என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலாமாண்டு மாணவர்களுக்கு பயிற்சி பட்டறை
    X

     முதலாமாண்டு மாணவ, மாணவியர்களுக்கான பயிற்சி பட்டறையில் சிறப்பு விருந்தினருக்கு முஹம்மது சதக் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் ஹமீது இபுராஹிம் நினைவு பரிசு வழங்கினார்.

    முதலாமாண்டு மாணவர்களுக்கு பயிற்சி பட்டறை

    • கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு பயிற்சி பட்டறை முகாம் நடந்தது.
    • முன்னதாக வணிகவியல் துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

    கீழக்கரை

    கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனைத்து முதலாமாண்டு மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்ற வழிகாட்டுதழும் அறிவுரை பகர்தலும் என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது. முஹம்மது சதக் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் ஹமீது இபுராஹிம் முன்னிலையில் இந்த பயிற்சி நடந்தது. கல்லூரி முதல்வர் சதக்கத்துல்லா தலைமை தாங்கினார்.

    தூத்துக்குடி மாவட்ட உயிர் மருத்துவ பொறியாளர் மற்றும் எழுத்தாளருமான முகம்மது யூசுப் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-

    முதலாமாண்டு மாணவ, மாணவிகள் தங்களுடைய கல்லூரி படிப்பை முடித்தவுடன் வேலை தேடி செல்பவர்களாக இல்லாமல் வேலை வாய்ப்பை உருவாக்க கூடியவர்களாக இருக்க வேண்டும். மேலும் கல்லூரி மாணவ-மாணவிகள் வாழ்க்கையில் வளம் பெற ஆசிரியர் பங்களிப்பு மட்டுமல்லாது பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகளை உற்று நோக்க வேண்டும்.

    இன்றைய இளம் தலைமுறையினர் ஜாதிய பாகுபாடுகளை களைந்து வேற்றுமையில் ஒற்றுமைக் காண ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பங்கு மிக அவசியமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் பள்ளி முதல்வர் நந்தகோபால் வாழ்த்தி பேசினார். முன்னதாக வணிகவியல் துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். ஆங்கிலத் துறை தலைவர் சீனி சுல்தான் இபுராஹிம் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் மற்றும் தாளாளர் முகம்மது யூசுப், செயலர் ஷர்மிளா மற்றும் இயக்குநர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    Next Story
    ×