search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "conflict"

    • திருவிழாவில் மோதலில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் எஸ்.ராமலிங்கபுரம், சிவகாமிபுரம் வடக்கு தெரு வடக்கத்தி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த சாரதாதேவி(29), அவரது கணவர் ஜெயபிரகாஷ்(35) உள்ளிட்ட பலர் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது சிவக்குமார் என்பவர் குடிபோதையில் பெண்கள் நிற்கும் பகுதிக்கு தள்ளாடிக்கொண்டு வந்தார். இதை கண்ட ஜெயபிரகாஷ் பெண்கள் நிற்கும் பகுதிக்கு ஏன் மதுபோதையில் வந்தார்? என கேட்டதற்கு, அவர் மற்றும் அவரது மனைவியை சிவக்குமார் தாக்கியுள்ளார். மேலும் சாரதா தேவியின் சேலையை பிடித்து இழுத்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த சாரதா உறவினர்கள் சிவக்குமாரை தாக்கினர். இதுகுறித்து இருதரப்பினரும் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெகட்ர் சார்லஸ் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • முன்விரோத தகராறு காரணமாக திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது .
    • 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த கிழக்கு ராமாபுரம் சேர்ந்தவர் அன்பழகன்.இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவருக்கும் முன்விரோத தகராறு இருந்து வருகின்றது. இந்த நிலையில் சம்பவத்தன்று 2 தரப்பினருக்கும் முன்விரோத தகராறு காரணமாக திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது . இந்த மோதலில் அன்பழகன், புனிதா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் புனிதா, சிவா, நாகராஜ் ஆகியோர் மீதும், புனிதா கொடுத்த புகாரின் பேரில் அன்பழகன், ஆகாஷ் என தனித்தனியாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சிவா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான மஞ்சல் நீராட்டு விழா நடைபெற்றது.
    • கோவில் பேனரையும் கிழித்து எரிந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பழ முக்கல் கிராமத்தில் உள்ள ஸ்ரீஆயியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் (கூழ் ஊற்றுதல்) நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று இக்கோவில் திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான மஞ்சல் நீராட்டு விழா நடை பெற்றது. விழாவை முன்னிட்டு பழமுக்கல் கிராமத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நல்லாளம் கிராமத்தை சேர்ந்த ஆஷிக் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றார். சாமி ஊர்வலத்தில் சென்றவர்களிடம் வழி விட்டு ஓரமாக செல்லுமாறு கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பழமுக்கல் இளைஞர்கள் ஆஷிக்கை தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த ஆஷிக், நல்லா ளம் கிராமத்திற்கு சென்று நண்பர்களிடம் இதனை தெரிவித்தார்.

    உடனடியாக ஆஷிக்கை, அவரது நண்பர்கள் பழ முக்கல் கிராமத்திற்கு அழைத்து வந்தனர். ஆஷிக்கை தாக்கியவர் களிடம் நியாயம் கேட்டனர். இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி தகரா றாக மாறியது. அங்கிருந்த செங்கல், சவுக்கு தடி போன்ற வைகளால் ஒரு வரை ஒருவர் தாக்கி கொண்டனர். மேலும், கோவில் பேனரையும் கிழித்து எரிந்தனர். இதில் 10-க்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பிரம்ம தேசம் போலீசார் காய மடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் பழமுக்கல், நல்லாளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மீது பிரம்மதேசம் இன்ஸ் பெக்டர் அன்பரசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்நிலையில் இருதரப் பைச் சேர்ந்த அன்பரசன் (வயது 25), அருள் (23), பிரசாந்த் (23), கிஷோர் (18), மணிகண்டன் (30), சோமசுந்தரம் (25) ஆகி யோரை பிரம்மதேசம் போலீசார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மரக்காணம் அருகே கோவில் திருவிழாவில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு கிராம இளைஞர்களிடையே தகராறு நடந்தது அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜனார்த்தனன் பெயிண்டிங் வேலைக்காக ஏர்வாடி மீனாட்சிபுரத்திற்கு நண்பர்களுடன் வந்திருந்தார்.
    • இரு தரப்பை சேர்ந்த 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    களக்காடு:

    தெற்கு வள்ளியூரை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது18). இவர் பெயிண்டிங் வேலைக்காக ஏர்வாடி மீனாட்சிபுரத்திற்கு நண்பர்களுடன் வந்திருந்தார். வேலை முடிந்ததும் ஊருக்கு புறப்பட்ட போது, சேசையாபுரத்தை சேர்ந்த கண்ணன் (26), மணிகண்டன் (26), பிரவின்குமார் (19), மற்றொரு மணிகண்டன் (19) ஆகிய 4 பேரும் சேர்ந்து ஜனார்த்தனை வழிமறித்து தகராறு செய்தனர்.

    இதுபற்றி ஜனார்த்தனன் தெற்கு வள்ளியூரில் உள்ள தனது உறவினர் இளங்கோவிடம் (19) தகவல் கூறினார்.

    இதையடுத்து இளங்கோ சம்பவ இடத்திற்கு வந்து ஏன் தகராறு செய்கிறீர்கள் என தட்டி கேட்டார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரம் அடைந்த கண்ணன், மணிகண்டன், பிரவின்குமார் , மற்றொரு மணிகண்டன் ஆகிய 4 பேரும் சேர்ந்து இளங்கோ மற்றும் ஜனார்த்தனை அவதூறாக பேசி பாட்டிலால் தாக்கினர். மேலும் அவரது மோட்டார்சைக்கிளையும் சேதப்படுத்தி மிரட்டல் விடுத்தனர்.

    இதுபோல இளங்கோ, முகேஷ்குமார் (18), ஜனார்த்தனன் (18), அஸ்வின்பாபு (20), முரளிகாந்த் (19), மாதவன் (22) ஆகிய 6 பேரும் சேர்ந்து பிரவின்குமாரை பாட்டிலால் தாக்கினர். இதுபற்றி இரு தரப்பினரும் ஏர்வாடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் இதுதொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கண்ணன், மணிகண்டன் பிரவின்குமார், மற்றொரு மணிகண்டன், இளங்கோ, முகேஷ்குமார் ஜனார்த்தனன் அஸ்வின்பாபு ,முரளிகாந்த் ஆகிய 9 பேரை கைது செய்தனர். மாதவனை தேடி வருகின்றனர்.

    • சிலம்பு வீட்டின் மாடியில் கார்த்தி உட்பட 5 பேர் வாடகைக்கு தங்கி வருகின்றனர்.
    • மோதலில் சிலம்பு மற்றும் வேளாங்கண்ணி ஆகியோர் காயம் அடைந்தனர்.

    கடலூர்: 

    கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 28). இவரது வீட்டின் மாடியில் கார்த்தி உட்பட 5 பேர் வாடகைக்கு தங்கி வருகின்றனர். இந்நிலையில் சிலம்பு வீட்டின் மாடியில் தங்கி இருக்கும் 5 பேரை காலி செய்யுமாறு கூறி வந்தார். சம்பவத்தன்று கார்த்திக்கும், சிலம்பிற்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. 

    அப்போது இந்த தகராறு மோதலாக மாறியது. இந்த மோதலில் சிலம்பு மற்றும் வேளாங்கண்ணி ஆகியோர் காயம் அடைந்தனர். பின்னர் இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் சிலம்பு கொடுத்த புகாரின் பேரில் கார்த்தி உட்பட 5 பேர் மீதும், வேளாங்கண்ணி கொடுத்த புகாரின்பேரில் சத்தியமூர்த்தி உட்பட 4 பேர் என மொத்தம் 9 பேர் மீது போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேர்திருவிழாவில் இருதரப்பினரிடையே மோதல் உருவானதால் கல்வீச்சு நடைபெற்றது
    • 12 பேர் கைது - போலீஸ் குவிப்பு

    தொட்டியம்,

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே வரதராஜபுரத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று மாலை கோவில் தேரோட்டம் நடைபெற்றது. தேர் ஊருக்குள் சென்று கொண்டிருந்த போது இருவேறு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கி கொண்டனர்.பிறகு தேரை ஒரு சமூகத்தினர் தூக்க முயன்றபோது போலீசார் தடுத்து இன்று (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தைக்கு பிறகு தூக்கி கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து மீண்டும் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.இந்தநிலையில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் சாலை மறியல் செய்ய முற்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். கல்வீச்சில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து, திருச்சி போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு குற்றாலிங்கம், முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு யாஸ்மின் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் வருவாய்த்துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக 12 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அப்பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க இன்ஸ்பெக்டர்கள் முத்தையன், செந்தில்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • முன்விரோதத்தில் ஏற்பட்ட மோதலில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.

    மதுரை

    மதுரை பைபாஸ் ரோடு திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் என்ற சோனையா (42). சத்யா நகரை சேர்ந்த ராஜா, நவீன்.

    இவர்கள் இருவரும் ஒரே பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் குறித்து முத்துக்குமார் செல்லூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் ராஜா, நவீன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக செல்வி என்பவர் கொடுத்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமார் என்ற சோனனை யாவை கைது செய்தனர்.

    • வேன்-மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாப இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கடம்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் தமிழ். இவர் சம்பவத்தன்று உறவினர் கண்ணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். வலையம்பட்டி மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தமிழ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த கண்ணன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிசிக்சை பெற்று வருகிறார்.

    விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    2 பெண்கள் காயம்

    சிவகங்கை அருகேயுள்ள தம்பிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் உஷாதேவி. திருப்பத்தூரை சேர்ந்தவர் மகேஷ்வரி. இவர்கள் இருவரும் ஆட்டோவில் பயணம் செய்தனர். கண்டராமாணிக்கம் விலக்கு பகுதியில் ஆட்டோ வந்தபோது பின்னால் வந்த கார் மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த உஷாதேவி, மகேஸ்வரி காயமடைந்து சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • எதிர்பாராமல் முரளிதரன் வீட்டில் பந்து விழுந்துவிட்டது.
    • மோதலில் முரளிதரன், முருகேஸ்வரி, பிரியதர்ஷினி ஆகிய 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 21). அதே பகுதியில் 4 பேர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராமல் முரளிதரன் வீட்டில் பந்து விழுந்துவிட்டது. இது தொடர்பாக முரளிதரன் கிரிக்கெட் விளையாடிய நபர்களிடம் கேட்டபோது வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.

    இந்த மோதலில் முரளிதரன், முருகேஸ்வரி, பிரியதர்ஷினி ஆகிய3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து கடலூர் தேவனாம்பட்டினம் போலீசார் அதே பகுதியை சேர்ந்த விக்கி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அண்ணன்-தம்பிகள் 3 பேருக்கும் இன்று காலை திடீரென மோதல் ஏற்பட்டது.
    • பலத்த காயம் அடைந்த சகோதரர்கள் 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மாதவரம்:

    மாதவரம் பொன்னியம்மன் மேடு திருமலை நகர் முதல் தெருவில் வசிப்பவர் வெங்கடேஷ். இவரது மகன்கள் சுரேஷ் (வயது 26), சீனிவாசன் (24), ஸ்ரீகாந்த் (20).இவர்களில் சுரேஷ் சாப்ட்பேர் நிறுவனத்திலும், சீனிவாசன் தனியார் வங்கியிலும் வேலைபார்த்தனர்.

    ஸ்ரீகாந்த் கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் அவர்களது பெற்றோர் ஆந்திரா சென்றனர். வீட்டில் இருந்த அண்ணன்-தம்பிகள் 3 பேருக்கும் இன்று காலை திடீரென மோதல் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரீகாந்த் கத்தியால் அண்ணன்கள் சுரேஷ், சீனிவாசன் ஆகியோரை சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றுவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த சகோதரர்கள் 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாதவரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    நாமகிரிப்பேட்டை அருகே தனியார் பஸ்-கார் மோதல்; 4 பேர் காயமடைந்தனர்.
    ராசிபுரம்:

    ராசிபுரத்தில் இருந்து ஒரு கார் ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோல் ஆத்தூரிலிருந்து ராசிபுரத்தை நோக்கி தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. 

    ஆயில்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது பஸ்சை கார் முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக காரும் பஸ்சும் மோதிக்கொண்டன.

     பஸ் சாலையோரத்தில் உள்ள தண்ணீர் இல்லாத சிறிய கால்வாயில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 4 பேர் காயமடைந்தனர். 

    சம்பவ இடத்திற்கு ஆயில்பட்டி போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு  சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். 
    சீர்காழி அருகே கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதலில் 12 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் நத்தம் பகுதியில் தனியார்கலை மற்றும் அறிவியல்கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரி மாணவர்கள் நேற்று மாலை வகுப்புகள் முடிந்து பேருந்தில் செல்வதற்காக சட்டநாதபுரம் கிராமத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்

    அப்போது மாணவர்க ளுக்கு இடையேமோதல் ஏற்பட்டது.இதனையடுத்து இரு பிரிவு மாணவர்களுக்கு ஆதரவாக வெளிநபர்களும் மோதலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பதற்றமான சூழ்நிலை காண ப்பட்டது. ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள் அதனை தட்டிக் கேட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து சீர்காழி காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் மாணவர்களுக்கு இடை யேயான மோதலை தடுத்த னர், அப்போது மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் உள்பட 12 பேரை விரட்டிப் பிடித்த சீர்காழி போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

    கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால் சட்டநாதபுரம் கைக்காட்டி பகுதியில் பரபரப்பாக சூழ்நிலை நிலவியது.
    ×