search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வார்டு நிர்வாகத்தில் தலையிடுவதாக புகார் துணை மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும்: மேயரிடம் தி.மு.க. கவுன்சிலர்கள் மனு
    X

    தி.மு.க கவுன்சிலர்கள் மேயரிடம் மனு அளித்த காட்சி.

    வார்டு நிர்வாகத்தில் தலையிடுவதாக புகார் துணை மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும்: மேயரிடம் தி.மு.க. கவுன்சிலர்கள் மனு

    • கடலூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள்,தி.மு.க. கவுன்சிலர்கள் ஆகியோர் நேரில் வந்து பரபரப்பு புகார் மனு அளித்தனர்.
    • மேயர் சுந்தரி ராஜா, 21 தி.மு.க. கவுன்சிலர்கள் வழங்கிய புகார் மனுவை பெற்றுக் கொண்டார்

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி மேயராக சுந்தரி ராஜா, துணை மேயராக தாமரைச்செல்வன் இருந்து வருகிறார்கள். கடந்த ஆண்டு மாநகரா ட்சி மேயர் தேர்தலில் சுந்தரி ராஜா போட்டியிட்டு கவுன்சிலர்கள் வாக்களித்து வெற்றி பெற்று மேயராக பொறுப்பேற்றார் . இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவிடம், கடலூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள்,தி.மு.க. கவுன்சிலர்கள் ஆகியோர் நேரில் வந்து பரபரப்பு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரை ச்செல்வன் துணை மேயர் தேர்தலில் போட்டி யின்றி தி.மு.க.மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் ஆதரவுடன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டடார். எங்கள் வார்டு பகுதிகளில் தொடர்ந்து துணை மேயர், வார்டு நிர்வாகத்தில் தலையிடுவதாக புகார்கள் வந்துள்ளது. இதன் காரணமாக வருகின்ற மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயர் தாமரைச்செல்வன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, 21 தி.மு.க. கவுன்சிலர்கள் வழங்கிய புகார் மனுவை பெற்றுக் கொண்டார் . தி.மு.க.தலைமை மற்றும் மாவட்ட செயலாளர் எடுக்கும் முடிவு இறுதியானதாகும் என தெரிவித்தார். தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருந்து வருகின்றன. தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒரே துணை மேயராக தாமரைச்செல்வன் மட்டும் இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் திடீரென்று துணைமேயர் தாமரைச்செல்வன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என போர்கொடி தூக்கி புகார் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×