தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் அவதி

சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் மழைநீர் தேங்கி நிற்கிறது.மக்கள் தங்கள் வீடுகளுக்கு சேற்றில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தெருக்களில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்.
தெருக்களில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்.
Published on

பூதலூர்:

பூதலூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்கிறது.

பகல் நேரங்களில் வெயில் அடித்தாலும் இரவில் மழை பெய்கிறது.

மழை காரணமாக பல தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதனால் பல்வேறு சுகாதார கேடுகள் விளையும் அபாய நிலைஏற்பட்டு உள்ளது.

பூதலூர் நகரில் உள்ள சந்து தெருவில் சிறிய அளவில் மழை பெய்தாலும் பெரிய அளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.தேங்கிய தண்ணீர் வடிவதற்கு வழி இல்லாமல் துர்நாற்றம் வீ சூவதோடு கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை உள்ளது.

இதைப்போலவே கோவில்பத்து ஊராட்சியில் கல்லணை கால்வாய் கரையோரம் உள்ள பாத்திமா நகர் பகுதியில் பிரதான சாலையில் குண்டும் குழியுமாக உள்ளதால் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதனால் இந்த சாலை வழியாக இந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல சேற்றில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.மேலும்இரண்டு சக்கர வாகனங்களை ஓட்டுவதில் சிரமமும் உள்ளது.

இந்த சாலை வழியாக பகுதி மக்களின் மயானமும் உள்ளதால் அங்கு செல்வதும் சிரமம் ஆக உள்ளது.

இது குறித்து பலமுறை உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அனைவருக்கும் புகார்கள் அனுப்பியும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை என்று இந்த இரண்டு பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து மழை பெய்யும் என்ற நிலையிலும், வடகிழக்கு பருவமழை தொடங்கும் சூழ்நிலையில் இதுபோல தண்ணீர் தேங்கியு இடங்களை கண்டறிந்து போதிய வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்று இந்த பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com