search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "College"

    • காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் துறை புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி நடந்தது.
    • புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

    சிவகாசி

    திண்டுக்கல்லில் சிவகாசி காளீஸ்வரி கல்லூரி இளங்கலை வணிகவியல் துறை மற்றும் திண்டுக்கல் பார்வதி கல்லூரி வணிகவி யல் துறையுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெப்பமிடும் நிகழ்ச்சி நடந்தது.

    பார்வதி கல்லூரி முதல்வர் சுகுமார் தலைமை தாங்கினார். காளீஸ்வரி கல்லூரி முதல்வர் பாலமுரு கன், வணிகவியல் துறை தலைவர் குருசாமி, திண்டுக்கல் கல்லூரி முதல்வர் சுகுமார், வணிகவியல் துறை தலைவர் வனிதா ராணி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

    இதற்கான ஏற்பாடுகளை காளீஸ்வரி கல்லூரி பேராசிரியர் பாபு பிராங்க ளின் செய்திருந்தார்.

    • தற்கால தொழில் நுட்ப வளர்ச்சிகள்’ என்ற தலைப்பில் நடந்தது.
    • மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    இந்திய பொறியாளர் அமைப்பு, புதுச்சேரி மாநில மையம் மற்றும் மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி, இயந்திரவியல் துறை இணைந்து அகில இந்திய அளவிலான 2-நாள் கருத்தரங்கம் 'நானோ டெக்னாலஜியில் வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்கள் தற்கால தொழில் நுட்ப வளர்ச்சிகள்' என்ற தலைப்பில் நடந்தது.

    மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். இந்திய பொறியாளர் அமைப்பின் மாநில தலைவர் ராஜாராமன் வர வேற்றார். செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்கண் வாழ்த்துரை வழங்கினார்.

    விழாவில் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை துணைவேந்தர் மோகன் நானோ டெக்னாலஜியின் பல்வேறு வளர்ச்சிகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து பேசினார்.

    இந்திய பொறியாளர் அமைப்பின் அகில இந்திய இயந்திரவியல் துறை தலைவர் ரங்கா ரெட்டி நானோடெக்னாலஜி துறையில் இயந்திரவியல் தொழில்நுட்பத்தின் பங்கு மற்றும் எதிர்கால வாய்ப்புகளை விளக்கினார். முதல்நாள் கருத்தரங்கில், முன்னாள் இஸ்ரோ' முதுநிலை விஞ்ஞானி சிவசுப்ரமணியன், அப்துல் கலாம் மற்றும் இந்திய விண்வெளி தந்தை விக்ரம் சாராபாயுடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும், விண்வெளி துறையில் பல்வேறு தொழில்நுட்பங்கள், அவை உபயோகிக்கப்படும் இடங்கள் குறித்து பேசினார்.

    2-ம் நாள் கருத்தரங்கில், புதுச்சேரி பல்கலை பசுமை ஆற்றல்தொழில்நுட்ப துறை பேராசிரியர் ஏழுமலை மின்கலன்களில் நானோ தொழிநுட்பங்கள் மற்றும் அதன் வளர்ச்சிகள் குறித்து பேசினார்.

    புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலை மெக்கட் ரானிக்ஸ் துறை தலைவர் இளஞ்செழியன் சூப்பர் ஹைட்ரோபோபிக் நானோ பூச்சு தொகுப்பு மற்றும் பயன்பாடுகள் குறித்து பேசினார். கருத்தரங்க நிறைவு விழாவில், சிறந்த பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்பட்டது. இந்திய பொறியாளர் அமைப்பின் மாநில கவுரவ செயலாளர் திருஞானம் நன்றி கூறினார்.

    • கேலிவதை தடுப்பு குழு சார்பில் பெண்மொழி படைப்புத்திறன் பயிலரங்கம் நடந்தது.
    • குறும்பட இயக்குனர் செந்தில்ராம் கதையை குறும்படம் ஆக்குவது குறித்து பேசினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் மாணவர் குறைதீர் மன்றம் மற்றும் கேலிவதை தடுப்பு குழு சார்பில் பெண்மொழி படைப்புத்திறன் பயிலரங்கம் நடந்தது.

    கல்லுாரி முதல்வர் ஜான்பீட்டர் தலைமை வகித்து பேசும்போது, பெண்களுடைய உணர்வு களை அவர்கள் பதிவு செய்யும் போதுதான் ஒரு படைப்பு உயிர்ப்புடன் இருக்கும் என்றார்.

    எழுத்தாளர் சசிகுமார், கவிஞர் ஜெயந்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    குறும்பட இயக்குனர் செந்தில்ராம் கதையை குறும்படம் ஆக்குவது குறித்து பேசினார்.

    மாணவி யோகப்பிரியா, உதவி பேராசிரியை தங்கமதி, விடுதி காப்பாளர் மெகருனி சாபேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஒருங்கிணைப்பாளர் இந்திரா காந்தி, இணை ஒருங்கிணைப்பாளர் சுஜித்ரா மற்றும் குழுவினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி முன்னால் மாணவர்கள் தொழில் முனைவோராகியுள்ளனர்
    • பல்கலைக்கழக வேந்தரிடம் வாழ்த்து

    பெரம்பலூர்:

    தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் விமானவியல் துறையின் முன்னாள் மாணவர்களான (2013 - 2017) திருச்சியைச் சேர்ந்த நித்தீஷ் புஷ்பராஜ், கடலூரைச் சேர்ந்த மணிமாறன் கணேசன், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட வேல்முருகன் செல்வராஜ் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறினர்.

    பின்னர் அவர்கள் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசனை சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர்.

    இந்த மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் TAV சிஸ்டம்ஸ் என்ற மின்சாரத்தினால் இயங்கும் இரு சக்கர மிதிவண்டி தயாரிப்பு நிறுவனத்தை ஆஸ்திரேலியாவின் ஃபிளிண்டர்ஸ்

    பல்கலைக்கழகத்தின் உதவியுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு நிறுவி வெற்றிகரமாக நடத்தி

    வருகின்றனர். மேலும் சென்னையில் அதன் கிளையையும் தொடங்கி உள்ளனர்.

    கிளை நிறுவனம் சென்னையில் தொடங்கி சுமார் 100க்கும் மேற்பட்டோருக்கு

    வேலைவாய்ப்பினை வழங்கி வருகிறது. சென்னையில் உற்பத்தி செய்யப்படும் மின்சார

    மிதிவண்டிகள் ஆஸ்திரேலியாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இது குறித்து முன்னாள் மாணவர் நித்தீஷ் பேசியதாவது, நாங்கள் இந்த அளவிற்கு வாழ்வில்

    முன்னேற்றம் அடைய மிகவும் உறுதுணையாக இருந்ததது இந்த தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் பயிலும் போது பெற்ற அறிவும், அனுபவமும், பேராசியர்களின் ஊக்கமும் மற்றும் பல்கலைக்கழக வேந்தரின் உந்து சக்தியாலும் தான் எங்களால் வெற்றிபெற முடிந்தது.

    இந்த பாராட்டு நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் இளங்கோவன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் வேல்முருகன், கல்வி முதன்மையர் அன்பரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் கணிதம் குறித்த விரிவுரை நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவிகள் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் முதுகலை மற்றும் கணித ஆராய்ச்சி துறை, விருதுநகர் மாவட்ட கல்லூரிகளின் கணித ஆசிரியர்களின் கூட்டமைப்பு இணைந்து 'நிஜஉலகில் கணிதம்'என்ற தலைப்பில் விரிவுரை நிகழ்ச்சியினை நடத்தியது.

    கல்லூரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை தாங்கினார். எஸ்.எப்.ஆர். கல்லூரி கணித துறை தலைவர் பெத்தனாட்சி செல்வம் வரவேற்றார். இணை பேராசிரியை மாலினிதேவி அறிமுக உரையாற்றினார்.

    திருவாரூர் மத்திய பல்கலைக்கழக உதவிபேராசிரியர் சந்திர சேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கணித பயன்பாடு, முக்கியத்துவம் குறித்து பேசினார். உதவி பேராசிரியர் முத்துமாரி நன்றி கூறினார்.

    இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    • கல்லூரி மாணவி வழிமறித்து வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புலியூர் சித்தன். இவரது 17 வயது மகள் கிருஷ்ணன் கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத் தன்று அவரை மர்ம நபர் ஒருவர் செல்போனில் அழைத்தார். அவரது தந்தைக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக ஊருக்கு வருமாறும் அவர் கூறியுள்ளார்.

    அதனை நம்பிய மாணவி உடனடியாக ஊருக்கு புறப்பட்டார். கல்லூரிக்கு வெளியே வந்து பஸ் ஏறுவதற்காக காட்டன் மார்க்கெட் பகுதிக்கு வந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கிருஷ்ணன் கோவில் போலீஸ் நிலை யத்தில் சித்தன் புகார் செய்தார். அதில், ராஜ பாளையம் தாட்கோ காலனியை சேர்ந்த முத்துப் பாண்டி மகளை கடத்தி யிருக்கலாம் என சந்தே கிப்பதாக அவர் கூறியுள் ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன்னதாக கல்லூரி முதல்வர் விக்டோரியா அனைவரையும் வரவேற்றார்.
    • முடிவில் ஆசிரியர் அரவாளி நன்றி கூறினார்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்ஸ் கல்லூரியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுக்கான ஐ.ஏ.எஸ் அகாடமி மையம் திறப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சென்னை அடைக்கல அன்னை சபையின் தலைவர் மரியபிலோமி தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, நகராட்சி தலைவர் மன்னை சோழராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கலந்து கொண்டு புதிய ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், நகர செயலாளர் வீரா கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கல்லூரி முதல்வர் விக்டோரியா அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் அரவாளி நன்றி கூறினார்.

    • அருள் ஆனந்தர் கல்லூரியில் ரத்ததானம்-உறுப்புதான முகாம் நடந்தது.
    • ரத்ததான சேவைக்காக மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியின் ரத்ததான சேவை இயக்கத்தின் பொன் விழாவை (1973- 2023) முன்னிட்டு 50 ஆண்டு கால ரத்ததான சேவையை நினைவுகூறும் வகையில், மெகா ரத்ததானம் மற்றும் உடல் உறுப்பு தான முகாம் கல்லூரியில் நடைபெற்றது.

    நிகழ்வில், கல்லூரி முதல்வர் அன்பரசு வர வேற்றார். சுகாதார பணிகள் துணை இயக்குநர் குமர குருபரன், சுகாதார பணிகள் இணை இயக்குநர் செல்வ ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    சிறப்பு விருந்தினராக ஜெர்ரி ரொசாரியோ கலந்து கொண்டு ரத்ததானத்தின் முக்கியத்துவம் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ரத்ததானம் செய்த கல்லூரி மாண வர்கள், கிராம மக்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர் களுக்கு பாராட்டு தெரி விக்கப்பட்டது. என்.எஸ். எஸ். திட்ட ஒருங்கி ணைப்பாளர் நல்லதம்பி நன்றி கூறினார்.

    அருள் ஆனந்தர் கல்லூரியின் இளைஞர் மேம்பாட்டுத்துறையின் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் 151 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது. ஜெரி ரொசாரியோவால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த இயக்கம், ரத்ததான சேவைக்காக மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது.

    ஓராண்டில் (1973ம் வருடம்) அதிக எண்ணிக்கை யில் ரத்ததானம் செய்த மைக்கான சுழற்கோப்பை மற்றும் கேடயத்தை வென்றது. அப்போதைய தமிழக முதல்வராக இருந்த டாக்டர் மு.கருணாநிதி தன்னார்வக் கொடையாளர் விழாவில் கல்லூரிக்கு கோப்பை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக ரத்த தானச் சேவையை வலியுறுத்தும் விதமாக கல்லூரி மாணவ ர்கள் பங்கேற்ற விழி ப்புணர்வு மாரத்தான் போட்டியை செல்லம்பட்டி யில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் முத்து ராமன் தொடங்கி வைத்தார்.

    விழாவில் கல்லூரி அதிபர் ஜான் பிரகாசம், செயலர் அந்தோணிசாமி, மதுரை தோப்பூர் முதன்மை மருத்துவ அலுவலர் காந்திமதி நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 335 மாணவர்களும், 15 பணியாளர்களும் ரத்ததா னம் செய்தனர். 300 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.

    • தமிழ் இலக்கியங்களில் புதிய தேடல்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
    • முடிவில் முனைவா் கரிகாலன் நன்றி கூறினாா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் முதுகலைத் தமிழாய்வுத் துறை சாா்பில் தமிழ் இலக்கியங்களில் புதிய தேடல்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வா் ஜான்பீட்டா் தலைமை வகித்தாா். இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சண்முகலிங்கன், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவன முன்னாள் இயக்குநா் பக்தவத்சலபாரதி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

    தோ்வு நெறியாளா் மலா்விழி, உதவிப் பேராசிரியா் தமிழ்ச்செல்வி, முனைவா் சம்பகலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தமிழ்த் துறைத் தலைவா் வைஜெயந்தி மாலா வரவேற்றாா். முடிவில் முனைவா் கரிகாலன் நன்றி கூறினாா்.

    • முத்துநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (47) இவர் சேலம் அரசு டவுன் பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
    • விஜயராகவன் (51) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தவர், அரசு பஸ் டிரைவர் செல்வத்திடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள ஓமலூர் முத்துநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (47) இவர் சேலம் அரசு டவுன் பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தேக்கம்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ்சை ஓட்டுனராக செல்வம் தேக்கம்பட்டிக்கு ஓட்டி சென்றார்.

    பின்னர் மீண்டும் சேலம் பஸ் நிலையம் வருவதற்காக தேக்கம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே பஸ்சை திருப்பிக் கொண்டிருந்தார்.

    தேக்கம்பட்டி அருகே உள்ள காட்டுவளவு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த விஜயராகவன் (51) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தவர், அரசு பஸ் டிரைவர் செல்வத்திடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார்.

    இந்த திடீர் தாக்குதால் காயம் அடைந்த செல்வம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் தாக்குதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த விஜயராகவனை இன்று காலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கைது செய்யப்பட்ட விஜயராகவன் சேலத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.
    • நேரு யுவகேந்திரா துணை இயக்குநர் திருநீலகண்டன் தலைமை தாங்கினார்.

    சுவாமிமலை:

    விவேகானந்தா கலாம் பவுண்டேஷன், கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவை இணைந்து "எனது மண், எனது தேசம்" விழிப்புணர்வு நிகழ்ச்சி கும்பகோணத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியல் நேரு யுவகேந்திரா துணை இயக்குநர் திருநீலகண்டன் தலைமை தாங்கினார். மத்திய மக்கள் தொடர்பக சென்னை மண்டல இயக்குனர் காமராஜர், கல்லூரி முதல்வர் யூஜின் அமலா, கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தராஜ், பூங்குழலி ஆகியோர் முன்னிலை வகித்தார்.விழாவை விவேகானந்தா கலாம் பவுண்டேசன் தலைவர் கணேசன் ஒருங்கிணைத்தார். இதில் கும்பகோணம் ரெட்கிராஸ் துணை தலைவர் ரோசரியோ, திருச்சி மக்கள் தொடர்பு அலுவலர்கள் தேவி பத்மநாபன், ரவீந்திரன், ஜெயகணேஷ், கும்பகோணம் ஒன்றிய வட்டார ஒருங்கிணைப்பா ளர் துரை.கார்த்திகேயன், கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மற்றும் என்.எஸ்.எஸ்., ஒய்.ஆர்.சி. மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • அண்ணா பல்கலைக்கழக தேர்வில் தங்கப்பதக்கம் பெற்ற முகமது சதக் கல்லூரி மாணவரை இயக்குநர்-ஆசிரியர்கள் பாராட்டினர்.
    • தங்க நாணயத்தை பரிசாக வழங்கினார்.

    கீழக்கரை

    அண்ணா பல்கலைக்கழக அளவில் கடல் சார் பொறியி யல் கல்லூரி மாணவர்க ளுக்கு இடையே நடைபெற்ற தேர்வில் தமிழக அளவில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரி மாணவர் சோன்ரபிரபு முதலாவதாக தேர்ச்சி பெற்று அண்ணா பல்கலை கழகம் அளவில் தங்கப் பதக்கம் பெற்றார்.

    அண்ணா பல்கலை கழகம் அளவில் முதல் இடத்தை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர் சோன்ர பிரபுவுக்கு கல்லூரி நிர்வாக இயக்குனர் பி.ஆர்.எல்.ஹாமிது இப்ராஹிம் மாணவரை பாராட்டி தங்க நாணயம் பரிசு வழங்கினார்.

    மேலும் அவர் கூறுகை யில், அண்ணா பல்கலை கழகம் அளவில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். எங்கள் கல்லூரியில் கடல்சார் பொறியியல் துறையில் பயின்று சாதனை புரிந்து தற்போது பெரிய கப்பல் நிறுவனத்தில் பணி யில் சேர்ந்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவர் மற்ற மாணவர்களுக்கு ஒரு உதார ணமாக திகழ்கிறார். அவரை அழைத்து பாராட்டுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.

    மாணவரின் தாயார் மாரியம்மாள், முகம்மது சதக் என்ஜினீயரிங் கல்லூரி சி.இ.ஒ. விஜயகுமார், கல்லூரி முதல்வர் செந்தில் குமார், கல்லூரி கடல்சார் பொறியியல் துறை தலைவர் பேராசிரியர் தங்கவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

    சாதனை மாணவர் சோன்ரபிரபு கூறும்போது, நான் அண்ணா பல்கலை கழகம் அளவில் தங்கப் பதக்கம் பெறுவதற்கு உறு துணையாக இருந்த முகம்மது சதக் பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர், சி.இ.ஓ.., கல்லூரி முதல்வர், துறை தலைவர், பேராசிரி யர்கள், என் பெற்றோர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    ×