search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "escaped"

    ஓசூரில் இன்று காலை கட்டுப்பாட்டை இழந்து கார் நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் சினிமா டான்ஸ் மாஸ்டர் உள்பட 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    ஓசூர்:

    ஈரோடை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் சரவணப்பிரியன்(32). இவர் சென்னையில் சினிமா டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அவர் தனது காரில் சென்னையை சேர்ந்த தீபா(29) என்ற பெண் நண்பருடன் பெங்களூரு நோக்கி சென்றார்.

    இன்று காலை 8 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தர்கா அருகே கார் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே உள்ள தடுப்பு கம்பி மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்து. இந்த விபத்தில், சரவணப்பிரியன் மற்றும் தீபா ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது. 

    உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். எந்நேரமும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும் இந்த சாலையில் நடந்த இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவரும் உயிர் தப்பினர். 

    கார் நடுரோட்டில் கவிழ்ந்ததையடுத்து, அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்த அறிந்து சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணை மேற்கொண்டனர். மேலும், விபத்துக்குள்ளான காரை அங்கிருந்து அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.
    வடமதுரை அருகே நள்ளிரவில் மில்லில் இருந்து இளம்பெண்கள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வடமதுரை:

    வடமதுரை அருகே நாடுகண்டனூர் பிரிவு பகுதியில் பண்ணாரி அம்மன் மில் உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று இரவு மில்லில் இருந்து சுவர் ஏறி குதித்து 2 இளம்பெண்கள் தப்பி ஓடினர். காவலாளி அவர்களை பிடிக்க முயன்றும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று மறைந்தனர்.

    விசாரணையில் தப்பி ஓடியது புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்த பிச்சை முத்து மகள் சந்தியா (வயது 28), முத்துப்பாண்டி மகள் சரண்யா (18) என தெரிய வந்தது. இது குறித்து வடமதுரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய இளம்பெண்களை தேடி வருகின்றனர்.

    திண்டுக்கல், வேடசந்தூர், வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் ஏராளமான மில்கள் உள்ளன. இங்கு சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இளம்பெண்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    வறுமை காரணமாக குறிப்பிட்ட காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் அவர்கள் இங்கு பணியமர்த்தப்படுகின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகள், 8 மணி நேர வேலை உள்ளிட்டவைகள் கிடைக்கிறதா? என்பது கேள்விக்குறியே. மேலும் வேலை செய்யும் இடத்தில் இளம்பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண்கள் பிரச்சினையில் வடமாநில வாலிபர்கள் 3 பேர் மர்மமான முறையில் இறந்தனர். இதனைத் தொடர்ந்து மில் வளாக விடுதியிலேயே ஒரு பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் மர்மமான முறையில் இறந்தார்.

    தொடர்ந்து இது போன்ற சம்பவங்களால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மில் வேலைக்கு செல்லும் இளம்பெண்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    வறுமை காரணமாக வேறு வழி இல்லாமல் அவர்கள் இங்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இருந்தபோதும் வேலைப்பளு மற்றும் பாலியல் தொல்லை காரணமாக அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே அதிகாரிகள் இப்பகுதி மில்களில் சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
    தருமபுரி:

    தருமபுரியை அடுத்த பென்னாகரம் ரோடு, 4 வழிச்சாலை பாலத்தின் அடியில் ஒரு அரசு பேருந்து தருமபுரியில் இருந்து பென்னாகரத்திற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றபோது பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியில் இருந்து அதிகபாரம் ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி வந்து கொண்டு இருந்த லாரி மேம்பாலத்தின் மேலே செல்லாமல் கீழ் உள்ள சர்வீஸ் ரோட்டில் வந்தபோது எதிர்பாராதவிதமாக அரசு பேருந்தின் மீது மோதியது.

    இதில் அரசு பேருந்து டிரைவரின் சாமர்த்தியத்தால் பயணிகளுக்கு ஆபத்து ஏற்டவில்லை. பேருந்தின் கண்ணாடி மட்டும் உடைந்து சேதமடைந்தது. இந்த சம்பவத்தால் பயணிகள் அதிர்ஷ்வசமாக உயிர் தப்பினர்.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 லட்சம் மோசடி செய்த கணவன்- மனைவி குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    கோரிமேடு ராம்நகரை சேர்ந்த சூரியகுமார். இவரது மனைவி உஷாராணி (வயது 45) ஜிப்மர் ஊழியர். கணவன்-மனைவி இருவரும் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.

    இவர்களிடம் புதுவை லப்போர்த் வீதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் சாமிஜோசப் (60) என்பவர் 3 சீட்டுகள் போட்டிருந்தார். மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் 3 சீட்டுக்கு பணம் கட்டி வந்தார்.

    சீட்டு காலம் முடிந்ததும் சாமிஜோசப் தான் செலுத்திய சீட்டுக்கான பணம் ரூ.5 லட்சத்து 10 ஆயிரத்தை கேட்டார். அதற்கு உஷா ராணியும், சூரியகுமாரும் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

    பலமுறை நேரில் சென்று கேட்டும் அவர் பணத்தை கொடுக்காததால் இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார். அப்போது போலீசார் புகாரை வாங்க மறுத்து விட்டனர். இதையடுத்து சாமிஜோசப் புதுவை கோர்ட்டில் முறையிட்டார். இதை விசாரித்த நீதிபதி இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    கோர்ட்டு உத்தரவின் பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ் பெக்டர் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டிவனத்தில் போலீஸ் பிடியில் இருந்து தப்பி செல்ல முயன்ற கைதி விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திண்டிவனம்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியை சேர்ந்தவர் சிவஞானம். இவர் ஒரு குற்றவழக்கில் தர்மபுரி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் அவரை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காக இன்று காலை தர்மபுரி போலீசார் ஒரு வேனில் குற்றவாளி சிவஞானத்தை அழைத்து கொண்டு செங்கல்பட்டு நோக்கி புறப்பட்டனர். அந்த வேன் இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது கைதி சிவஞானம் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என போலீசாரிடம் கூறினார். இதையடுத்து போலீசார் வேனை நிறுத்தி அருகில் உள்ள ஓட்டலுக்கு சிவஞானத்தை அழைத்து சென்றனர். அப்போது கைதி சிவஞானம் போலீசார் பிடியில் இருந்து தப்பிஓடினார். உடனே சிவஞானத்தை போலீசார் துரத்தி சென்றனர்.

    அப்போது அந்த வழியாக வந்த பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக சிவஞானத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவஞானம் பலத்த காயம் அடைந்தார்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிவஞானத்தை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிவஞானம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரோசனை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பி செல்ல முயன்ற கைதி விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வாலாஜா அருகே சொகுசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதிர்ஷ்டவசமாக 37 பேர் உயிர் தப்பினர்.

    வாலாஜா:

    பெங்களூருவில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை சொகுசு பஸ் புறப்பட்டது. டிரைவர் உமேஷ் (வயது 46). என்பவர் ஓட்டிவந்தார். கண்டக்டராக மோகன் (57). என்பவர் உள்பட 37 பயணிகள் இருந்தனர்.

    ராணிப்பேட்டை அருகே உள்ள காரை என்ற இடத்தில் பஸ் சென்ற போது லாரி ஒன்று பஸ்சை முந்தி சென்றது. இதனால் பஸ் டிரைவர் உமேஷ் பிரேக் போட்டுள்ளார். அப்போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் கண்டக்டர் மோகன் காயமடைந்தார். பயணிகள் 37 பேர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமின்றி உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

    காயமடைந்த மோகனை வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் பயணிகளை மாற்று பஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    பெருந்துறை அடுத்த எல்லைமேடு பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் நூல் மற்றும் பஞ்சு பேல்கள் எரிந்து போனது.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த சென்னிமலை ரோடு எல்லைமேடு பகுதியில் ஈரோடு வீரப்பன் சத்திரம், பெரிய வலசு பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரது மகன் மணிகண்டன் ஸ்பின்னிங் மில் வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த மில்லில் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை இந்த ஸ்பின்னிங் மில்லின் ஒரு பகுதியில் ஏற்பட்ட மின் கசிவினால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    அருகில் இருந்த நூல் மற்றம் பஞ்சு பேல்களில் பற்றிய தீ மளமளவென்று அருகில் பரவியது. இதனைக்கண்ட தொழிலாளர்கள் தப்பி ஓடி வந்தனர். மேலும் உடனடியாக தீயை அணைக்க முயன்று முடியாமல் போகவே பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெருந்துறை நிலைய அலுவலர் வேலுச்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    எனினும் ஏராளமான பொருட்கள் இந்த தீ விபத்தில் எரிந்து போனது. 

    மதுரை சம்மட்டிபுரத்தில் ரவுடியை வெட்டிக் கொன்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை சம்மட்டிபுரம் ஸ்ரீராம் நகர் செம்பருத்தி தெருவைச் சேர்ந்தவர் மோகன் மகன் முத்துக்குமார் (வயது23), கட்டுமான தொழிலாளி. இவர் மீது எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் கொலை, கொள்ளை உள்பட 5 வழக்குகள் நிலு வையில் உள்ளன.

    இந்த நிலையில் முத்துக்குமார் நேற்றிரவு சம்மட்டி புரம் முத்துமாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அவரை 3 பேர் கும்பல் வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது முத்துக்குமாரை அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். ரத்தக்காயங்களுடன் உயிருக்கு போராடியவரை அருகில் இருந்தவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியில் முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார்.

    முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் எஸ்.எஸ்.காலனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    போலீசார் விசாரணையில் முத்துக்குமாரை அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டபிரபு, அவரது நண்பர்கள் செல்லப்பாண்டி, ஜெயபாண்டி ஆகியோர் முன்விரோதத்தில் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

    திருச்செந்தூர் அருகே இரும்பு கடைகாரர் மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரத்தைச் சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (வயது 37). இரும்பு கடை நடத்தி வரும் இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலய திருவிழாவில் நடைபெற்ற அசன விருந்தில் கலந்துகொள்ள சென்றுள்ளார்.  அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த தாமஸ் செல்வன் அங்கிருந்த சேர்களை உடைத்துக் கொண்டிருந்தாராம் அதை மைக்கேல்ராஜ் தனது செல்போனில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் சம்பவத்தன்று மைக்கேல் ராஜ் ஆலயத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த தாமஸ்செல்வன் மைக்கேல்ராஜை செல்போனில் எப்படி படம் எடுப்பாய் என கேட்டு அவரை அடித்து உதைத்துள்ளார். 

    இது குறித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தாமஸ் செல்வனை தேடி வருகின்றனர்.       
    ஐ.ஓ.சி.யில் மண்எண்ணை வாங்கி தருவதாக ராஜஸ்தான் வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் பாபுலால் (38). கடந்த 4 மாதம் முன்பு திருப்பதி சென்றபோது அங்கு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அஜய் என்பவரிடம் அறிமுகம் ஏற்பட்டது.

    இருவரும் சந்தித்து பேசியபோது அஜய், மண்எண்ணை வியாபாரம் செய்து வருவதாக தெரிவித்துள்ளார். தங்கள் தொழிலுக்கு சென்னையில் மண்எண்ணை வாங்கி தருவதாகவும், தனக்கு எண்ணை நிறுவன அதிகாரிகள் பழக்கம் இருப்பதாகவும் பாபுலால் கூறியுள்ளார்.

    அதன் அடிப்படையில் கடந்த 9-ந்தேதி அஜய் ராஜஸ்தானில் இருந்து நண்பர் யோகேஷ் என்பவருடம் சென்னை வந்து பெரிய மேட்டில் அறை எடுத்து தங்கினார்.

    பாபுலாலை தொடர்பு கொண்டு பேசினார். அவரே சிக்கந்தர் என்பவருடன் அஜய்யை சந்தித்து மண்எண்ணை வாங்கி தருவதாக கூறி இருவரும் தண்டையார்பேட்டை இளைய முதலி தெருவில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு ஒரு ஆட்டோவில் அழைத்து சென்றார்.

    கேட் அருகில் ஆட்டோவை நிறுத்த கூறியஅவர் ரூ.5 லட்சத்தை அஜயிடம் பெற்றுக்கொண்டு எண்ணை நிறுவனத்தில் கட்டிவிட்டு வருவதாகவும் மற்றொரு கேட் அருகில் காத்து நிற்கும்படி கூறி பாபுலால் இறங்கி விட்டார்.

    சிறிது நேரத்தில் அவர் நண்பர் சிக்கந்தருக்கு போன் செய்து தான் பின்னால் மற்றொரு ஆட்டோவில் வருவதாக கூறி அவர்களிடம் இறங்கி தப்பி வந்துவிடு என்று கூறியுள்ளார். அதன்படி அஜய் ஆட்டோவில் சென்ற சிக்கந்தர் இறங்கி பின்னால் வந்த பாபுலால் ஆட்டோவில் ஏறி இருவரும் தப்பி சென்றனர்.

    பணத்தை இழந்த அஜய் தண்டையார் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் பாபுலால், சிக்கந்தர் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே நேற்று கனமழை பெய்ததால் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்பலி ஏற்படவில்லை.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் கொளுத்தி வந்தநிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

    சாணார்பட்டி அருகே வி.எஸ்.கோட்டை ஊராட்சிக்குட்பட்ட வி.எஸ்.கே.புதூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் முத்தையா. கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். நேற்று இப்பகுதியில் கனமழை பெய்ததால் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்பலி ஏற்படவில்லை.

    அரக்கோணம் அருகே பூ வியாபாரியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் ராஜபாதர் தெருவை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 34). பூ வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர்கள் குதிரை சுரேஷ் (32). விக்னேஷ் (30). இவர்கள் 3 பேரும் நேற்று மாலை மது அருந்தியுள்ளனர்.

    அப்போது வேலாயுதத்திற்கும் குதிரை சுரேசுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குதிரை சுரேஷ் மற்றும் விக்னேஷ், வேலாயுதத்தை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் சரிந்த வேலாயுதத்தை மீட்ட பொதுமக்கள் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
    ×