என் மலர்
நீங்கள் தேடியது "workshop"
- பஞ்சாயத்து தலைவர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
- கமுதி பகுதியில் ஆறு, மற்றும் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றார்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி யூனியன் வளைய பூக்குளம் ஊராட்சியில் 53 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்க ளுக்கான குடிநீர் தேவை குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
இதில் கமுதி யூனியன் சேர்மன் தமிழ்செல்வி பேசுகையில், கமுதி யூனியனில் குடிநீர் தேவைக்கான ஆய்வுக் கூட்டம் நடத்திய கலெக்டரை பாராட்டு கிறேன். இந்த யூனியனில் நீர் ஆதாரங்களை தூர்வாரி மழைநீர் கடலில் கலக்காமல் சேமித்தாலே குடிநீர் பிரச்சினை தீரும்.கமுதி பகுதியில் ஆறு, மற்றும் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றார்.
மேலும் ஊராட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை கலெக்டரிடம் எடுத்துரைத்தனர். அனை வரும் காவிரி குடிநீர் திட்டத்தை அதிகாரிகள் முறையாக மராமத்து செய்வ தில்லை என்றும், உடைப்பு ஏற்பட்டுள்ள விவரத்தை தெரிவித்தாலும் கண்டுகொள்வதில்லை என்றும் சரமாரியாக குற்றம் சாட்டினர்.
இதில் பயிற்சி கலெக்டர், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, காவிரி குடிநீர் திட்ட பொறியா ளர்கள், கமுதி யூனியன் ஆணையாளர் மணி மேகலை, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரபாண்டியன், யூனியன் மேலாளர் ராமச்சந்திரன், ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் பெரியசாமி தேவர் உள்பட பலரும் தங்களது கருத்து களை தெரிவித்தனர். வளையபூக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் நன்றி கூறினார்.
- 200 எவர்சில்வர் பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன.
- கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம், அங்கேரிபாளையம், 15 வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதியில் 200 எவர்சில்வர் பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன.நாள் ஒன்றுக்கு வாணா சட்டி, தகட்டு பானை, செம்பு, டேக் ஷா, இட்லி சட்டி என 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாத்தி ரங்கள் உற்பத்தி செய்யப்ப டுகிறது. இவை தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளி ட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.இத்தொழிலை நம்பி 2000 தொழிலாளர்கள் உள்ளனர். சமீபத்தில் 16 சதவீதம் சம்பளத்தை உயர்த்தி புதிய சம்பள ஒப்பந்தம் நிறைவே ற்றப்பட்டது. எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்கம் சார்பில் சம்பள உயர்வை வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில வியாபா ரிகளுக்கு தெரிவிக்கும் வகையிலும், தற்போது தொழில் மந்த நிலையில் இருப்பதாலும் நேற்று முதல் 23-ந் தேதி வரை உற்பத்தியை நிறுத்து வது என அறிவி க்கப்பட்டது.
இதையடுத்து அனைத்து எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்களும் தங்கள் பட்டறைகளை மூடி உற்பத்தியை நிறுத்தினர். இதனால் உற்பத்தியின்றி பட்டறைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான பாத்திர உற்பத்தி பாதிக்கப்ப ட்டுள்ளது.
- குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மண்டல பயிலரங்கம் நாளை நடக்கிறது.
- காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
மதுரை
மதுரை தொழிலாளர் துறை இணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986-ன் கீழ் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான மாநில செயல் திட்டத்தினை செயல் படுத்துதல் தொடர்பாக ஒருநாள் பயிலரங்கம் நாளை 30-ந்தேதி மதுரை தங்கம் கிராண்ட் ஓட்டலில் நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தலைமை வகிக்கிறார். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயி லரங்கம் நடைபெறும். இந்தப் பயிலரங்கத்தில் மதுரை மற்றும் திருநெல் வேலி மண்டலத்தில் உள்ள அனைத்து தொழிலாளர் உதவி ஆணையர்கள் (அம லாக்கம்) மற்றும் மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள பிறதுறைகளான தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரகம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம், ஊரக மேம்பாடு, காவல் துறை, சமூகநலத்துறை, கல்வித்துறை, வருவாய் துறை, சமூக பாதுகாப்பு துறை, என்.ஜி.ஓ.க்கள் மற்றும் இதர அமைப்புகளை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி உரையாற்றினார்.
- பளு தூக்குதலின் விளைவாக ஏற்படும் உடல் மற்றும் மனநலம் பற்றிய கருத்துக்களை சிறப்பு விருந்தினர் உடற்பயிற்சியாளர் கந்தசாமி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பளு தூக்கும் மன்றம் மற்றும் ரத்த தான கழகம் இணைந்து நடத்திய 'பளு தூக்குதல் பயிற்சி பட்டறை' என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பளு தூக்கும் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உதயவேல் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி உரையாற்றினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். பளு தூக்குதலின் விளைவாக ஏற்படும் உடல் மற்றும் மனநலம் பற்றிய கருத்துக்களை சிறப்பு விருந்தினர் உடற்பயிற்சியாளர் கந்தசாமி மாணவர்களிடம் கலந்துரையாடினார். கல்லூரியின் உடற்பயிற்சி இயக்குனர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட் பளுதூக்குதலின் நன்மைகள் மற்றும் அதனால் உடல் மற்றும் மனம் எவ்வாறு தகுதி அடைகிறது என்பதை பற்றிய விஷயங்களை மாணவர்களிடம் கலந்துரையாடினார். ரத்த தானம் செய்பவர்கள் மன்றத்தின் இயக்குனர் பேராசிரியர் மோதிலால் தினேஷ் மாணவர்களை வழி நடத்தினார். பல்வேறு துறைகளை சேர்ந்த திரளான மாண வர்கள் கலந்து கொண்டார்கள். முடிவில் பளு தூக்கும் மன்றத்தின் இயக்குனர் பேராசிரியர் தாவீது ராஜா நன்றி கூறினார்.
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் கடலூர் போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. பணிமனை தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார்,
கடலூர்:
கடலூர் முதல் சென்னை வரை செல்லும் சொகுசு பஸ்களில் நடத்துனர் இல்லாமல் செல்வதை கண்டித்தும், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வலியுறுத்தியும் ,போக்குவரத்து துறையில் காலி பணியிடங்களை நிரப்பிட கோரியும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் கடலூர் போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. பணிமனை தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். இதில் சம்மேளன சிறப்பு தலைவர் பாஸ்கர், பணிமனை நிர்வாகி ராஜ், முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டன.
- ராஜரத்தினம் கல்லூரியில் பயிலரங்கம் நடந்தது.
- மாணவிகள் 184 பேர் கலந்து கொண்டு பயனடைத்தனர்.
சிவகாசி
சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறையினர், ''பதின்ம வயதினருக்கான இடர்பாடுகளும் தீர்வுகளும்'' என்ற தலைப்பில் பயிலரங்கத்தை நடத்தினர். கல்லூரி தலைவர் திலகவதி ரவீந்திரன், செயலர் அருணா அசோக் ஆகியோர் நிகழ்வின் புரவலர்களாக வழி நடத்தினர். முதல்வர் பழனீசுவரி தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் பொன்னி வரவேற்றார்.
தமிழ்த்துறைப்பேராசிரியர் கவிதா, முதல் அமர்விற்கான சிறப்பு விருந்தினர் மதுரை ஐகோர்ட்டு வக்கீல் முனியம்மாளை அறிமுகப்படுத்தினார். அவர் ''மகளிருக்கான சட்டங்கள்'' என்ற தலைப்பில் பேசினார்.
தமிழ்த்துறைப்பே ராசிரியர் பத்மபிரியா, 2-ம் அமர்விற்கான சிறப்பு விருந்தினர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குநரக வணிக மேலாண்மைத்துறை உதவிப்பேராசிரியர் இளையராஜாவை அறிமுகப்படுத்தினார். அவர் ''உள்ளங்கையில் வாழ்க்கை'' என்ற தலைப்பில் பேசினார். 3-ம் அமர்வில் சிவகாசி, ஹனுமந்தா அக்குபஞ்சர் மற்றும் இயற்கை மருத்துவர் பைரவனை தமிழ்த்துறைப்பேராசிரியர் தனலட்சுமி அறிமுகப்ப டுத்தினார்.
அவர் "உடல்நலமும் மனநலமும்'' என்ற தலைப்பில் பேசினார். தமிழ்த்துறைத் தலைவர் பொன்னி நன்றி கூறினார். இதில் முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறையைச் சேர்ந்த 17 பேராசிரியர்கள், அனைத்துத்துறையைச் சேர்ந்த மாணவிகள் 184 பேர் கலந்து கொண்டு பயனடைத்தனர்.
- கடையநல்லூர் ரஹ்மானியபுரத்தை சேர்ந்த சுலைமான் அட்டை குளம் நெடுஞ்சாலை பகுதியில் ஒர்க் ஷாப் வைத்துள்ளார்.
- தீ விபத்தில் டிராக்டர் . கார் ஆகியவை முழுமையாக எரிந்து சாம்பல் ஆனது. அருகில் நின்ற லாரியின் பிற்பகுதி முழுமையாக எரிந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் ரஹ்மானியபுரம் 9-வது தெருவை சேர்ந்தவர் சுலைமான். இவர் கடையநல்லூர் அட்டை குளம் நெடுஞ்சாலை பகுதியில் நான்கு சக்கர வாகனம் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் வைத்துள்ளார்.நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார் .
அதன் பின்னர் இரவு காலை 11 மணிக்கு ஒர்க் ஷாப்பில் இருந்து அதிகமான புகைமூட்டத்துடன் தீ பற்றி எரிந்தது. கார், டிராக்டர் டீசல் டேங்க் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது .
இதனைப்பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட உதவி அலுவலர் சுரேஷ் மேற்பார்வையில் கடையநல்லூர் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் ஜெயராம் தலைமையில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் செங்கோட்டை யில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு துரிதமாக தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள பெட்ரோல் பல்க் மற்ற வேலைக்கு வந்த புதிய டிராக்டர்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
தீ விபத்தில் டிராக்டர் . கார் ஆகியவை முழுமையாக எரிந்து சாம்பல் ஆனது. அருகில் நின்ற லாரியின் பிற்பகுதி முழுமையாக எரிந்தது. விபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது கார் பேட்டரி ஷாட் மூலம் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒர்க்ஷாப்பில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
- இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை அண்ணாநகர் ஆவின் அலுவலகம் அருகே கார் ஒர்க்ஷாப் செயல்பட்டு வருகிறது. அங்கு கார் ஒன்றை ஊழியர்கள் இன்று பழுது பார்த்துக் கொண்டி ருந்தனர். அப்போது அந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த தீ விபத்து குறித்து தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். ஆனால் அதற்குள் அந்த கார் முற்றிலுமாக எரிந்து விட்டது.
கார் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடந்தது.
- இந்த பயிலரங்கில் 140 பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் உள்தர உத்தரவாத அமைப்பின் சார்பில் சிறந்த கற்பித்த லுக்கான பயிலரங்கம் நடந்தது. முதல்வர் பாலமுருகன் தலைமையு தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரியின் மேலாண்மை துறை பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், "மாணவர்களுக்கு பிடித்த வகையில் கற்பிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
மாணவர்களுக்கு நனவு மனம், நனவிலி மனம் ஆகிய 2 வகையான மனநிலை உள்ளது. எதிர்மறையாக பேசக்கூடிய வார்த்தைகள் அவர்களது நனவிலி மனதில் பதிவாகி சிந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே மாணவர்களிடம் பேசும் போது நேர்மறையான வார்த்தைகளை பேச வேண்டும். வகுப்பில் சுற்றுச்சூழல் சார்ந்த நடப்பியல் நிகழ்வு களை சான்று காட்டி கற்பிக்க வேண்டும். பாடத்தைத் திணிக்காமல் அவர்களாகவே விரும்பிப் படிக்கும் அளவுக்கு கற்பிக்க வேண்டும். கற்பித்தல் ஒரு கலை ஆகும். வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்றார்.
உள்தர உத்தரவாத அமைப்பின் ஒருங்கி ணைப்பாளரும், கணினி அறிவியல் துறைத் தலை வருமான பிரியா வரவேற்றார்.
உயிரித்தொழில் நுட்ப வியல் மற்றும் தாவரவியல் துறைகளின் தலைவர் சுஜாதா நன்றி கூறினார். இந்த பயிலரங்கில் 140 பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
- ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடும் நெறிமுறைகள் மற்றும் வெளியிடும் தளங்கள் என்ற தலைப்பில் மாணவிகளுக்கு ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது
- கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி நூலகர் ஜெ.ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் தேசிய மின்நூலக அமைப்பின் சார்பில், "ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடும் நெறிமுறைகள் மற்றும் வெளியிடும் தளங்கள்" என்ற தலைப்பில் மாணவிகளுக்கு ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நூலகர் உண்ணாமலை வரவேற்று பேசினார். கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி நூலகர் ஜெ.ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அனைத்து முதுகலை மாணவிகளும் கலந்துகொண்டனர். முதுகலை ஆங்கிலத்துறை மாணவிகள் எல்.எலிசபெத் பெர்சியால், ஜெ.ஹரிவர்ஷினி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். பொருளியல்துறை தலைவர் மற்றும் பேராசிரியை எம்.சண்முகவல்லி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேசிய மின்நூலக அமைப்பின் உறுப்பினர்களான பொருளியல் துறை பேராசிரியை எம்.சண்முகவல்லி, நூலகர் உண்ணாமலை, வணிக நிர்வாகிவியல் பேராசிரியை தெய்வ வீரலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.