ஏர்வாடி அருகே மோதல்; 3 பேர் காயம்

ஜனார்த்தனன் பெயிண்டிங் வேலைக்காக ஏர்வாடி மீனாட்சிபுரத்திற்கு நண்பர்களுடன் வந்திருந்தார். இரு தரப்பை சேர்ந்த 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஏர்வாடி அருகே மோதல்;  3 பேர் காயம்
Published on

களக்காடு:

தெற்கு வள்ளியூரை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது18). இவர் பெயிண்டிங் வேலைக்காக ஏர்வாடி மீனாட்சிபுரத்திற்கு நண்பர்களுடன் வந்திருந்தார். வேலை முடிந்ததும் ஊருக்கு புறப்பட்ட போது, சேசையாபுரத்தை சேர்ந்த கண்ணன் (26), மணிகண்டன் (26), பிரவின்குமார் (19), மற்றொரு மணிகண்டன் (19) ஆகிய 4 பேரும் சேர்ந்து ஜனார்த்தனை வழிமறித்து தகராறு செய்தனர்.

இதுபற்றி ஜனார்த்தனன் தெற்கு வள்ளியூரில் உள்ள தனது உறவினர் இளங்கோவிடம் (19) தகவல் கூறினார்.

இதையடுத்து இளங்கோ சம்பவ இடத்திற்கு வந்து ஏன் தகராறு செய்கிறீர்கள் என தட்டி கேட்டார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரம் அடைந்த கண்ணன், மணிகண்டன், பிரவின்குமார் , மற்றொரு மணிகண்டன் ஆகிய 4 பேரும் சேர்ந்து இளங்கோ மற்றும் ஜனார்த்தனை அவதூறாக பேசி பாட்டிலால் தாக்கினர். மேலும் அவரது மோட்டார்சைக்கிளையும் சேதப்படுத்தி மிரட்டல் விடுத்தனர்.

இதுபோல இளங்கோ, முகேஷ்குமார் (18), ஜனார்த்தனன் (18), அஸ்வின்பாபு (20), முரளிகாந்த் (19), மாதவன் (22) ஆகிய 6 பேரும் சேர்ந்து பிரவின்குமாரை பாட்டிலால் தாக்கினர். இதுபற்றி இரு தரப்பினரும் ஏர்வாடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் இதுதொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கண்ணன், மணிகண்டன் பிரவின்குமார், மற்றொரு மணிகண்டன், இளங்கோ, முகேஷ்குமார் ஜனார்த்தனன் அஸ்வின்பாபு ,முரளிகாந்த் ஆகிய 9 பேரை கைது செய்தனர். மாதவனை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com