search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார்கள்"

    • கடலூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள்,தி.மு.க. கவுன்சிலர்கள் ஆகியோர் நேரில் வந்து பரபரப்பு புகார் மனு அளித்தனர்.
    • மேயர் சுந்தரி ராஜா, 21 தி.மு.க. கவுன்சிலர்கள் வழங்கிய புகார் மனுவை பெற்றுக் கொண்டார்

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி மேயராக சுந்தரி ராஜா, துணை மேயராக தாமரைச்செல்வன் இருந்து வருகிறார்கள். கடந்த ஆண்டு மாநகரா ட்சி மேயர் தேர்தலில் சுந்தரி ராஜா போட்டியிட்டு கவுன்சிலர்கள் வாக்களித்து வெற்றி பெற்று மேயராக பொறுப்பேற்றார் . இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவிடம், கடலூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள்,தி.மு.க. கவுன்சிலர்கள் ஆகியோர் நேரில் வந்து பரபரப்பு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரை ச்செல்வன் துணை மேயர் தேர்தலில் போட்டி யின்றி தி.மு.க.மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் ஆதரவுடன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டடார். எங்கள் வார்டு பகுதிகளில் தொடர்ந்து துணை மேயர், வார்டு நிர்வாகத்தில் தலையிடுவதாக புகார்கள் வந்துள்ளது. இதன் காரணமாக வருகின்ற மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயர் தாமரைச்செல்வன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, 21 தி.மு.க. கவுன்சிலர்கள் வழங்கிய புகார் மனுவை பெற்றுக் கொண்டார் . தி.மு.க.தலைமை மற்றும் மாவட்ட செயலாளர் எடுக்கும் முடிவு இறுதியானதாகும் என தெரிவித்தார். தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருந்து வருகின்றன. தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒரே துணை மேயராக தாமரைச்செல்வன் மட்டும் இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் திடீரென்று துணைமேயர் தாமரைச்செல்வன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என போர்கொடி தூக்கி புகார் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கும்பகோணம் பகுதியில் வாகனத்தில் அதிக பாரம் ஏற்றி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    • இதில் 2 வாகனங்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தற்போது கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் விவசாய அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் விதிகளை மீறி லாரி, டிராக்டர் உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் அளவுக்கு அதிகமாகவும், அதிக உயரமாகவும் வைக்கோல் உள்ளிட்ட சரக்குகளை ஏற்றி செல்வதாக புகார்கள் வருகின்றன.கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவாமிமலை அருகே திருப்புறம்பியம் பகுதியில் அதிக உயரத்தில் வைக்கோலை ஏற்றிச்சென்ற லாரி ஒன்றும், சரக்கு வேனும் மின்கம்பியில் உரசி தீப்பற்றி எரிந்தது.

    இதில் 2 வாகனங்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின. கடும் நடவடிக்கை இவ்வாறு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததற்கு அதிக உயரத்தில் வைக்கோலை ஏற்றி சென்றதே காரணம்.

    எனவே இது போன்று அதிக பாரம் மற்றும் அதிக உயரத்தில் சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் பிடிபட்டால் வாகனங்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர்கள் மீது சட்டரீதியாககடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும் வாகனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் மழைநீர் தேங்கி நிற்கிறது.
    • மக்கள் தங்கள் வீடுகளுக்கு சேற்றில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    பூதலூர்:

    பூதலூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்கிறது.

    பகல் நேரங்களில் வெயில் அடித்தாலும் இரவில் மழை பெய்கிறது.

    மழை காரணமாக பல தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் பல்வேறு சுகாதார கேடுகள் விளையும் அபாய நிலைஏற்பட்டு உள்ளது.

    பூதலூர் நகரில் உள்ள சந்து தெருவில் சிறிய அளவில் மழை பெய்தாலும் பெரிய அளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.தேங்கிய தண்ணீர் வடிவதற்கு வழி இல்லாமல் துர்நாற்றம் வீ சூவதோடு கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை உள்ளது.

    இதைப்போலவே கோவில்பத்து ஊராட்சியில் கல்லணை கால்வாய் கரையோரம் உள்ள பாத்திமா நகர் பகுதியில் பிரதான சாலையில் குண்டும் குழியுமாக உள்ளதால் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் இந்த சாலை வழியாக இந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல சேற்றில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.மேலும்இரண்டு சக்கர வாகனங்களை ஓட்டுவதில் சிரமமும் உள்ளது.

    இந்த சாலை வழியாக பகுதி மக்களின் மயானமும் உள்ளதால் அங்கு செல்வதும் சிரமம் ஆக உள்ளது.

    இது குறித்து பலமுறை உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அனைவருக்கும் புகார்கள் அனுப்பியும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை என்று இந்த இரண்டு பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    தொடர்ந்து மழை பெய்யும் என்ற நிலையிலும், வடகிழக்கு பருவமழை தொடங்கும் சூழ்நிலையில் இதுபோல தண்ணீர் தேங்கியு இடங்களை கண்டறிந்து போதிய வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்று இந்த பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    • களியக்கா விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்கு மரன் தலைமையில் போலீ சார் அதங்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர்.
    • அப்போது தனி யாருக்கு சொந்தமான நிலத்தில் கல் உடைக்க பயன்படுத்தப்படும் வாகனம் மூலம் எந்த அனுமதியும் இல்லாமல் பாறைகளை உடைப்பது தெரியவந்தது.
    • அந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

    அக்.13-

    களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதி யில் சிலர் சட்ட விரோத மாக அனுமதி இல்லாமல் பெரிய கற்களை உடைத்து கடத்துவதாக களியக்கா விளை போலீ சாருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து களியக்கா விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்கு மரன் தலைமையில் போலீ சார் அதங்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது தனி யாருக்கு சொந்தமான நிலத்தில் கல் உடைக்க பயன்படுத்தப்படும் வாகனம் மூலம் எந்த அனுமதியும் இல்லாமல் பாறைகளை உடைப்பது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் அந்த வாக னத்தை பறிமுதல் செய்த னர். வாகனத்தின் உரிமை யாளர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடி விட்டார். இதைத்தொடர்ந்து அந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

    மேலும் வாகனத்தின் உரிமையாளர் யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்ற

    னர்.

    • நெசவாளர் குறை தீர்க்கும் மையத்திற்கென முகமை அலுவலர், குறை தீர்க்கும் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • குறை தீர்க்கும் அலுவலரை அரசு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரடியாக சந்தித்து தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:-

    2021-2022 ம் ஆண்டின் கைத்தறி துறையின் மானியக்கோரிக்கையின் போது கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரால் கைத்தறி ஆணையரகத்தில் 'நெசவாளர் குறை தீர்க்கும் மையம் அமைக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. இந்த நெசவாளர் குறைதீர்க் கும் மையமும், இதற்கென உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக மனுக்களை பரிசீலிக்கும் இணையதள மும் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரால் 23.03.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

    நெசவாளர் குறை தீர்க்கும் மையத்திற்கென முகமை அலுவலர், குறை தீர்க்கும் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    நெசவாளர்குறை தீர்க் கும் மையமானது அரசின் பல்வேறு நெசலாளர் நலத்திட்டங்களில் உறுப்பினராக சேர்த்தல், உறுப்பினர் சேர்க்கையில் ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் இதர கோரிக்கைகளான வேலைவாய்ப்பு கோருதல், கூலி உயர்வு வழங்க கோருதல், முதியோர் ஓய் வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை தெரிவித்து உடனுக்குடன் தீர்வு பெறும் வகையில் தெரிவிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. குறை தீர்க்கும் அலுவலரை அரசு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரடியாக சந்தித்து தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இதற்கென உருவாக்கப்பட்ட இணையதள முகவரி: https://gdpt. tn.gov.in/dhl. பிரத்தியேக இணையதளத்தில் நெச வாளர்கள் தங்கள் குறைகளை பதிவேற்றம் செய்யலாம்.

    அரசு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிவரை தொலைபேசி எண் 044-25340518 மூலம் தெரிவிக்கலாம். நெசவா ளர் குறை தீர்க்கும் மையத் தின் மின்னஞ்சல் முகவரி: wgrcchennai@gmail.com, mail to : wgrcchennai@gmail. com நெசவாளர் குறை தீர்க்கும் மையம், கைத்தறி ஆணையரகம், குறளகம் 2-ம் தளம், சென்னை-104 என்ற முகவரிக்கு துணை இயக்குநர் (அமலாக்கம்)/ குறை தீர்க்கும் அலுவல ருக்கு முகவரியிட்டு கடிதம் மூலமாக தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×