search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "complaints"

    • தூத்துக்குடி முத்தை யாபுரம் கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் சதீஷ்சுடலை (வயத25). இவர் முத்தையாபுரம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
    • நாங்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி எனது பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். பின்னர் முத்தையாபுரத்தில் வசித்து வந்தோம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தை யாபுரம் கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் சதீஷ்சுடலை (வயத25). இவர் முத்தையாபுரம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    காதல் திருமணம்

    நான் தூத்துக்குடியில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறேன். நானும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த நவ்சின்பானு என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தோம். அதற்கு அவர்கள் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் நாங்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி எனது பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். பின்னர் முத்தையாபுரத்தில் வசித்து வந்தோம்.

    இந்நிலையில் கடந்த மாதம் எங்கள் வீட்டிற்கு வந்த எனது மனைவியின் பெற்றோர் பழைய சம்பவங்களை மறந்து விட்டோம் என கூறினர். பின்னர் அவர்கள் திரும்பி செல்லும் போது நவ்சின்பானுவை அழைத்து சென்றனர்.

    இந்நிலையில் கடந்த மாதம் போன் செய்து எனது மனைவியை அழைத்த போது அவர் என்னுடன் வரமாட்டார் என அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

    இதற்கிடையே நவ்சின்பானு எனக்கு போன் செய்து அவரை துன்புறுத்துவதாகவும், நான் அவரை அழைத்து செல்லுமாறும் கூறினார். எனவே எனது மனைவியை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இது தொடர்பாக டி.எஸ்.பி. சத்தியராஜ் மேற்பா ர்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் விசாரணை நடத்தி வருகிறார். 

    • மனைவி பெயரில் ரூ.18 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்த வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை திருநகரை சேர்ந்தவர் பழனியப்பன். இவர் பரவை மீனாட்சி மில் காலனியைச் சேர்ந்த வேறு சமுதாயத்தை சேர்ந்த பெண் ஒருவரை சென்னைக்கு கடத்திச் சென்று விட்டார். அவர் அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு, சென்னை மதனந்தபுரம், கிருஷ்ணா நகரில் குடும்பம் நடத்தி வந்தார்.

    அப்போது பழனியப்பன் மனைவியின் பெயரில் ரூ.18 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.

    அதனை அவர் திரும்பி செலுத்தவில்லை. இந்த நிலையில் பழனியப்பன் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்து உள்ளார்.

    மேலும் பழனியப்பன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது.
    • குறைத்தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார் வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    நாமக்கல் மின் பகிர்மான வட்டம் சார்பாக, மாதம் தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் நடத்தப்படுகிறது. இதில் பொதுமக்களை நேரிடையாக சந்தித்து புகார் மனுக்களை பெற்று மக்களின் குறைதீர்க்கப்படுகிறது.

    அதன்படி ஜூலை மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 13-ந் தேதி மாலை 3 மணிக்கு பரமத்தி வேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 20-ந் தேதி மாலை 3 மணிக்கு திருச்செங்கோடு செயற் பொறியாளர் அலுவலகத்திலும், 27-ந் தேதி மாலை 3 மணிக்கு ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது. இதில் அந்தந்த கோட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து நிர்வர்த்தி பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வடக்குபொய்கைநல்லூர் கிராமத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.
    • பொதுமக்கள் தங்களது குறைகளை இலவச எண்கள் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி காவல் சரகம் வடக்கு பொய்கைநல்லூர் கிராமத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்

    பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க இலவச எண்கள் மூலம் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், வேளாங்கண்ணி சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டித்து தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #PollachiAbuseCase
    தேனி:

    பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    தேனி - அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் முகமது அலி ஜின்னா தலைமையில் நிர்வாகிகள் ஞான திருப்பதி, அன்பழகன், உடையாளி, பாலமுருகன், கிருஷ்ணசாமி உள்பட அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் அனுமதி இல்லாமல் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வி.ஏ.ஓ. குமரேசன் தேனி போலீசில் புகார் அளித்தார். அதன்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #PollachiAbuseCase
    பொள்ளாச்சி பாலியல் புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசாருக்கு இதுவரை 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது. #PollachiAbuseCase #PollachiCase
    கோவை:

    பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் எனவும் புகார் தெரிவிப்பவர்கள் பெயர், விவரம் ரகசியம் காக்கப்படும் எனவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்து இருந்தனர்.

    புகார் தெரிவிக்க 94884-42993 என்ற எண்ணையும் தெரிவித்து இருந்தனர். இந்த எண் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலே ஏராளமான புகார்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு வந்தது.

    இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறும்போது நேற்று தான் புகார் தெரிவிக்க செல்போன் எண் கொடுத்து இருந்தோம். அதற்குள் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்து விட்டது.

    அவர்கள் பாலியல் பலாத்கார கும்பல் மீது பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றனர் என்றனர். #PollachiAbuseCase #PollachiCase

    ஊட்டியில் வாகன நிறுத்தும் இடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசனை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் ஊட்டிக்கு வந்து செல்கிறார்கள். ஊட்டி நகரில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் (என்.சி.எம்.எஸ்.), அசெம்பிளி ரூம்ஸ், திபெத்தியன் மார்க்கெட், ஏ.டி.சி. திடல் அருகே உள்ள காந்தி மைதானம் உள்பட பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர். இதில் ஒரு சில வாகன நிறுத்துமிடங்களில் கார், வேன், பஸ்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்து உள்ளன.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு பல்வேறு புகார் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீசார் சார்பில், ஊட்டியில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தெரியும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. அதில், சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டண வசூல் செய்யும் இடங்களில் வாகனங்கள் 24 மணி நேரம் நிற்கலாம். கார் மற்றும் ஜீப்புக்கு ரூ.50, வேன் மற்றும் மினி பஸ்சுக்கு ரூ.100, பஸ்சுக்கு ரூ.150-ம் கட்டணமாக வசூலிக்க வேண்டும். நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஊட்டியில் உள்ள ஒருசில வாகனம் நிறுத்தும் இடங்களில் கார் மற்றும் ஜீப்புகளுக்கு ரூ.60-ம், பஸ்சுக்கு ரூ.180-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த ரசீதுகளும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படுகிறது. வாகன நிறுத்தும் இடங்களின் முன்பகுதியில் புதியதாக வைக்கப்பட்டு உள்ள அறிவுப்பு பலகையை சுற்றுலா பயணிகள் பார்த்து விட்டு, கட்டணம் வசூலிப்பவரிடம் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் கூடுதல் கட்டணமே வசூலிப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:- நீலகிரி மாவட்ட போலீசார் சார்பில், ஊட்டியில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் கட்டணம் நிர்ணயம் குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஒரு சில இடங்களில் அந்த பலகைகள் மறைக்கப்பட்டு உள்ளது. சில பார்க்கிங் உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதால், சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நிர்ணயம் செய்யப்பட்டதை விட பஸ்சுக்கு ரூ.30 கூடுதலாக வசூலிப்பதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து பார்க்கிங் நிர்வாகிகள் கூறும்போது, ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்தனர். 
    காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சியின் தலைவர்களை பிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசுவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதியுள்ளார். #ManmohanSingh #PMModi
    புதுடெல்லி:

    உன்னாவ் மற்றும் கத்துவா பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து நாட்டில் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், பிரதமர் மோடி மவுனம் காத்ததை விமர்சித்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “நீங்கள் எனக்கு அளித்த அறிவுரைகளை பின்பற்றி தற்போது வாய்திறந்து பேசுங்கள்” என மன்மோகன் குறிப்பிட்டிருந்தார்.

    கடந்த வாரம் கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரங்களில் பேசும் போது, காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக விமர்சித்து மோடி பேசியிருந்தார். குறிப்பாக நாட்டின் முதல் பிரதமர் நேரு, பகத்சிங் உள்ளிட்டவர்களை சிறையில் சென்று சந்திக்கவில்லை என கூறினார். ஆனால், அது பொய்யான குற்றசாட்டு என பல வரலாற்று ஆசிரியர்கள் பதிலடி கொடுத்திருந்தனர்.


    இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், “பிரதமர் மோடி காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சி தலைவர்களை மிரட்டும் தொனியில் பேசுகிறார். இது பிரதமர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு தகுதியானது அல்ல” என அதில் மன்மோகன் குற்றம் சாட்டியுள்ளார்.

    மேற்கண்ட புகார் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமரிடம் கேட்டறிய வேண்டும் என மன்மோகன் சிங் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். #ManmohanSingh #PMModi
    ×