என் மலர்
செய்திகள்

குமரியில் ஒர்க்ஷாப்-பள்ளியின் பூட்டை உடைத்து கொள்ளை
நாகர்கோவில்:
கொல்லங்கோடு பகுதியில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. நேற்று வழக்கம் போல் பள்ளியை பூட்டி விட்டு சென்றனர். பின்னர் காலையில் பள்ளியை திறக்க வந்த போது பள்ளியில் உள்ள ஆசிரியர் ஓய்வு அறை மற்றும் அலுவலக அறை கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
மேலும் சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் மணிகண்டன் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஞானதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பள்ளியில் இருந்த 2 ஒலிபெருக்கி மற்றும் விளையாட்டு உபகரணங்களை கொள்ளையடித்திருப்பது தெரிய வந்தது. கைரேகை நிபுணர்களும் அங்கு வர வழைக்கப்பட்டனர். அவர்கள் பூட்டு உடைக்கப்பட்ட இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் சம்பவம் குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல் காரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது58). இவர் மொட்டவிளை பகுதியில் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவர் ஒர்க் ஷாப்பை பூட்டி விட்டு சென்றிருந்தார்.
பின்னர் மறுநாள் காலையில் ஒர்க்ஷாப் திறக்க வந்த போது ஒர்க்ஷாப்பின் தகவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஒர்க்ஷாப் உள்ளே சென்று பார்த்த போது அங்கு நின்றிருந்த கார்களிள் இருந்த ரேடியோ செட், ஷாக்கி, லைட் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் ராமகணேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.






