search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்ச்சல் முக கவசம்"

    • டெல்டா பிளஸ் மிக கொடூரமாக பலரது உயிரை பறித்தது.
    • டெல்டா வகை 8 உருமாற்றங்களை அடைந்தது.

    சென்னை:

    சீனாவில் உருவாகி உலகையே தடம்புரள செய்து விட்டது கொரோனா வைரஸ்.

    கடந்த 2018-ம் ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியது. 'சார்ஸ் கொரோனா வைரஸ்' எனப்படும் கொரோனா தொற்று பல உருமாற்றங்களை அடையக் கூடியது. 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகம் எடுத்து பரவியது.

    கொரோனா வைரஸ் சில வார இடைவெளிகளில் புதிய புதிய வடிவங்கள் எடுத்தது. காமா, பீட்டா, ஆல்பா, டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் என்று வகை வகையாக கொரோனா உருமாறியது. இதில் டெல்டா பிளஸ் மிக கொடூரமாக பலரது உயிரை பறித்தது.

    ஆல்பா வகை கொரோனா தீநுண்மி 2 உருமாற்றங்களை மட்டுமே பெற்றது. டெல்டா வகை 8 உருமாற்றங்களை அடைந்தது. இதற்கிடையே கொரோனா வைரஸ் ஓமைக்கரானாக மாறியது. இந்த ஓமைக்கரான் நூற்றுக்கும் மேற்பட்ட உருமாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.

    அந்த வரிசையில் ஓமைக்ரானின் உட்பிரிவான பிஏ 2.86 பைரோலா வைரசில் இருந்து புதிய வகை கொரோனா உருமாற்றம் அடைந்துள்ளது. அந்த புதிய வகை கொரோனா ஜே.என்.1 என்று அழைக்கப்படுகிறது.

    கொரோனா பெருந்தொற்றின் மீதான அச்சுறுத்தல் தொடர்ந்து உலகம் முழுக்க நிலைத்திருக்கும் என்பதை மீண்டும் காட்டும் வகையில் தற்போது புதிதாக உருவெடுத்திருக்கிறது ஜே.என்.1 வகை பாதிப்பு.

    இந்த புதிய கொரோனா முதலில் அமெரிக்காவில் கடந்த அக்டோபர் இறுதியில் கண்டறியப்பட்டது. இது தற்போது உலகில் உள்ள மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது.


    ஜே.என்.1 புதிய வவகை கொரோனா இந்தியாவிலும் பரவி இருக்கிறது. கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

    சிலரின் சளி மாதிரிகளை மரபணு பகுப் பாய்வுக்கு உட்படுத்தியதில் 63 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிக பட்சமாக கோவாவில் 34 பேருக்கும், அதற்கு அடுத்த படியாக மகாராஷ்டிராவில் 9 பேருக்கும், கர்நாடகாவில் 8 பேருக்கும் பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழ்நாட்டில் 4 பேருக்கு அத்தொற்று இருப்பதாக மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

    புதிய வகை கொரோனா பாதிப்பு இருந்தால் சில அறிகுறிகள் மூலம் கண்டு பிடித்துக் கொள்ளலாம். ஒருவருக்கு தொடர்ந்து சில தினங்கள் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, தலைவலி, சோர்வு, உடல்வலி, சுவாசிப்பதில் சிரமம், வயிற்றுப் போக்கு ஆகியவை இருந்தால் அது ஜே.என்.1 கொரோனா பாதிப்புக்கு அறிகுறிகளாக கருதப்படுகிறது.

    புதிய வகை கொரோனா தாக்கத்தில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை எளிதாக தற்காத்துக் கொள்ள முடியும். பொது இடங்களில் மற்றும் அதிக பேர் கூடும் பகுதிகளில் முகக் கவசம் அணிய வேண்டும். தனிநபர் இடைவெளி, கைகளை சோப்பு மூலம் கழுவுதல், இருமல், தும்மலின்போது வாய், மூக்கை மூடிக்கொள்ளுதல் அவசியமாகும்.

    இவை தவிர ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வகையில் ஊட்டச்சத்துமிக்க உணவுப் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது. மது, புகைப் பழக்கத்தைக் கைவிடுதல், உடற்பயிற்சி ஆகியவைகளை கடைபிடித்தால் ஜே.என்.1 புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    புதிய வகை கொரோனாவுக்கு தடுப்பூசி தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நூற்றுக்கணக்கான உருமாற்றங்களை பெற்று விட்டதால் ஏற்கனவே உள்ள தடுப்பூசிகள் ஜே.என்.1 வகைக்கு பலன் அளிக்காது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    அதே வேளையில் ஏற்கனவே தடுப்பூசி இரு தவணையும், பூஸ்டர் தவணையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு ஜே.என்.1 வகை தொற்று பாதித்தாலும், பாதிப்பு வீரியமாக இருக்காது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    புதிய வகை கொரோனாவான ஜே.என்.1 பற்றி சர்வதேச அளவில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டு விட்டன. உலக சுகாதார அமைப்பும் அதை பற்றி ஆய்வு செய்துள்ளது. இதன் மூலம் இந்த புதிய வைரஸ் வீரியமே இல்லாத ஒன்று என்று உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    சளி தொல்லை காய்ச்சலுடன் இந்த வைரஸ் விலகி சென்று விடும் என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். எனவே புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதை பற்றி மக்கள் எந்த வகையிலும் குழப்பமோ, பீதியோ அடைய தேவை இல்லை என்று மருத்துவர்கள் உறுதிப்பட தெரிவித்து உள்ளனர்.

    புதிய வகை கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள கவனமாக இருந்தால் போதும். ஜே.என்.1 ரக கொரோனா பாதித்தாலும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் புதிய வகை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதம் பேர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலையில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

    இணை நோய் இருப்பவர்களுக்கு மட்டுமே புதிய வகை கொரோனா வைரஸ் சற்று கூடுதல் உடல் வலியை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய நிலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருந்தால் போதுமானது.

    60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சளி, இருமல், ஜலதோஷம் ஏற்பட்டால் உடனடியாக அதை கவனித்து கொள்வது நல்லது.

    • கொரோனா பாதிப்பில் இருந்து 6 பேர் குணமடைந்துள்ளனர்.
    • காய்ச்சல் பாதிப்புள்ள நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம்.

    சென்னை:

    கொரோனா வைரஸ் புதிது புதிதாக உருமாறிய கொரோனாவாக பொது மக்களை பாதித்து வருகிறது. இப்போது புதிய வகை கொரோனா கேரளாவில் திடீரென அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று 309 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    அதில் சென்னை மாவட்டத்தில் 4 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 3 பேருக்கும், சேலம், திருவள்ளூர், திருப்பூர் மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், செங்கல்பட்டு, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து 6 பேர் குணமடைந்துள்ளனர்.

    புதிய வகை கொரோனா குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    கேரளாவில் புதிய வகை கொரோனா பரவி வருவதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். இப்போதைக்கு அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று கட்டாயமில்லை.

    காய்ச்சல் பாதிப்புள்ள நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். தற்போது புதுவகை கொரோனா எந்த மாதிரி உருமாறி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். இதன் முடிவு நாளை தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
    • காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவ மனைக்கு சென்று அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    நாட்டிலேயே அதிக அளவாக கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது ஆயிரத்தை தாண்டிவிட்டது. கொரோனா பரிசோதனை மாநிலத்தில் அதிக அளவில் செய்வதால் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

    மேலும் மக்களும் காய்ச்சலுக்காக தங்களை தாங்களே சுயமாக பரிசோதனை செய்வதால் கொரோனா பாதித்தவர்கள் பற்றிய விவரம் தெரியவருகிறது. மாநிலத்தில் இதுவரை 1324 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மேலும் கொரோனாவிற்கு கோழிக்கோட்டை சேர்ந்த குமரன் (வயது 77) மற்றும் கண்ணூர் பானூரை சேர்ந்த அப்துல்லா (82) ஆகியோர் பரிதாபமாக இறந்துவிட்டனர்.

    இதனைத்தொடர்ந்து வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவ மனைக்கு சென்று அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

    ×