search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flowers price rise"

    வேலாயுதம்பாளையம் பகுதியில் வரத்து குறைவால் பூ விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், நடையனூர், முத்தனூர், கவுண்டன் பதூர், சேமங்கி, மரவா பாளையம். உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குண்டு மல்லி, முல்லைப்பூ, சென்டு மல்லி, அரளி, செவ்வந்தி, கனகாம்பரம், ரோஜா போன்ற வகைகளையும், மருவு, துளசி, கோழிக் கொண்டைப்பூ போன்ற தழை வகைகளையும் பயி ரிட்டுள்ளனர். 

    இப்பகுதிகளில் பூக்கும் பூக்களை வாங்குவதற்கு வேலாயுதம்பாளையம், கொடுமுடி, பிலிக்கல் பாளையம், பாண்டமங்கலம், பரமத்தி தண்ணீர் பந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் சில்லரையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்கின்றனர். 

    கடந்த வாரம் குண்டுமல்லி பூ கிலோ ரூ.800-க்கும் முல்லைப் பூ ஒரு கிலோ ரூ.700-க்கும் அரளி ஒரு கிலோ ரூ.80-க்கும், சம்மங்கி ரூ.60, மஞ்சள் சாமந்தி பூ ரூ.70-க்கும், செண்டுமல்லி கிலோ ரூ.40, ரோஜா ஒரு கிலோ ரூ.200-க்கும் மேலும் கோழிக்கொண்டை ஒருக்கட்டு பூ  ரூ.5-க்கும், துளசி ஒரு கட்டு ரூ.5-க்கும், ஆடாதுடை ஒருக்கட்டு ரூ.5-க்கும், வாங்கிச் சென் றனர். இந்த வாரம் குண்டு மல்லி பூ ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்திற்கும், முல்லை பூ ரூ.1800-க்கும், அரளி ரூ.160-க்கும், சம்மங்கி ரூ.200-க்கும், மஞ்சள் சாமந்தி பூ ரூ.200-க்கும், செண்டுமல்லி கிலோ ரூ.100, கோழிக்கொண்டை ரூ.10-க்கும், ஆடாதுடை ஒருக் கட்டு ரூ.10-க்கும், ரோஜா ஒருகிலோ ரூ.400-க்கும் துளசி ஒரு கட்டு ரூ.10க்கும் வாங்கிச் சென்றனா. பனி காலம் என்பதால் பூக்களின் உற்பத்தி குறைந்துள்ளதாலும், திருமண விஷேசங்களுக்கு அதிக அளவில் பூ தேவையாலும் பூக்களின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ×