கீழப்பெரம்பலூரில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு

கீழப்பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 10, 12-ம் வகுப்பில் முதல் முன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது ஊராட்சி மன்றத் தலைவர் பரிசுத்தொகையை வழங்கினார்
கீழப்பெரம்பலூரில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
Published on

அகரம்சீகூர்

பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள கீழப்பெரம்பலூர் ஊராட்சியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 77-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யா காமராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

பின்பு10 -ம் வகுப்பு மற்றும் 12 -ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு 3000 (ரூபாய்) பரிசு தொகையும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு 2000 (ரூபாய்) பரிசு தொகையும் மூன்றாம் இடம் பிடித்த மாணவிக்கு ஆயிரம் (ரூபாய்) பரிசு தொகையும் வழங்கினார்.

இதேபோல் பள்ளி ஆசிரியை ஹேமலதாவும் பரிசுத்தொகையை வழங்கினார். மேலும் 10-ம் வகுப்பு மற்றும் 12 -ம் வகுப்பில் 100% தேர்ச்சியை பெற்றதை முன்னிட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா காமராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொன்னாடை அணிவித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் சத்யா காமராஜ், வார்டு உறுப்பினர் ஜான்சி ராணி தமிழ் செல்வன், பாலு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com