என் மலர்

    செய்திகள்

    வரத்து குறைவால் அய்யலூர் சந்தையில் தக்காளி விலை அதிகரிப்பு
    X

    வரத்து குறைவால் அய்யலூர் சந்தையில் தக்காளி விலை அதிகரிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வரத்து குறைந்ததால் அய்யலூர் சந்தையில் தக்காளி விலை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகில் உள்ள அய்யலூர் சந்தையில் கொம்பேறிபட்டி, அய்யலூர், மம்மானியூர், வளவிசெட்டிபட்டி, புத்தூர், எரியோடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து விளைவிக்கப்படும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இங்கிருந்து வாங்கி செல்லும் வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் உள்பட பல்வேறு சந்தைகளுக்கும் வெளியூர்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

    கடந்த சில வாரங்களாக வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒரு பெட்டி ரூ.250-க்கு விற்பனையானது. பொங்கல்பண்டிகைக்கு பிறகு தக்காளி வரத்து வெகுவாக குறைந்தது.

    சராசரியாக நாள் ஒன்றுக்கு 10 டன் வரை தக்காளி வரத்து இருக்கும். ஆனால் கடந்த 2 நாட்களாக ஒரு டன்னுக்கும் குறைவாகவே தக்காளி வந்தது. இதனால் உள்ளூர் தேவைக்கே பற்றாக் குறையாக காணப்பட்டது.

    வரத்து குறைந்ததால் ஒரு பெட்டி ரூ.400 வரை விற்பனையானது. அடுத்த சில வாரங்களுக்கு இதேநிலை தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர். திடீர் விலை உயர்வு விவசாயிகளுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.

    Next Story
    ×