search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Banana leaf"

    • சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கும்.
    • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    வாழை இலையை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? வாழை இலையில் தொடர்ந்து உணவு உண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

    நம் பாரம்பரியத்தோடு நெருங்கிய தொடர்புடையது வாழை இலை. விருந்துகள், விழாக்கள், திருமணம் உள்ளிட்ட வைபவங்களில் இதில் உணவு பரிமாறுவது மரியாதையின் வெளிப்பாடு.

    வாழை இலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் ஜீரணமடைய செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழை இலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

    தெய்வீக மரமாக கருதப்படும் வாழை மரத்தின் இலையில் விருந்தோம்பல் செய்வது, தமிழர்களில் பாரம்பரிய கலாச்சாரமாகும். அதன் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

    * ஆரோக்கியமான உணவுகளை வாழை இலையில் சாப்பிட்டு வந்தால் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழலாம்.

    * வாழை இலையில் உள்ள குளோரோபில் அல்சர் மற்றும் தோல் நோய்கள் வருவதைத் தடுக்கும். தோல் ஆரோக்கியம் காக்கவும் உதவும்.

    * ரத்தத்தை சுத்திகரிக்கும்.

    * சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கும். சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களுக்கு நல்ல தீர்வு தரும்.

    * நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உணவை எளிதில் செரிக்க உதவும்

    * சமச்சீர் உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.

    * காலை உணவை ஒருபோதும் தவிர்க்க கூடாது.

    * காலை உணவில் ஒரு பழம் அல்லது காய்கறிகளை சேர்க்க வேண்டும்.

    * நார்ச்சத்துள்ள பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

    * பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    * செயற்கை இனிப்புகளை தவிர்க்க வேண்டும்.

    * புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    • திடீரென நேற்று இரண்டு மடங்கு விலை உயர்ந்து ஒரு கட்டு வாழை இலை ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு காற்றுடன் பெய்த மழையால் வாழை மரங்கள் சாய்ந்ததால் வாழை இலை வரத்து குறைந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு காஞ்சி கோவில், பெருந்துறை, சோலார், கவுந்தப்பாடி, பாசூர், கருமாண்டம் பாளையம் போன்ற பகுதியில் இருந்து வாழை இலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    தற்போது ஈரோடு சின்ன மார்க்கெட்டிற்கும் வாழை இலை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த 2 மார்க்கெட்டில் இருந்து மாநகர் பகுதியில் உள்ள கடைகளுக்கு வாழை இலைகள் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ஓட்டல்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று திடீரென வாழை இலைகளின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு பெரிய கட்டு இலை (130 வரை எண்ணிக்கை) 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் நேற்று திடீரென இரண்டு மடங்கு விலை உயர்ந்து ஒரு கட்டு வாழை இலை ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் தொடர்ந்து திருமண நிகழ்வுகள், சுப முகூர்த்தங்கள் வருவதே ஆகும்.

    மேலும் முக்கியமான காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு காற்றுடன் பெய்த மழையால் வாழை மரங்கள் சாய்ந்ததால் வாழை இலை வரத்து குறைந்துள்ளது. இதுவும் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இது போக 1 ரூபாய்க்கும் குறைவாக விற்ற டிபன் இலை 4 ரூபாய்க்கும், 4 ரூபாய்க்கு விற்ற தலைவாழை இலை 6 ரூபாய்க்கும் கூடுதலாக விற்கப்படுகிறது. டிபன் மற்றும் சாப்பாட்டு இலை விலை உயர்ந்துள்ளதால் மக்கள் மட்டுமின்றி ஓட்டல் கடைக்காரர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    • வாழை இலையின் சிறப்பம்சமே அதன் குளிர்ச்சித் தன்மைதான்.
    • மரத்திலிருந்து அறுத்தெடுக்கப்பட்ட பின்பும் கூட வாழைஇலை ஆக்சிஜனை வெளியிட்டுக்கொண்டே இருக்கும்.

    திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தார்கள் தொல் தமிழர்கள்.

    அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் முதலுதவிக்கு அவ்வாறு செய்து வைத்தார்கள். எத்தகைய அமங்கலமும் நடக்காமல் இருந்தால் அது மங்கலம் தானே !

    வாழை இலையில் உண்பது நஞ்சு நீக்க மட்டும் காரணம் அல்ல. வாழை இலையில் ஆன்டி ஆக்‌சிடன்ட் அதிக அளவில் இருக்கிறது. இதனால் உடலின் செல் சிதைவு ஏற்படாமல் இளமையுடன் இருக்க முடியும். அதோடு மன அழுத்தம், புற்றுநோய் மற்றும் இதய நோய்களும் தடுக்கப்படுகின்றன.

    சிறுநீரகக் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு உகந்தது என்பது போல, வாழை இலையும் சிறுநீரகம் மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. வாழை இலையில் உள்ள பச்சையம் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் விளங்குகிறது.

    சூடான சாப்பாட்டை வாழை இலையில் பரிமாறும்போது அந்த சூட்டில் இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள பாலிபீனால் சாப்பாட்டில் கலந்து விடும். இதன் மூலம் அதில் உள்ள விட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம் மற்றும் கரோட்டின் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன.

    வாழை இலையின் சிறப்பம்சமே அதன் குளிர்ச்சித் தன்மைதான். மரத்திலிருந்து அறுத்தெடுக்கப்பட்ட பின்பும் கூட வாழைஇலை ஆக்சிஜனை வெளியிட்டுக்கொண்டே இருக்கும். அதனால் வாழை இலையில் வைக்கப்படும் கீரைகள், காய்கள், பழங்கள், பூக்கள் ஆகியவை விரைவில் வாடாது.

    வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும்.

    வாழை இலையின் குளிர்ச்சியும் அது வெளியிடும் ஆக்சிஜனும் தீப்புண்ணுக்கு இதமாகவும், விரைவாக காயங்களை ஆற்றக் கூடியதாகவும் இருக்கிறது.

    - அண்ணாமலை சுகுமாறன்

    கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக குமரி மாவட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகள் மழைநீரில் மூழ்கின.
    தூத்துக்குடி:

    குமரி மாவட்டத்தில் இருந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வாழை இலைகள் அதிக அளவில் வரும். 2 மாவட்டங்களிலும் உள்ள மார்க்கெட்டுகளுக்கு வந்து சேரும் இந்த வாழை இலை கட்டுகளை வியாபாரிகள் வாங்கி செல்வது வழக்கம்.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக குமரி மாவட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகள் மழைநீரில் மூழ்கின. பெரும்பாலான இடங்களில் வாழைகள் முறிந்து விழுந்தன.

    இதனால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்து சேரும் வாழைகட்டுகள் வரவில்லை. வழக்கமாக 500 கட்டுகள் வரை வாழைகள் குமரி மாவட்டத்தில் இருந்து வரும். ஆனால் மழையால் கடந்த 3 நாட்களாக 150 முதல் 200 கட்டுகளே வருகின்றன. வரத்து பாதியாக குறைந்ததால் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.

    முகூர்த்த நாட்கள், கோவில் திருவிழாக்கள், பூஜைகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் வாழை இலை முக்கிய இடம் பிடிப்பதால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது. தூத்துக்குடி புதிய மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள மார்க்கெட்டில் இன்று காலை 200 இலைகள் கொண்ட கட்டு ரூ.3 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது.

    தூத்துக்குடி புதிய மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள மார்க்கெட்டில் இன்று காலை 200 இலைகள் கொண்ட கட்டு ரூ.3 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது.
    தூத்துக்குடி:

    குமரி மாவட்டத்தில் இருந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வாழை இலைகள் அதிக அளவில் வரும். 2 மாவட்டங்களிலும் உள்ள மார்க்கெட்டுகளுக்கு வந்து சேரும் இந்த வாழை இலை கட்டுகளை வியாபாரிகள் வாங்கி செல்வது வழக்கம்.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக குமரி மாவட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகள் மழைநீரில் மூழ்கின. பெரும்பாலான இடங்களில் வாழைகள் முறிந்து விழுந்தன.

    இதனால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்து சேரும் வாழைகட்டுகள் வரவில்லை. வழக்கமாக 500 கட்டுகள் வரை வாழைகள் குமரி மாவட்டத்தில் இருந்து வரும். ஆனால் மழையால் கடந்த 3 நாட்களாக 150 முதல் 200 கட்டுகளே வருகின்றன. வரத்து பாதியாக குறைந்ததால் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.

    முகூர்த்த நாட்கள், கோவில் திருவிழாக்கள், பூஜைகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் வாழை இலை முக்கிய இடம் பிடிப்பதால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது. தூத்துக்குடி புதிய மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள மார்க்கெட்டில் இன்று காலை 200 இலைகள் கொண்ட கட்டு ரூ.3 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. 

    திண்டுக்கல்லில் வாழை இலையின் விலை கடந்த வாரத்தை விட 3 மடங்கு அதிகரித்துள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து பெங்களூர், கிருஷ்ணகிரி, சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த சில நாட்களாக சூறை காற்றுடன் பெய்த மழையினால் வாழை இலையின் வரத்து குறைந்தது. இதனால் வாழை சாகுபடி செய்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இதனால் கடந்த வாரம் ஒரு கட்டு ரூ.500-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.1600-க்கு விற்கப்படுகிறது. வெளியூர்களுக்கு அனுப்ப இலை பற்றாக்குறையாக இருப்பதால் தூத்துக்குடி, தஞ்சாவூர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து வாழை இலை வாங்கப்படுகிறது.

    இது குறித்து வியாபாரி செந்தில்குமார் கூறுகையில், பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்ட பிறகு வாழை இலைக்கு அமோக வரவேற்பு இருந்தது. இதனால் வாழை பயிரிட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். மழை குறைவால் ஒரு சில இடங்களில் விளைச்சல் குறைந்திருந்த போதிலும் பாதுகாத்து வந்தனர்.

    தற்போது சூறைக்காற்றுடன் பெய்த மழையால் வாழை விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். இந்த விலை ஏற்றம் மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

    தாடிக்கொம்பு, அகரம் பகுதியில் வாழை இலைக்கு திடீர் மவுசு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    தாடிக்கொம்பு:

    தமிழகம் முழுவதும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கு மாற்றாக பயன்படுத்தும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாத பொருட்களை பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி ஓட்டல்கள், டீக்கடைகள் அனைத்திலும் தற்போது வாழை இலை முக்கிய இடம் பிடித்து வருகிறது. இதனால் வாழை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு, அகரம், சத்திரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக் கணக்கான ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இங்கிருந்து திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கும் வாழை இலை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது உள்ளூர் தேவைக்கே வாழை இலை போத வில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    ஒரு வாழை இலை ரூ.10 வரை விற்கப்படுகிறது. இதனால் வியாபாரிகள் நேரடியாக வாழை தோட்டத்துக்கே வந்து இலைகளை வாங்கிச் செல்கின்றனர். தமிழக அரசு விதித்த பிளாஸ்டிக் தடையால் தங்கள் வாழ்வில் ஒளி பிறந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மீண்டும் வாழை இலைக்கு புத்துயிர் கிடைத்துள்ளதால் மேலும் பல விவசாயிகள் வாழைசாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ×