என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாதவரத்தில் 2 அண்ணன்களை கத்தியால் குத்திய தம்பி
- அண்ணன்-தம்பிகள் 3 பேருக்கும் இன்று காலை திடீரென மோதல் ஏற்பட்டது.
- பலத்த காயம் அடைந்த சகோதரர்கள் 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாதவரம்:
மாதவரம் பொன்னியம்மன் மேடு திருமலை நகர் முதல் தெருவில் வசிப்பவர் வெங்கடேஷ். இவரது மகன்கள் சுரேஷ் (வயது 26), சீனிவாசன் (24), ஸ்ரீகாந்த் (20).இவர்களில் சுரேஷ் சாப்ட்பேர் நிறுவனத்திலும், சீனிவாசன் தனியார் வங்கியிலும் வேலைபார்த்தனர்.
ஸ்ரீகாந்த் கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் அவர்களது பெற்றோர் ஆந்திரா சென்றனர். வீட்டில் இருந்த அண்ணன்-தம்பிகள் 3 பேருக்கும் இன்று காலை திடீரென மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரீகாந்த் கத்தியால் அண்ணன்கள் சுரேஷ், சீனிவாசன் ஆகியோரை சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றுவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த சகோதரர்கள் 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாதவரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story






