search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    எம்.ஐ.டி கல்லூரியில் 2-நாள் தேசிய  கருத்தரங்கு
    X

    எம்.ஐ.டி கல்லூரியில் 2-நாள் தேசிய கருத்தரங்கு நடந்த போது எடுத்த படம்.

    எம்.ஐ.டி கல்லூரியில் 2-நாள் தேசிய கருத்தரங்கு

    • தற்கால தொழில் நுட்ப வளர்ச்சிகள்’ என்ற தலைப்பில் நடந்தது.
    • மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    இந்திய பொறியாளர் அமைப்பு, புதுச்சேரி மாநில மையம் மற்றும் மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி, இயந்திரவியல் துறை இணைந்து அகில இந்திய அளவிலான 2-நாள் கருத்தரங்கம் 'நானோ டெக்னாலஜியில் வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்கள் தற்கால தொழில் நுட்ப வளர்ச்சிகள்' என்ற தலைப்பில் நடந்தது.

    மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். இந்திய பொறியாளர் அமைப்பின் மாநில தலைவர் ராஜாராமன் வர வேற்றார். செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்கண் வாழ்த்துரை வழங்கினார்.

    விழாவில் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை துணைவேந்தர் மோகன் நானோ டெக்னாலஜியின் பல்வேறு வளர்ச்சிகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து பேசினார்.

    இந்திய பொறியாளர் அமைப்பின் அகில இந்திய இயந்திரவியல் துறை தலைவர் ரங்கா ரெட்டி நானோடெக்னாலஜி துறையில் இயந்திரவியல் தொழில்நுட்பத்தின் பங்கு மற்றும் எதிர்கால வாய்ப்புகளை விளக்கினார். முதல்நாள் கருத்தரங்கில், முன்னாள் இஸ்ரோ' முதுநிலை விஞ்ஞானி சிவசுப்ரமணியன், அப்துல் கலாம் மற்றும் இந்திய விண்வெளி தந்தை விக்ரம் சாராபாயுடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும், விண்வெளி துறையில் பல்வேறு தொழில்நுட்பங்கள், அவை உபயோகிக்கப்படும் இடங்கள் குறித்து பேசினார்.

    2-ம் நாள் கருத்தரங்கில், புதுச்சேரி பல்கலை பசுமை ஆற்றல்தொழில்நுட்ப துறை பேராசிரியர் ஏழுமலை மின்கலன்களில் நானோ தொழிநுட்பங்கள் மற்றும் அதன் வளர்ச்சிகள் குறித்து பேசினார்.

    புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலை மெக்கட் ரானிக்ஸ் துறை தலைவர் இளஞ்செழியன் சூப்பர் ஹைட்ரோபோபிக் நானோ பூச்சு தொகுப்பு மற்றும் பயன்பாடுகள் குறித்து பேசினார். கருத்தரங்க நிறைவு விழாவில், சிறந்த பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்பட்டது. இந்திய பொறியாளர் அமைப்பின் மாநில கவுரவ செயலாளர் திருஞானம் நன்றி கூறினார்.

    Next Story
    ×