முன்விரோதத்தில் மோதல்; 2 பேர் கைது

முன்விரோதத்தில் ஏற்பட்ட மோதலில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.
முன்விரோதத்தில் மோதல்; 2 பேர் கைது
Published on

மதுரை

மதுரை பைபாஸ் ரோடு திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் என்ற சோனையா (42). சத்யா நகரை சேர்ந்த ராஜா, நவீன்.

இவர்கள் இருவரும் ஒரே பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் குறித்து முத்துக்குமார் செல்லூர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் ராஜா, நவீன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக செல்வி என்பவர் கொடுத்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமார் என்ற சோனனை யாவை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com