search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corona virus"

    • கொரோனா பாதிப்பில் இருந்து 6 பேர் குணமடைந்துள்ளனர்.
    • காய்ச்சல் பாதிப்புள்ள நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம்.

    சென்னை:

    கொரோனா வைரஸ் புதிது புதிதாக உருமாறிய கொரோனாவாக பொது மக்களை பாதித்து வருகிறது. இப்போது புதிய வகை கொரோனா கேரளாவில் திடீரென அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று 309 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    அதில் சென்னை மாவட்டத்தில் 4 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 3 பேருக்கும், சேலம், திருவள்ளூர், திருப்பூர் மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், செங்கல்பட்டு, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து 6 பேர் குணமடைந்துள்ளனர்.

    புதிய வகை கொரோனா குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    கேரளாவில் புதிய வகை கொரோனா பரவி வருவதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். இப்போதைக்கு அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று கட்டாயமில்லை.

    காய்ச்சல் பாதிப்புள்ள நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். தற்போது புதுவகை கொரோனா எந்த மாதிரி உருமாறி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். இதன் முடிவு நாளை தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
    • காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவ மனைக்கு சென்று அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    நாட்டிலேயே அதிக அளவாக கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது ஆயிரத்தை தாண்டிவிட்டது. கொரோனா பரிசோதனை மாநிலத்தில் அதிக அளவில் செய்வதால் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

    மேலும் மக்களும் காய்ச்சலுக்காக தங்களை தாங்களே சுயமாக பரிசோதனை செய்வதால் கொரோனா பாதித்தவர்கள் பற்றிய விவரம் தெரியவருகிறது. மாநிலத்தில் இதுவரை 1324 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மேலும் கொரோனாவிற்கு கோழிக்கோட்டை சேர்ந்த குமரன் (வயது 77) மற்றும் கண்ணூர் பானூரை சேர்ந்த அப்துல்லா (82) ஆகியோர் பரிதாபமாக இறந்துவிட்டனர்.

    இதனைத்தொடர்ந்து வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவ மனைக்கு சென்று அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

    • யாருக்காவது காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால் அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
    • பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

    கோவை:

    கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    கடந்த 12 மணி நேரத்தில் கேரளாவில் 280 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் பலியாகி உள்ளனர்.

    தொடர்ந்து கேரளாவில் கொரோனா அதிகரித்து வருவதை அடுத்து, கேரள மாநில எல்லையொட்டி இருக்கும் தமிழக பகுதிகளான கோவை, நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    கேரள மாநிலத்தையொட்டி உள்ள தமிழக எல்லையில் அமைந்துள்ளது கோவை மாவட்டம்.

    கேரளாவில் இருந்து கோவைக்கு தினந்தோறும் வேலை, தொழில், கல்லூரி சம்பந்தமாக ஏராளமானோர் கோவைக்கு வருவதும், இங்கிருந்து பலர் கேரளாவுக்கும் சென்று வருகிறார்கள்.

    தற்போது கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், கோவை மாவட்ட எல்லைகளான வாளையார், பொள்ளாச்சி மீனாட்சிபுரம், ஆனைகட்டி உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    அங்கு மருத்துவ குழுவினர், போலீசார் முகாமிட்டுள்ளனர். அவர்கள் அந்த வழியாக கேரளாவில் இருந்து கோவைக்குள் வரக்கூடிய வாகனங்களை தடுத்து நிறுத்தி, அதில் இருக்கும் பயணிகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்கின்றனர்.

    அதில் யாருக்காவது காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால் அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    மேலும் அவர்களின் சளி மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை தெரிந்த பின்னரே அவர்களை கோவைக்குள் அனுமதித்து வருகின்றனர்.

    கோவையில் பொது மக்கள், பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆஸ்பத்திரிகளுக்கு காய்ச்சலுடன் வருபவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இருமல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில், கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளான நாடுகாணி, கக்கநல்லா உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு ள்ளது.

    அந்த வழியாக கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் பயணிகள் அனைவரும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.

    பரிசோதனைக்கு பின்னரே அவர்கள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து நீலகிரி கலெக்டர் அருணா கூறியதாவது:-

    கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்குள் வருவோரின் உடல் வெப்ப நிலை, சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.

    இதுவரை 30 பேரின் சளி மாதிரிகள் சேகரி க்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. எனவே பொது மக்கள் கொரோனா குறித்து அச்சப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெருந்தொற்றுக்கு இந்தியாவிலேயே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது
    • கார்பா கொண்டாட்டத்தின் போது 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்

    கோவிட் பெருந்தொற்று என பரவலாக அழைக்கப்பட்ட, 2019 டிசம்பரில் சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தாக்குதல், 2020 முழுவதும் உலகையே உலுக்கியது. இந்த வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

    இந்த பெருந்தொற்றுக்கு இந்தியாவிலேயே தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டு, 3 வெவ்வேறு காலகட்டங்களில் பெருமளவில் அனைத்து இந்தியர்களுக்கும் இலவசமாகவே வழங்கப்பட்டது.

    ஆனால், 2022லிருந்து 20 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்ட பலர் இந்தியாவில் மாரடைப்பால் உயிரிழந்த செய்திகள் சில மாதங்களாக வெளி வந்தன.

    இதற்கிடையே, நாடு முழுவதும் கடந்த அக்டோபர் 15 தொடங்கி அக்டோபர் 24 வரை தசரா பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் பிரபலமான 'கார்பா' நடன நிகழ்ச்சி நடைபெற்றது. துரதிர்ஷ்டவசமாக, இந்த கார்பா கொண்டாட்டங்களின் போது 12-ஆம் வகுப்பு மாணவன் உட்பட 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.

    இது குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா (Mansukh Mandaviya) கருத்து தெரிவித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) கோவிட் பெருந்தொற்றுக்கு ஆளானவர்கள் குறித்து ஒரு விரிவான ஆராய்ச்சியை நடத்தியுள்ளது. அதில், கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளானவர்கள் தங்கள் உடலை அதிகம் வருத்தி கொள்வது ஆபத்தை விளைவிக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், சுமார் 2 வருடங்கள் வரை உடலுக்கு அதிக சிரமம் தரும் உடற்பயிற்சியிலோ அல்லது கடின உழைப்பு தேவைப்படும் செயல்களிலோ ஈடுபட கூடாது. இதனால் மாரடைப்பு வருவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது.

    இவ்வாறு மாண்டவியா எச்சரித்தார்.

    • தகுதியுடையவர்களை இந்நிறுவனத்தின் 50 பேராசிரியர்களை கொண்ட குழு தேர்வு செய்யும்
    • விருது பெறும் இருவருமே 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

    சுவீடன் நாட்டு தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள சோல்னா (Solna) எனும் பகுதியில் உள்ளது 'கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட்' எனப்படும் புகழ்பெற்ற மருத்துவ கல்வி நிறுவனம்.

    இக்கல்வி நிறுவனத்தின் 50 பேராசியர்களை கொண்ட 'நோபல் அசெம்பிளி' (Nobel Assembly) எனும் குழு ஒவ்வொரு வருடமும் மருத்துவ துறையில் மனித இனத்திற்கு பலனளிக்கும் வகையில் கண்டுபிடிப்புகளை செய்த நிபுணர்களுக்கு நோபல் பரிசு எனப்படும் உலகப்புகழ் வாய்ந்த விருதிற்கு தகுதியானவர்களை தேர்வு செய்கிறது.

    இந்த வருட மருத்துவ துறைக்கான நோபல் பரிசு, கட்டாலின் கரிக்கோ (Katalin Kariko) மற்றும் ட்ரூ வைஸ்மேன் (Drew Weissman) ஆகியோருக்கு வழங்கப்படுவதாக இந்த குழு அறிவித்துள்ளது.

    இது குறித்து அக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது:

    மனிதர்களின் மரபணு கூறுகள், மனிதர்களின் எதிர்ப்பு சக்தியில் ஆற்றும் பங்கினை கண்டறிய இந்த இருவரும் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகள் பெரிதும் உதவியது. அதன் மூலம் உலகையே அச்சுறுத்தி வந்த கோவிட்-19 பெருந்தொற்றிற்கு எதிரான தடுப்பூசியை பெருமளவு தயாரிப்பது எளிதாக அமைந்தது.

    இவ்வாறு நோபல் அசெம்பிளி அறிவித்துள்ளது.

    விருது பெறும் இருவருமே 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    உயிர்வேதியியல் துறையை சேர்ந்த 68 வயதான ஹங்கேரிய அமெரிக்க விஞ்ஞானியான கட்டாலின் கரிக்கோ, அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்.

    அமெரிக்க வேதியியல் விஞ்ஞானியான 64 வயதான ட்ரூ வைஸ்மேன், மரபணு ஆராய்ச்சிக்கான பென் இன்ஸ்டிட்யூட் (Penn Institute) நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.

    மருத்துவ துறைக்கு இவ்விருதுகள் வழங்கப்பட தொடங்கிய 1901 வருடத்திலிருந்து இதுவரை 113 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதும், அவற்றில் 12 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • நல்ல ஊழியரை பணிநீக்கம் செய்வதற்கு பதில் நான் சிறை சென்றிருப்பேன்
    • மூன்றாவது டோஸ் செலுத்தி கொண்ட பின் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது

    2019 வருட இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா எனும் வைரஸ் தொற்று, 2020ல் உலகம் முழுவதும் பரவி, உலக நாடுகளை அச்சுறுத்தி, உலக பொருளாதாரத்தை நலிவடைய செய்து லட்சகணக்கானவர்களை பலி வாங்கியது. இதனை எதிர்கொள்ள இந்தியா உட்பட பல நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து அவற்றை அந்தந்த நாட்டு மக்கள் கட்டாயமாக செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தின. விருப்பமில்லையென்றாலும் அரசாங்கங்கள் கட்டாயமாக்கியதால் மக்கள் சில மாதகால இடைவெளிகளில் ஒன்றன் பின் ஓன்றாக செலுத்தி கொண்டனர்.

    இந்நிலையில், கொரோனா தடுப்பூசியின் பயன்பாடு குறைந்து வருவதாகவும் சில நாடுகள் அதனை உபயோகிப்பதையே நிறுத்தி விட்டதாகவும் எக்ஸ் வலைதளத்தில் ஒரு பயனர் கருத்து தெரிவித்திருந்தார்.

    இதற்கு தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிலளித்த எக்ஸ் நிறுவனத்தின் அதிபரும், உலகின் நம்பர் 1 கோடீசுவரருமான எலான் மஸ்க் தெரிவித்திருப்பதாவது:

    மக்கள் கட்டாயமாக தடுப்பூசிகளையும் பூஸ்டர்களையும் செலுத்தி கொள்ள வேண்டும் என அரசாங்கங்கள் கட்டாயபடுத்தியதை நான் நாகரிகமற்ற அத்துமீறலாக கருதுகிறேன். அதிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் எனக்கு விருப்பமில்லை. தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்பதால் ஒரு நல்ல ஊழியரை பணி நீக்கம் செய்வதற்கு பதிலாக நானே சிறைக்கு சென்றிருப்பேன்.

    அது மட்டுமல்ல; நானும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.

    நோயினால் ஏற்பட்ட உடல்ரீதியான சிக்கலை விட தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு பலருக்கு அதிக சிக்கல்கள் ஏற்பட்டன. நோய் தடுப்புக்கான தடுப்பூசி, நோயை விட கடுமையான விளைவுகளை தர கூடாது.

    இவ்வாறு மஸ்க் தெரிவித்துள்ளார்.

    • வவ்வால்கள் மூலம் இந்த பெருந்தொற்று வேகமாக பரவும் என தொற்று நோய் நிபுணர் எச்சரித்து உள்ளார்.
    • ஆய்வில் 40 வகையான கொரோனா வைரஸ் மறு உருவாக்கம் பெற்று இருப்பதாக கண்டறிப்பட்டு உள்ளது.

    பீஜிங்:

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் உருவான கொரோனா என்ற கொடூர நோய் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரை பறித்தது. தொடர்ந்து அந்த கொரோனா அரக்கன் உருமாறி பொதுமக்களை பாடாய் படுத்தியது.

    இந்த தொற்றில் இருந்து உலக நாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு தற்போது தான் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது. இருந்த போதிலும் கொரோனா முழுமையாக நம்மை விட்டு அகலவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் சீனாவை அச்சுறுத்தும் வகையில் கொரோனா போன்ற கொடூர தொற்று நோய் மீண்டும் பரவ வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டின் தொற்று நோய் நிபுணர் ஹி சென்க்ஸ் தெரிவித்துள்ளார். வவ்வால்கள் மூலம் இந்த பெருந்தொற்று வேகமாக பரவும் என அவர் எச்சரித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தலைமையிலான தொற்று நோய் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் 40 வகையான கொரோனா வைரஸ் மறு உருவாக்கம் பெற்று இருப்பதாகவும், இதில் பாதிக்கு மேல் மிகவும் ஆபத்தானது எனவும் கண்டறிப்பட்டு உள்ளது.

    இந்த தொற்றில் 3 வகை மீண்டும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்றும் கொரோனா போன்ற தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகம் என்றும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ஆனால் சில தொற்று நோய் நிபுணர்கள் இதை மறுத்து உள்ளனர். 3 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் வைரஸ் பரவும் என்பதை ஏற்க முடியாது. பொதுமக்களின் பாதுகாப்பு உணர்வே எதிர்காலத்தில் இது போன்ற வைரஸ் பரவலை தடுத்து விடும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    • இதுவரை 6 பேர் நிபாவினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது
    • செப்டம்பர் 24 வரை கல்வி நிலையங்களை மூட உத்தரவு

    2019 கடைசியில் தொடங்கி 2020 ஆரம்பத்தில் உலக மக்களை அச்சுறுத்தி, உலக பொருளாதாரத்தையும் ஆட்டம் காண செய்தது கோவிட்-19 பெருந்தொற்று.

    தற்போது தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதல் மக்களிடையே பரவி வருகிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்க பட்டுள்ளதையடுத்து இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கைய் 6 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை இத்தாக்குதலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் நோய் பரவல் அதிகரிப்பதனால் இதற்கான சிகிச்சைக்கு தேவையான மோனோகுளோனல் ஆன்டிபாடீஸ் (monoclonal antibodies) எனும் எதிர்ப்பு மருந்தை ஆஸ்திரேலியாவிடம் இந்தியா கேட்டிருக்கிறது.

    இதற்கிடையே இந்த நிபா தொற்று குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) தலைமை பொறுப்பிலுள்ள டாக்டர். ராஜிவ் பால் (Dr. Rajiv Bahl) தெரிவித்திருப்பதாவது:-

    கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறப்பவர்களின் விகிதாசாரம் 3 சதவீதம் எனும் அளவில் இருந்தது. ஆனால் நிபா தொற்றின் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு இறப்பு சதவீதம் 70 வரை இருக்கும். இந்தியா நிபா வைரஸிற்கு எதிராக தடுப்பூசி தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    2018-ல் ஆஸ்திரேலியாவிலிருந்து பெறப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்து 10 நோயாளிகளுக்கு பயன்படும் வகையில்தான் கையிருப்பு உள்ளது. இந்தியாவிற்கு வெளியே இந்த நோய்தொற்றில் பாதிப்படைந்தவர்களுக்கு இது தரப்பட்டபோது அவர்கள் முழுவதுமாக குணமடைந்தனர். இதுவரை இந்த மருந்தின் பயன்பாட்டிற்கான முதல் கட்ட ஆய்வு மட்டுமே நிறைவடைந்துள்ளது.

    இவ்வாறு டாக்டர். பால் கூறினார்.

    இதற்கிடையே நிபா வைரஸ் பரவுதல் அதிகரித்துள்ளதால், கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிலையங்களையும் செப்டம்பர் 24 வரை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    "தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் உடன் தொடர்பில் இருப்பவர்கள் எண்ணிக்கை சுமார் 1080 வரை இருக்கும். அதில் 327 பேர் சுகாதாரத்துறை பணியாளர்கள்" என நிலைமையை கண்காணித்து நிர்வகித்து வரும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியிருக்கிறார்.

    கேரளாவின் மற்றோரு அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளாவிற்கு பயணம் செய்வதை தவிர்க்கும்படி அங்குள்ள மக்களை வலியுறுத்தியுள்ளது.

    • இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 93 ஆயிரத்து 480 ஆக உயர்ந்துள்ளது.
    • பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 895 ஆக அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று 108 ஆக இருந்த நிலையில் இன்று 90 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 93 ஆயிரத்து 480 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 146 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 59 ஆயிரத்து 660 ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1, 925 ஆக சரிந்துள்ளது. இது நேற்றை விட 58 குறைவு ஆகும். கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்புகள் இல்லை. அதே நேரம் கேரளாவில் விடுபட்ட 2 மரணங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை தொற்றுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 895 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
    தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து நேற்று பாதிப்பு எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது.

    குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 2 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார்.

    சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படியுங்கள்.. தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு
    சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 44-ல் இருந்து 59-ஆக அதிகரித்துள்ளது.
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு 100-க்கும் கீழ் இருந்து வந்தது.

    இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98-ல் இருந்து 139-ஆக அதிகரித்துள்ளது.

    சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 44-ல் இருந்து 59-ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 46-ல் இருந்து 58-ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனாவுக்கு சிக்சை பெறுவோர் எண்ணிக்கை 542-ல் இருந்து 629-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 52 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதையும் படியுங்கள்.. வணிக கியாஸ் சிலிண்டர் விலை 135 ரூபாய் குறைப்பு
    சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா நோய்தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. இதையடுத்து ஊரடங்கில் முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    பொது இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது சிறிது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

    கடந்த மாத தொடக்கத்தில் 1-ந்தேதி விவரப்படி தமிழகத்தில் பாதிப்பு 47 ஆக இருந்தது. இதே நிலையே தொடர்ந்து நீடித்து வந்தது.

    இந்த நிலையில் தினசரி பாதிப்பு 100-ஐ தாண்டும் நிலையில் உள்ளது.

    நேற்றைய நிலவரப்படி புதிதாக 98 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக செங்கல்பட்டு, சென்னை மாவட்டத்தில் தான் நோய் பாதிப்பு அதிக அளவில் பதிவாகி இருக்கிறது.

    செங்கல்பட்டு பாதிப்பு 46 ஆகவும், சென்னையில் 4 ஆகவும் உள்ளன.

    கோவை, திருவள்ளூர் மாவட்டத்தில் தலா 2 பேர், காஞ்சிபுரம் வேலூரில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மற்ற மாவட்டங்களில் நோய் பாதிப்பு இல்லை.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு 31-ந்தேதி புள்ளி விவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 56 ஆக இருந்தது. ஆனால் தற்போது இது 2 மடங்காக அதிகரித்து உள்ளது.

    இதையடுத்து சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    சென்னையில் இதுவரை 7 லட்சத்து 52 ஆயிரத்து 533 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 7 லட்சத்து 43 ஆயிரத்து 197 பேர் குணமடைந்து உள்ளனர். 268 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். 9 ஆயிரத்து 608 பேர் நோய் தொற்றால் இறந்துள்ளனர்.

    சென்னையை பொறுத்தவரை கல்வி நிறுவனங்களில் தான் நோய் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் 25 மாணவர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து பல்கலைக் கழகத்தில் அவர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை செய்தனர். இதில் இதுவரை 118 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி ஆகி உள்ளது.

    மேலும் 1,500 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதன் முடிவு வரவேண்டி உள்ளது. இதில் 40 மாணவர்களுக்கு கொரோனா உறுதி ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறிய அளவில் அறிகுறிகள் மட்டுமே உள்ளன. அவர்கள் கல்லூரி விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    இது குறித்து சுகாதார அதிகாரி ஒருவர் கூறும்போது:-

    கல்வி நிறுவனங்களில் தான் கொரோனா பாதிப்பு உள்ளது. அதனை தாண்டி வெளியே பெரிய அளவில் நோய் தொற்று பரவவில்லை என்றார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஐ.ஐ.டி.யில் 200 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதைத்தொடர்ந்து கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 74 பேர், அண்ணா பல்கலைக்கழகத்தில் 23 பேர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×