search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electoral Roll"

    • மக்கள் மத்தியில் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துள்ளது.
    • ஆன்லைன் விண்ணப்பங்கள் அதிகரிக்க இவையே முக்கிய காரணம்.இவ்வாறு கூறினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளில் சுருக்க முறை திருத்தத்துக்காக மொத்தம் 79,373 வாக்காளர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 51.8 சதவீதம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.

    கடந்த மாதம் 9-ந்தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு சுருக்கமுறை திருத்த பணிகள் துவங்கியது. திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 வாக்காளர்கள் உள்ளனர்.நேரடியாகவும் ஆன்லைனிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தத்துக்கு வாக்காளர்கள் விண்ணப்பித்தனர். கடந்த மாதம்4 நாட்கள் சிறப்பு முகாமும் நடத்தப்பட்டது. சுருக்கமுறை திருத்தப்பணிகள் நிறைவடைந்தன.

    மாவட்டத்தில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தங்களுக்காக மொத்தம் 79 ஆயிரத்து 373 வாக்காளர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 35,177 பேர், நீக்க 25,953 பேர், திருத்தங்களுக்காக 18,243 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்ட வாக்காளர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளனர். மாவட்ட மொத்த விண்ணப்பதாரர் 79,373 பேரில் 51.8 சதவீதம் பேர் அதாவது 41,140 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. நேரடியாக 38,233 பேர் மட்டுமே விண்ணப்பம் அளித்துள்ளனர். குறிப்பாக பட்டியலில் பெயர் நீக்கத்துக்கான விண்ணப்பங்கள் அதிக எண்ணிக்கையில் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 25,953 பேர் பெயர் நீக்கத்துக்காக விண்ணப்பித்துள்ள நிலையில் ஆன்லைனில் மட்டுமே 21,888 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தத்துக்காக நேரடி விண்ணப்பங்களே அதிகம் பெறப்பட்டுள்ளன. பெயர் சேர்த்தலுக்கான மொத்தம் 35,177 விண்ணப்பங்களில் 70.46 சதவீதம் அதாவது 24,789 விண்ணப்பங்கள் நேரடியாக பெறப்பட்டுள்ளன.10,388 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். வருகிற ஜனவரி 5-ந் தேதி வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

    இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:- மக்கள் மத்தியில் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. நேர கட்டுப்பாடு இல்லாததாலும், எங்கிருந்தாலும் விண்ணப்பிக்க முடியும் என்பதாலும் nvsp போர்ட்டல், Voter Helpline வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வாக்காளர் அதிக ஆர்வம்காட்டியுள்ளனர்.

    ஆதார் இணைப்பின்போது வாக்காளர் விண்ணப்பங்களை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பெரும்பாலானோர் கருடா ஆப் மூலமாக பதிவு செய்துள்ளனர். ஆன்லைன் விண்ணப்பங்கள் அதிகரிக்க இவையே முக்கிய காரணம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திருப்பூர் மாவட்டத்தில் பிழை இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்க அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
    • புனித அமல் அன்னை மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமினை ஆய்வு மேற்கொண்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மகேஸ்வரன் தலைமையில், மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023 தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அப்போது சிறப்பு பார்வையாளர் மகேஸ்வரன் பேசுகையில்,

    இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் முதன்மை செயலர் அறிவுரைகளின் படி, சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2023 தொடர்பாக நடைபெற்று முடிந்த சிறப்பு முகாம் நாட்களில் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள மற்றும் நீக்கம் செய்ய கீழ்கண்டவாறு வரப்பெற்ற படிவங்களின் பேரில் இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதலின் படி விசாரணை மேற்கொண்டு உரிய காலக்கெடுவிற்குள் முடிவு செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    மேலும், வாக்காளர் பட்டியலில் நீக்கம் தொடர்பாக வழங்கப்பட்ட படிவத்தினை முழுமையாக ஆய்வு செய்யவும் மற்றும் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும்,திருப்பூர் மாவட்டத்தில் பிழை இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்க அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.

    முன்னதாக காங்கேயம் வட்டம், வெள்ளகோவில் புனித அமல் அன்னை மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமினை ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார்பாடி,திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் , உதவி கலெக்டர் (பயிற்சி) பல்லவி வர்மா , மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், தேர்தல் தாசில்தார்தங்கவேல், தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • சுரண்டை நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் இளைஞர்களை சந்தித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர்.
    • வீட்டின் முன்பு சாக்கடை நீர் மற்றும் மழை நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என நகராட்சி தலைவர் வள்ளிமுருகன் கூறினார்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் இளைஞர்களை சந்தித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர். மேலும் வரும்முன் காப்போம் என்ற அடிப்படையில் சுரண்டை நகராட்சி பகுதி முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.பொது மக்களும் முன்னெச்சரிக்கையாக குடிதண்ணீரை காய்ச்சி அருந்த வேண்டும். வீட்டில் முன்பு சாக்கடை நீர் மற்றும் மழை நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என நகராட்சி தலைவர் வள்ளிமுருகன் கூறினார்.

    இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் நகர மன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார், வேல்முருகன், மாவட்ட பிரதிநிதி சவுந்தர்,இளைஞர் காங்கிரஸ் தலைவர் கஸ்பா செல்வம் என்ற அருணாசலம்,இளைஞர் காங்கிரஸ் மகேந்திரன்,பாலா,ராதா காங்கிரஸ் நிர்வாகிகள் களப்பணி ஆற்றிவருகின்றனர் எனவும் அவர் கூறினார்.

    • தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் உடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
    • சிறப்பு முகாம் அமைத்து புதிய வாக்காளர்களை சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் கூடுதல் ஆணையர் (நிலம்)மேற்பார்வையாளர் ஜெயந்தி தலைமையில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் உடன் ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.இதில் வாக்காளர் பட்டியல் மேற்பார்வை யாளர் ஜெயந்தி கூறிய தாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி2023 ஜனவரி 1 -ந் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு சிறப்பு சுருக்க திருத்தம் 2023-க்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் உடன் கருத்து கேட்கப்பட்டது. மேலும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை விரைந்து முடிக்கவும் அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பு முகாம் அமைத்து புதிய வாக்காளர்களையும் சேர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    முன்னதாக கடைய நல்லூர், தென்காசி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் மற்றும் ஆதார் இணைப்பு பணிகள் குறித்து பார்வை யிடப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்,வாக்காளர் பதிவு அலுவலர்களான கோட்டாட்சியர், தென்காசி மற்றும் சங்கரன்கோவில் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களான வருவாய் தாசில்தார் மற்றும் நகராட்சி கமிஷனர்கள், தனி தாசில்தார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம்-6 -யை பூர்த்தி செய்து முன்னதாகவே அளிக்கலாம்.

    திருப்பூர் : 

     திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 1.1.2023-நாளினை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2023 மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட காலஅட்டவணைப்படி 26.11.2022 (சனிக்கிழமை), 27.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில்திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது

    மேலும், எதிர்வரும் சிறப்பு முகாம் நாட்களில் ஜனவரி 1ந் தேதியன்று 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் மற்றும் அடுத்த ஆண்டு அதாவது 2023 ஆண்டின் ஏப்ரல் 1ந் தேதி, ஜூலை 1ந் தேதி, அக்டோபர் 1-ந் தேதி 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம்-6 -யை பூர்த்தி செய்து முன்னதாகவே அளிக்கலாம். மேற்படி முன்னதாக வரப்பெற்ற படிவங்கள் (அடுத்தாண்டில் தகுதி நாள் அடையும்) சேகரிக்கப்பட்டு அவை அந்தந்த காலாண்டின் துவக்கத்தில் (ஏப்ரல், ஜூலை, அக்டோபர்) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.

    சிறப்பு முகாம் நாளன்று, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புவோர், பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர் மற்றும் ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், முகவரி மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடர்பாக, கீழ்க்கண்ட படிவங்களில் உரிய ஆவணங்களை இணைத்து வாக்குச்சாவடி மையங்களில் விண்ணப்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கபடிவம் 6,வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கபடிவம் 6B,வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யபடிவம் 7,ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய /ஒரு சட்டமன்ற தொகுதியிலிருந்து மற்றொரு சட்டமன்ற தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்ய மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ளபடிவம் 8 விபரங்களை திருத்தம் செய்யபொதுமக்கள் Www.nvsp.in என்ற இணையதளம்மூலமாகவும், Voter HelplineApp என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் . இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். 

    • வருகிற 26, 27 தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடக்கிறது.
    • கடந்த 12, 13-ந் தேதிகளில் சிறப்பு திருத்த முகாம்கள் நடத்தப்பட்டன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 59 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர். வாக்காளர் பதிவு அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆதார் விபரங்களை பெற்று "கருடா" செயலியில் பதிவு செய்து வருகின்றனர்.

    இதனிடையே தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி கடந்த 9-ந் தேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    2023 ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.

    இதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தாலுகா அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரியிடம் வழங்கலாம். தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் (https://www.nvsp.in) அல்லது கைபேசி செயலி மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதுதவிர பெயர் நீக்கம், முகவரி மாற்றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளையும் டிசம்பர் 8-ந் தேதி வரை மேற்கொள்ளலாம்.

    வேலைக்கு செல்வோரின் வசதிக்காக சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 12, 13-ந் தேதிகளில் சிறப்பு திருத்த முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1371 வாக்குச் சாவடிகளிலும் வருகிற 26, 27ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு, பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம். எனவே சிறப்பு முகாம்களை பொதுமக்கள் அனைவரும் தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூர், அவிநாசி, பல்லடம், உடுமலை என மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, தனியார் கல்லூரி முதல்வர்கள் பங்கேற்றனர்.
    • 18 வயது பூர்த்தியான கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரையும் விடுபடாமல், வாக்காளராக பதிவு செய்யவேண்டும்.

    திருப்பூர்

    வாக்காளர் பட்டியலில் சுருக்கமுறை திருத்தம் பணிகள் கடந்த 9ந் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இளம் வாக்காளர்களை அதிக எண்ணிக்கையில் பட்டியலில் சேர்க்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இது குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார்.துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அம்பாயிரநாதன், தேர்தல் பிரிவு தாசில்தார் தங்கவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். திருப்பூர், அவிநாசி, பல்லடம், உடுமலை என மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, தனியார் கல்லூரி முதல்வர்கள் பங்கேற்றனர்.

    18 வயது பூர்த்தியான கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரையும் விடுபடாமல், வாக்காளராக பதிவு செய்யவேண்டும்.வரும் 2023 ஏப்ரல் ,ஜூலை, அக்டோபர் 1-ந் தேதிகளில் 18 வயது பூர்த்தி அடையும் மாணவர்களையும் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிக்கச் செய்ய வேண்டும்.இப்பணிக்கு கல்லூரி முதல்வர்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என கூட்டத்தில் கலெக்டர் வினீத் அறிவுறுத்தினார்.

    • இப்பணிக்கு கல்லூரி முதல்வர்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என கூட்டத்தில் கலெக்டர் வினீத் அறிவுறுத்தினார்.
    • திருப்பூர், அவிநாசி, பல்லடம், உடுமலை என மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, தனியார் கல்லூரி முதல்வர்கள் பங்கேற்றனர்.

    திருப்பூர்:

    வாக்காளர் பட்டியலில் சுருக்கமுறை திருத்தம் பணிகள் கடந்த 9ந் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இளம் வாக்காளர்களை அதிக எண்ணிக்கையில் பட்டியலில் சேர்க்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இது குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார்.துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அம்பாயிரநாதன், தேர்தல் பிரிவு தாசில்தார் தங்கவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். திருப்பூர், அவிநாசி, பல்லடம், உடுமலை என மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, தனியார் கல்லூரி முதல்வர்கள் பங்கேற்றனர்.

    18 வயது பூர்த்தியான கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரையும் விடுபடாமல், வாக்காளராக பதிவு செய்யவேண்டும்.வரும் 2023 ஏப்ரல் ,ஜூலை, அக்டோபர் 1-ந் தேதிகளில் 18 வயது பூர்த்தி அடையும் மாணவர்களையும் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிக்கச் செய்ய வேண்டும்.இப்பணிக்கு கல்லூரி முதல்வர்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என கூட்டத்தில் கலெக்டர் வினீத் அறிவுறுத்தினார்.

    • வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து, பெயர் சேர்த்தல், திருத்தங்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கினர்.
    • வடக்கு தாசில்தார் கனகராஜ், தேர்தல் பிரிவு தாசில்தார் தங்கவேல் உடனிருந்தனர்.

    திருப்பூர்:

    தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணி நடந்துவருகிறது. கடந்த 9-ந் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 11 லட்சத்து 42 ஆயிரத்து 432 ஆண் ,11 லட்சத்து 76 ஆயிரத்து 453 பெண்,324 திருநங்கை என மொத்தம் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 பேர் வரைவு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.வரும் டிசம்பர் 8-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் நடக்கிறது. பணிக்கு செல்வோர் வசதிக்காக 4 வார விடுமுறை நாட்கள் சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முகாம் நடைபெற்றது.

    திருப்பூர் மாவட்டத்தில் 1,061 ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.அதனால் முதல் நாள் முகாம் களைகட்டவில்லை. முதல் முகாம் நாளில் மொத்தம் 5,198 பேர் விண்ணப்பித்துள்ளனர். 2,819 பேர் முகாம் வாயிலாகவும், 2,379 பேர், வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.

    மொத்த விண்ணப்பத்தில் 52.15 சதவீதம் அதாவது, 2,711 பேர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6 வழங்கியுள்ளனர். இவர்களில் 1,944 பேர் முகாமிலும்,767 பேர் ஆன்லைனிலும் பெயர் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனர்.வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து, பெயர் சேர்த்தல், திருத்தங்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கினர்.

    திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட மணி பப்ளிக் பள்ளி ஓட்டுச்சாவடி மையம், வடக்கு தொகுதியில் நெசவாளர் காலனி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கேத்தம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, குமரானந்தபுரம் மாநகராட்சி பள்ளிகளில் நடந்த முகாமை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.உதவி கலெக்டர் (பயிற்சி) பல்லவி வர்மா, வடக்கு தாசில்தார் கனகராஜ், தேர்தல் பிரிவு தாசில்தார் தங்கவேல் உடனிருந்தனர்.

    பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 6,719 பேர்,முகவரி மாற்றம் உட்பட பல்வேறு திருத்தங்களுக்காக 2,415 பேர், பெயர் நீக்கத்துக்கு 908 பேர் என ஞாயிற்றுக்கிழமை முகாமில் மொத்தம் 10,042 பேர் நேரடியாக விண்ணப்பித்தனர்.

    தொடர்ந்து வரும் 26, 27-ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர் பங்கேற்பர். குறிப்பாக பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு இளம் வாக்காளர் ஏராளமானோர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது.அதனால் அனைத்து மையங்களிலும் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6 தட்டுப்பாடு இன்றி வைத்திருக்கவேண்டும் என்பது அனைத்து கட்சியினரின் கோரிக்கையாக உள்ளது.

    18 வயது பூர்த்தியான, ஒவ்வொருவரையும் வாக்காளராக மாற்றும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 மாணவர்கள் காலேஜ் ரோடு, கொங்கணகிரி பகுதியில், 2 நாட்களாக நடந்த வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாம் குறித்து அப்பகுதியினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேராசிரியர்கள் விநாயகமூர்த்தி, அமிர்தராணி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

    அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் தலைமையில், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் வீடு வீடாக சென்று, 100 சதவீத ஓட்டுப் பதிவை உறுதி செய்ய, 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் அடையாள அட்டையில் தங்களது பெயரை இணைக்க வேண்டும். வயது பூர்த்தியான ஒவ்வொருவரையும் வாக்காளராக மாற்றும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

    வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதாரையும் இணைக்க வேண்டும். வரும் 26 மற்றும் 27 ம் தேதி ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் நீக்கம் செய்தல், பெயர் சேர்க்க, ஆதார் எண் இணைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.தொடர்ந்து மாணவர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • வேலூரில் நடந்த ஆய்வு கூட்டத்தில் வலியுறுத்தல்
    • எத்தனை வசதிகள் இருந்தாலும் போட்டோ சரியாக தெரியவில்லை என குற்றச்சாட்டு

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் திருத்தம் நீக்கம் செய்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று நடந்தது‌. வாக்காளர் பட்டியல் தேர்தல் பார்வையாளர் அணில் மிஸ்ராம் தலைமை தாங்கினார். கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, தேர்தல் தாசில்தார் ஸ்ரீராம், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது திருத்தம் செய்வது தொடர்பாக அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    வாக்காளர் பட்டியலில் 18 வயது தொடங்கியவர்கள் பெயரை சேர்க்கலாமா அப்படி சேர்த்தால் அவர்கள் பெயர் பட்டியலில் இடம் பெறுமா.

    கடந்த மாநகராட்சி தேர்தலில் போது நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட ஒருவர் தனது அடையாள அட்டை மூலம் வாக்களித்தார்.

    மேலும் இறந்தவர்கள் பெயரை முழுமையாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யவில்லை. இறந்தவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் இறப்பு சான்றிதழ் கேட்கிறார்கள். அனைவருமே இறப்பு சான்றிதழுடன் சென்று பெயரை நீக்க முடியாது.

    எனவே இதனை தேர்தல் ஆணையமே கையில் எடுத்துக் கொண்டு இறந்தவர்கள் பெயரை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. குறிப்பாக மாநகராட்சி நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் இறப்புச் சான்று வழங்கப்படுகிறது. அப்படி இறப்பு சான்றிதழ் வழங்கும் போது அவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் முறையை அமல்படுத்த அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

    மேலும் வாக்காளர் பட்டியலில் எத்தனை முறை திருத்தம் செய்தாலும் பெயர் முழுமையாக திருத்தப்படாமல் வருகிறது. அதே போல அடையாள அட்டைகளில் போட்டோ மாறி மாறி வருகிறது. மேலும் பல நவீன வசதிகள் வந்த பிறகும் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள போட்டோ தெளிவாக தெரிவதில்லை.

    இது போன்ற தவறுகளை களைய வேண்டும். மாணவ மாணவிகள் எளிதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வசதியாக கல்லூரிகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்.

    என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து வலியுறுத்தினர்.

    கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசிய தாவது

    வேலூர் மாவட்டத்தில் தற்போது வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் திருத்தம் செய்வது தொடர்பாக முகாம்கள் நடந்து வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் திருத்தம் செய்யப்பட்ட பட்டியல் தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    இதனை பார்வையிட்டு பொதுமக்கள் தங்களுடைய வாக்காளர் பட்டியலை சரிபார்த்து தவறு இருந்தால் திருத்தம் செய்து கொள்ளலாம்.

    18 வயதானவர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்தாலும். அந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு 18 வயது நிரம்பிய பிறகு பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.

    தற்போது வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இதற்கு வாக்குச்சாவடி முகவர்கள் உதவி செய்ய வேண்டும். ஓட்டு போடும் சமயத்தில் தேர்தல் வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் 90 சதவீதம் வாக்களிக்க விட மாட்டார்கள்.

    தேர்தலுக்கு முன்பாக அனைவரும் தங்களது வாக்காளர் அட்டையை சரி பார்த்து திருத்திக்கொள்ள வேண்டும். கல்லூரிகளில் ஏற்கனவே வாக்குச்சாவடிகள் இயங்கி வருகிறது. அதன் மூலம் மாணவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் திருத்தம் சம்பந்தமான ஆய்வுக் கூட்டத்தில் தாசில்தார் ஸ்ரீராம் கூறுகையில்:-

    தற்போது தேர்தல் ஆணையம் voter helpline என்ற புதிய ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது.இதனை ஒவ்வொருவரும் தங்களது செல்போனில் பதிவேற்றம் செய்து அதில் கேட்கப்படும் பட்டியலை நிரப்பி பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.

    அவ்வாறு செய்தால் உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை தற்போது எந்த தொகுதியில் எந்த வரிசையில் உள்ளது என்ற விவரம் உங்களுக்கு தெரியும்.மேலும் அதனை நீக்கம் செய்தால் உடனடியாக உங்களுக்கு தெரிந்து விடும் அதன் மூலம் நீங்கள் பட்டியலில் நீக்கப்படுவதை தவிர்க்கலாம் என்றார்.

    • தமிழகம் முழுவதும் 2023-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந் தேதி வெளியானது.
    • வருகிற 26, 27-ந் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    தமிழகம் முழுவதும் 2023-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந் தேதி வெளியானது. மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்ப்பு பணிக்காக 12, 13-ந் தேதி ஆகிய 2 நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்திருந்தார்.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் நேற்று வாக்காளர் பெயர் சேர்ப்பு, திருத்தம் பற்றிய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த முகாம் கடைசி நாளான இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை நடக்கிறது. கடைசி நாள் என்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்தனர். வருகிற 26, 27-ந் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகம் முழுவதும் கடந்த 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து இன்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    • 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சவாடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடந்தது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து இன்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    சிறப்பு முகாம்

    சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி கூடங்கள், கிராம அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சவாடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடந்தது.

    இந்த முகாம்களில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம், முகவரி திருத்தம் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள், பொது மக்களும் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்தனர்.

    எம்.எல்.ஏ., மேயர் ஆய்வு

    சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கில் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. , மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கவுன்சிலர் சங்கீதா நீதிவர்மன், முன்னாள் வார்டு செயலாளர் நீதிவர்மன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    இதேபோல கிச்சிப்பாளை யம் நாராயணநகர் பாவடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமை யும் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேவையான விண்ணப் பங்கள் இருப்பு உள்ளதா, முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    மத்திய மாவட்ட அவைத்தலைவர் சுபாசு, மாநகர துணை செயலாளர் கணேசன், 42-வது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா கணேசன் உள்பட பலர் உடன் இருந்தனர். 

    ×