search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் குறித்த  பணி முன்னேற்ற ஆய்வுக்கூட்டம்
    X

    சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் சுரேஷ்குமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.

    சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் குறித்த பணி முன்னேற்ற ஆய்வுக்கூட்டம்

    • சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் குறித்த பணி முன்னேற்ற ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • பயனாளிகள் தேர்வில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனைகளை இயக்குநர் வழங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் தொடர்பான பணி முன்னேற்ற ஆய்வுக்கூட்டம் சென்னை சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

    இதில் 2021-22-ம் கல்வியாண்டில் சிறுபான்மையின மாணவ-மாணவிகளின் கல்வி உதவித்தொகை விவரங்கள், வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு பள்ளி வாசல்களில் பணிபுரியும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் குறித்த திட்டங்கள், சிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்கள், தமிழக அரசு சிறுபான்மையின சமூக மக்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப் படுத்தப்படும் நலத்திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

    பின்னர் பயனாளிகள் தேர்வில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனைகளை இயக்குநர் வழங்கினார்.

    முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கம் மற்றும் கிறிஸ்தவ பெண்கள் உதவும் சங்கங்களின் பயனாளிகளை நேரடியாக கள ஆய்வு செய்து பயனாளிகளிடம் சங்கங்களின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் மூலம் பயனடைந்த பயனாளிகளிடம் சிறுபான்மையின நலத்திட்டங்களால் பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்த விவரத்தை கேட்டறிந்து, ஆய்வு செய்தார்.இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஞானவேல் உட்பட மாவட்ட முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்க கவுரவச் செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×