search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MARK"

    • குடும்பத்தினரும், அக்கம் பக்கத்து வீட்டாரும் இதனை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • மாணவனுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி பாப்பா. இவர்களது 2-வது மகன் தமிழ்ச்செல்வன்.

    2 கை மற்றும் கால்கள் ஆகியவை போலியோவால் பாதிக்கப்பட்டதால், மற்ற மாணவர்கள் போன்று செயல்படும் நிலை இல்லாமல் இருந்து வருகிறார். பிறவியிலேயே இந்த பாதிப்பு இருந்தாலும் படிப்பு ஒன்று தான் முக்கியம் என அவர் கருதியதால் அவரது பெற்றோர் அவருக்கு கல்வியை கற்க அனைத்து உதவிகளையும் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அந்த மாணவன் ஆசிரியர் உதவியுடன் எழுதினார். இன்று வெளியான தேர்வு முடிவில் மாணவன் தமிழ்ச்செல்வன் மொத்தமாக 500-க்கு 420 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். குடும்பத்தினரும், அக்கம் பக்கத்து வீட்டாரும் இதனை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து மாணவனுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். இதுகுறித்து மாணவர் கூறும் போது, தொடர்ந்து படித்து சிறந்த வக்கீலாக வேண்டும் என்பதே தனது ஒரே குறிக்கோள் என்றார்.

    ஏழ்மை குடும்பத்தில் பிறந்தாலும் கல்வியை கண்ணாக கொண்டு தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் படித்து மாணவர் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளது அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

    • முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளை கவுரவிக்கும் வகையில், போலீஸ் நிலையத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ அழைத்தார்.
    • பொன்னாடை அணிவித்து எழுது பொருட்களை இலவசமாக வழங்கி கவுரவப்படுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 6-ந் தேதி வெளியானது.

    இதில் புதுச்சேரியில் ஒரு அரசு பள்ளி உள்பட 55 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்து புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

    இந்த நிலையில் புதுச்சேரி போலீசார் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவி களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தலை வாழை இலை போட்டு விருந்தளித்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. புதுச்சேரி திருபுவனை போலீஸ் நிலைய சரகத்துக்கு உட்பட்ட மதகடிப்பட்டு கலைஞர் கருணாநிதி அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் திருவண்டார் கோவில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆகியவற்றில் படித்து முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளை கவுரவிக்கும் வகை யில், திருபுவனை போலீஸ் நிலையத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ அழைத்தார்.

    அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து எழுது பொருட்களை இலவசமாக வழங்கி கவுரவப்படுத்தினார்.

    மேலும் தனது கையால் தலை வாழை இலை போட்டு வடை, பாயாசம், கூட்டு, பொரியல், காரக்குழம்பு, சாம்பார், மோர், ரசம் என அறுசுவையோடு உணவு பரிமாறி மாணவ- மாணவி களையும் பெற்றோர்களையும் நெகிழ வைத்தார்.

    வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும் என்று லட்சியம் வைத்திருக்கிறீர்களோ அதை நோக்கியே உங்களது பார்வை இருக்க வேண்டும் என்று சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ அறிவுரை வழங்கினார்.

    இந்தவீடியோ தற்போது சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பாராட்டும் குவிந்து வருகிறது. 

    • கீழப்பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 10, 12-ம் வகுப்பில் முதல் முன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது
    • ஊராட்சி மன்றத் தலைவர் பரிசுத்தொகையை வழங்கினார்

    அகரம்சீகூர்

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள கீழப்பெரம்பலூர் ஊராட்சியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 77-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யா காமராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    பின்பு10 -ம் வகுப்பு மற்றும் 12 -ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு 3000 (ரூபாய்) பரிசு தொகையும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு 2000 (ரூபாய்) பரிசு தொகையும் மூன்றாம் இடம் பிடித்த மாணவிக்கு ஆயிரம் (ரூபாய்) பரிசு தொகையும் வழங்கினார்.

    இதேபோல் பள்ளி ஆசிரியை ஹேமலதாவும் பரிசுத்தொகையை வழங்கினார். மேலும் 10-ம் வகுப்பு மற்றும் 12 -ம் வகுப்பில் 100% தேர்ச்சியை பெற்றதை முன்னிட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா காமராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொன்னாடை அணிவித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் சத்யா காமராஜ், வார்டு உறுப்பினர் ஜான்சி ராணி தமிழ் செல்வன், பாலு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



    • 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே மாதம் 6-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடத்தப்பட்டது.
    • தொடர்ந்து மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வருகிற 14-ந் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டுக்கான (2021-2022) 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே மாதம் 6-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை சேலம், நாமக்கல் மாவட்ட மாணவ- மாணவிகள் உள்பட தமிழகம் முழுவதும் 9.3 லட்சம் மாணவ- மாணவிகள் எழுதினர். இதன் முடிவுகள் கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியிடப்பட்டது.

    தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஜூலை மாதம் வழங்கப்பட்டன.

    இதையடுத்து ஒர்ஜினல் சான்றிதழ் அச்சிடும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அச்சிடுதல் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டதால், அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்வதில் தாமதம் நிலவியது. இதையடுத்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் அடிப்படையில் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடுதல் பணி கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் நிறைவு பெற்றது. அதன் சரிபார்ப்பு பணிகள் முடிக்கப்பட்டு, மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    இந்த சான்றிதழ்கள் மாவட்ட கல்வி அலுவலகங்கள் வாயிலாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. தொடர்ந்து மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வருகிற 14-ந் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.

    • மதிப்பெண் வைத்து மாணவர்களை எடை போடக் கூடாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
    • அரசினர் பள்ளியில் கணினி ஆய்வகம் திறப்பு விழா

    புதுக்கோட்டை:

    மதிப்பெண் வைத்து மாணவர்களை எடை போடக் கூடாது கணினி ஆய்வகம், நூலகம் திறந்து வைத்து அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசினார்.

    ஆலங்குடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் மெய்யநாதன், அறிவியல் ஆய்வகம், கணினி ஆய்வகம் மற்றும் நூலகம் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசும் போது,

    ஆலங்குடி மண்ணில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகச்சிறந்த பள்ளியாக விளங்கும் இப்பள்ளியில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு பயிலும் மாணவிகள் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ள நூலகம் கணினி ஆய்வகம், அறிவியல் ஆய்வகம் மூலம் உங்கள் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

    நம் தமிழக முதல்வர் 2 ஆண்டு காலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வந்துள்ளார். அதன் மூலம் மாணவர்கள் இழந்த கல்வியை மீட்டுள்ளனர்.மாணவர்கள் அனைவரும் அதிகமாக படிக்க வேண்டும்

    அறிவார்ந்த சமுதாய மக்களாக உருவாக வேண்டும். நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்தவர்கள் எல்லாம் காணாமல் போய் உள்ளார்கள். நூற்றுக்கு முப்பத்தைந்து மதிப்பெண் எடுத்தவர்கள் கூட சாதித்து உள்ளார்கள். எனவே மதிப்பெண் வைத்து மாணவர்களை எடை போடக் கூடாது.

    மாணவர்கள் அனைவரும் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து கேள்வியையும் அதற்கான பதிலையும் எழுதிப் படியுங்கள்.ஒரு முறை எழுதி ப்படிப்பது,பத்து முறை படிப்பதற்கு சமம்.எனவே மாணவர்கள் அனை வரும் நன்றாக படித்து சாதிக்கணும்.மற்றவர்கள் மதிக்கும் அளவு உயரனும்.நான் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். நான் மறமடக்கி அரசுப்பள்ளியில் பயின்றவன்.எனக்கு உயர்கல்வி படிக்க வசதி இல்லை.கலைஞர் தந்த இலவச உயர்கல்வியால் எனது கல்லூரிப் படிப்பை முடித்தேன். அதே போல் ஆலங்குடி பகுதி மாணவர்கள் உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் கலை அறிவியல் கல்லூரியை தந்தவர் நம் தமிழக முதல்வர் தான்.எனவே மாணவர்கள் நன்றாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும்

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    விழாவில் ஒன்றியக் குழுத்தலைவர் வள்ளியம்மை தங்கமணி, ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் ராசி முருகானந்தம், ஆலங்குடி தி.மு.க. ஒன்றியச் செயலாளர்கள் ( மேற்கு) தங்கமணி அரு.,வடிவேலு( தெற்கு) நகரச்செயலாளர் பழனிக்குமார், ஒருங்கிணை ந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் தங்கமணி, புதுக்கோட்டை கல்வி மாவட்ட பள்ளித்துணை ஆய்வாளர் மாரிமுத் து, இல்லம் தேடி கல்வித்திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனிய சாமி, பேரூராட்சி செயல் அலுவலர் பூவேந்திரன், கீரமங்கலம் பேரூராட்சி தலைவர் சிவக்குமார், பள்ளி ஆசிரியர், ஆசிரி யர்கள் மாணவிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ×