலோ கொண்ட தேங்காய் பருப்பு ரூ.10,400-க்கு  வாங்கி சென்றனர். இந்த வாரம் 100 கிலோ கொண்ட தேங்காய் பருப்பு  ரூ.11 ஆயிரத்துக்கு வாங்கி சென்றனர். தேங்காய் உற்பத்தி குறைவின் காரணமாக தேங்காய் பருப்பு விலை அதிகரித்துள்ளது. இதனால் நொய்யல் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    வரத்து குறைந்ததால் அய்யலூர் சந்தையில் தக்காளி விலை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகில் உள்ள அய்யலூர் சந்தையில் கொம்பேறிபட்டி, அய்யலூர், மம்மானியூர், வளவிசெட்டிபட்டி, புத்தூர், எரியோடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து விளைவிக்கப்படும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இங்கிருந்து வாங்கி செல்லும் வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் உள்பட பல்வேறு சந்தைகளுக்கும் வெளியூர்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

    கடந்த சில வாரங்களாக வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒரு பெட்டி ரூ.250-க்கு விற்பனையானது. பொங்கல்பண்டிகைக்கு பிறகு தக்காளி வரத்து வெகுவாக குறைந்தது.

    சராசரியாக நாள் ஒன்றுக்கு 10 டன் வரை தக்காளி வரத்து இருக்கும். ஆனால் கடந்த 2 நாட்களாக ஒரு டன்னுக்கும் குறைவாகவே தக்காளி வந்தது. இதனால் உள்ளூர் தேவைக்கே பற்றாக் குறையாக காணப்பட்டது.

    வரத்து குறைந்ததால் ஒரு பெட்டி ரூ.400 வரை விற்பனையானது. அடுத்த சில வாரங்களுக்கு இதேநிலை தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர். திடீர் விலை உயர்வு விவசாயிகளுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.

    தருமபுரி மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் சாமந்தி பூ, செண்டுமல்லி, குண்டுமல்லி, கனகாம்பரம், சம்பங்கி உள்ளிட்ட பூக்களை அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பருவமழை பொய்த்துவிட்டதால் சொட்டுநீர் பாசனம், கிணற்று பாசனம் மூலம் பூக்களை விவசாயம் செய்து வருகின்றனர். அப்படி விவசாயம் செய்துவந்த நிலையில் சாமந்தி பூ ரூ. 20-க்கும், சம்பங்கி ரூ. 40-க்கும், செண்டுமல்லி ரூ. 30-க்கும் விற்பனையாகி வந்தது. அதனால் விவசாயிகளுக்கு அறுவடை கூலி கூட கிடைக்கவில்லை என்று வேதனைப்பட்டனர்.

    தற்போது பொங்கல் பண்டிகை என்பதால் பூக்களின் விலை உயர்ந்து சாமந்தி பூ ரூ. 140-க்கும், செண்டுமல்லி ரூ. 80-க்கும், குண்டுமல்லி ரூ.800-க்கும், காக்கனாம்பூ ரூ. 400-க்கும், பட்டன் ரோஸ் ரூ.140-க்கும் சம்பங்கி ரூ. 100-க்கும் விற்பனையாகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    குண்டுமல்லி வரத்து குறைந்து கிலோ ரூ. 800-க்கு விற்கப்படுவதால் ஒரு முழம் பூ ரூ. 100-க்கு விற்கப்படுகிறது. இருந்தாலும் பெண்கள் பிரியமுடன் வாங்கி செல்கின்றனர்.
    தாடிக்கொம்பு, அகரம் பகுதியில் வாழை இலைக்கு திடீர் மவுசு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    தாடிக்கொம்பு:

    தமிழகம் முழுவதும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கு மாற்றாக பயன்படுத்தும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாத பொருட்களை பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி ஓட்டல்கள், டீக்கடைகள் அனைத்திலும் தற்போது வாழை இலை முக்கிய இடம் பிடித்து வருகிறது. இதனால் வாழை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு, அகரம், சத்திரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக் கணக்கான ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இங்கிருந்து திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கும் வாழை இலை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது உள்ளூர் தேவைக்கே வாழை இலை போத வில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    ஒரு வாழை இலை ரூ.10 வரை விற்கப்படுகிறது. இதனால் வியாபாரிகள் நேரடியாக வாழை தோட்டத்துக்கே வந்து இலைகளை வாங்கிச் செல்கின்றனர். தமிழக அரசு விதித்த பிளாஸ்டிக் தடையால் தங்கள் வாழ்வில் ஒளி பிறந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மீண்டும் வாழை இலைக்கு புத்துயிர் கிடைத்துள்ளதால் மேலும் பல விவசாயிகள் வாழைசாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    வேலாயுதம்பாளையம் பகுதியில் வரத்து குறைவால் பூ விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், நடையனூர், முத்தனூர், கவுண்டன் பதூர், சேமங்கி, மரவா பாளையம். உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குண்டு மல்லி, முல்லைப்பூ, சென்டு மல்லி, அரளி, செவ்வந்தி, கனகாம்பரம், ரோஜா போன்ற வகைகளையும், மருவு, துளசி, கோழிக் கொண்டைப்பூ போன்ற தழை வகைகளையும் பயி ரிட்டுள்ளனர். 

    இப்பகுதிகளில் பூக்கும் பூக்களை வாங்குவதற்கு வேலாயுதம்பாளையம், கொடுமுடி, பிலிக்கல் பாளையம், பாண்டமங்கலம், பரமத்தி தண்ணீர் பந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் சில்லரையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்கின்றனர். 

    கடந்த வாரம் குண்டுமல்லி பூ கிலோ ரூ.800-க்கும் முல்லைப் பூ ஒரு கிலோ ரூ.700-க்கும் அரளி ஒரு கிலோ ரூ.80-க்கும், சம்மங்கி ரூ.60, மஞ்சள் சாமந்தி பூ ரூ.70-க்கும், செண்டுமல்லி கிலோ ரூ.40, ரோஜா ஒரு கிலோ ரூ.200-க்கும் மேலும் கோழிக்கொண்டை ஒருக்கட்டு பூ  ரூ.5-க்கும், துளசி ஒரு கட்டு ரூ.5-க்கும், ஆடாதுடை ஒருக்கட்டு ரூ.5-க்கும், வாங்கிச் சென் றனர். இந்த வாரம் குண்டு மல்லி பூ ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்திற்கும், முல்லை பூ ரூ.1800-க்கும், அரளி ரூ.160-க்கும், சம்மங்கி ரூ.200-க்கும், மஞ்சள் சாமந்தி பூ ரூ.200-க்கும், செண்டுமல்லி கிலோ ரூ.100, கோழிக்கொண்டை ரூ.10-க்கும், ஆடாதுடை ஒருக் கட்டு ரூ.10-க்கும், ரோஜா ஒருகிலோ ரூ.400-க்கும் துளசி ஒரு கட்டு ரூ.10க்கும் வாங்கிச் சென்றனா. பனி காலம் என்பதால் பூக்களின் உற்பத்தி குறைந்துள்ளதாலும், திருமண விஷேசங்களுக்கு அதிக அளவில் பூ தேவையாலும் பூக்களின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கரூர் மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தி குறைவின் காரணமாக தேங்காய் பருப்பு மற்றும் தேங்காய் விலை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், ஒரம்பு பாளையம், நல்லிக்கோவில் திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் தென்னை பயிரிட்டு உள்ளனர். 

    இதில் விளையும் தேங்காய்களை உடைத்து அதில் உள்ள தேங்காய் பருப்புகளை நன்கு உலர வைத்து அருகாமையில் உள்ள சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாரத்தில் திங்கட்கிழமைகளில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை மையத்திற்கு கொண்டு சென்று அங்கு ஏலம் மூலம் விற்பனை செய்கின்றனர். 

     ஏலம் எடுக்க தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் அதேபோல் பிரபல எண்ணெய் நிறுவனங்களில் இருந்தும் ஏஜெண்ட்கள் வந்திருந்து ஏலம் எடுத்து செல்கின்றனர். மேலும் வியாபாரிகள் தேங்காய்களை லாரிகள் மூலம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். கடந்த வாரம் 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை தேங்காய் பருப்பு ரூ.8,500-க்கு  வாங்கிசென்றனர். இந்த வாரம் 100 கிலோ கொண்ட தேங்காய் பருப்பு  ரூ.8 ஆயிரத்து 700-க்கு வாங்கி சென்றனர். தேங்காய் உற்பத்தி குறைவின் காரணமாக தேங்காய் பருப்பு மற்றும் தேங்காய் விலை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    வேலூரில் நேற்று பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வேலூர்:

    வேலூர், திருவண்ணா மலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்தது. நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.இரவிலும் தொடர்ந்து மழை பெய்தது. விடிய விடிய பெய்த மழை காலையிலும் நீடித்து பெய்தது.

    ஆற்காடு பகுதியில் அதிகபட்சமாக 30 மில்லி மீட்டர் மழை பதிவானது. அரக்கோணத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் பஸ் நிலையம் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. வேலூரில் இன்று காலை பலத்த மழை பெய்தது. பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகத்திற்கு செல்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.

    தொடர்ந்து வேலூரில் மழை பெய்து கொண்டே இருந்தது. கிரீன் சர்க்கிளில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையோரம் குளம்போல் மழைநீர் தேங்கி கிடக்கிறது. மேலும் தாழ்வான பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

    வாணியம்பாடி, ஆம்பூர், அரக்கோணம், காட்பாடி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு பகுதியில் பலத்த மழை கொட்டியது. திருவண்ணாமலை, போளூர், தண்டராம்பட்டு பகுதியில் பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்த ஓடியது.மற்ற இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    திருவண்ணாமலை மகா தீப மலை முழுவதும் மேக கூட்டங்கள் தவழ்ந்து செல்கின்றன. இந்த காட்சி ரம்மியமாக உள்ளது. இதேபோல ஜவ்வாது மலை பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மலையில் நீருற்றுகள் ஏற்பட்டுள்ளன.

    வேலூர், திருவண்ணா மலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    வேலூர், திருவண்ணா மலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    வேலூர்- 12.1

    ஆம்பூர்- 22.4

    வாணிய ம்பாடி-10.6

    ஆலங் காயம்- 9.2

    காவேரிப்பாக்கம்- 15.6

    திருப்பத்தூர்-18.3

    மேல் ஆலத்தூர்- 1.2

    திருவண்ணாமலை- 21.2

    ஆரணி- 15.2

    செங்கம்- 4.6

    சாத்தனூர் அணை-17.7

    போளூர்- 20.8

    தண்டராம்பட்டு- 18.6

    கலசப்பாக்கம்- 31.

    தேனி மாவட்டத்தில் தொடரும் சாரல் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில் தற்போது சாரல் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முதல்போக நெல் சாகுபடி மற்றும் மானாவாரி பயிர்களை பயிரிட்ட விவசாயிகளுக்கு தற்போது பெய்து வரும் சாரல் மழை ஏதுவாக இருக்கும் என தெரிவித்தனர்.

    நேற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்தது. பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த போதும் மாலை நேரத்தில் பெய்த சாரல் மழையால் பூமி குளிர்ந்தது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.40 அடியாக உள்ளது. 950 கன அடி நீர் வருகிறது. 1200 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 56.96 அடியாக உள்ளது. 1144 கன அடி நீர் வருகிறது. 2170 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.65 அடியாக உள்ளது. வருகிற 10 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 117.09 அடியாக உள்ளது. 30 கனஅடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர் 0.8, சண்முகாநதி அணை 10, உத்தமபாளையம் 1.2, வீரபாண்டி 16, சோத்துப்பாறை 9, கொடைக்கானல் 22.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    ராசிபுரத்தில் நேற்று இரவு திடீரென மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ராசிபுரம்,:

    கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் திடீரென்று மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.

    இதனால் நகரின் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் கவுண்டம் பாளையம், காக்காவேரி, ஆண்டகளூர் கேட், புதுப்பாளையம், மசக்காளிப்பட்டி, வடுகம், புதுப்பட்டி, பட்டணம், வடுகம், நாமகிரிபேட்டை, சந்திரசேகரபுரம், அத்தனூர், தேங்கல் பாளையம் உள்பட சுற்றுவட்டார கிராமங்களிலும் மழை பெய்தது. இதனால் வயல்களில் மழை நீர் தேங்கியது. திடீரென்று மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    என்னதான் மழை பெய்தாலும் ராசிபுரம் சேலம் ரோட்டில் உள்ள ஏரி, கோனேரிப்பட்டி ஏரி, பட்டணம் ஏரி, சிங்களாந்த புரம் ஏரி உள்பட பல்வேறு ஏரிகள் மழை நீருக்கு ஏங்கிக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த வறண்ட ஏரிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×